ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம்

ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம் (ACU) என்பது பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் நோக்கில் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான பொருளாதார, சமூக ஆணைக் குழுவின் (ESCAP) முன்முயற்சியால் 1974 டிசம்பர் 9 அன்று ஈரானில் உள்ள டெஹ்ரானில் அமைக்கப்பட்ட ஆசிய ஒன்றியம் ஆகும்.[1] சாதாரணமாக அந்நியச் செலாவணி பரிமாற்றங்களில் கடைப்பிடிக்கப்படும் அதேமுறையில் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகள் வகை ஒன்றின் அனைத்து பரிமாற்றங்களும் ஆசிய கணக்குத் தீர்வு ஒன்றியத்தினால் கையாளப்படுகின்றன.[2]

ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம்
(Asian Clearing Union)
தலைமையிடம்தெஹ்ரான், ஈரான்
வகைகணக்குத் தீர்வக ஒன்றியம்
பொருளாதார உறுப்பினர்கள்ஒன்பது
தலைவர்கள்
• ஏசீயூ அவைத்தலைவர்
 பூட்டான்
உருவாக்கம்1974 ஆம் ஆண்டு

நோக்கம் தொகு

  • பங்குபெறும் நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை ஊக்குவித்தல்
  • அந்நியச் செலாவணி இருப்புகளையும் மாற்றுக்கட்டணங்களையும் சிக்கனமாக பயன்படுத்தல்
  • பரஸ்பர அடிப்படையில் பரிவர்த்தனைகளை ஏற்படுத்த ஒரு தீர்வு காணுதல்

ஆகியன இவ்வொன்றியத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

உறுப்பினர்கள் தொகு

ஈரான், இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேப்பாளம், பாகிஸ்தான், இலங்கை, மியான்மார் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகளும், பணம் சார் ஆணையுரிமங்களும் ஆசிய கணக்குத் தீர்வு ஒன்றியத்தின் உறுப்பினர்கள் ஆவர்.

நாடு மத்திய வங்கி ஆண்டு
  வங்காளதேசம் வங்களாதேச வங்கி 1974
  பூட்டான் ராயல் மானிட்டரி அதாரிட்டி ஆஃப் பூடான்(Royal Monetary Authority of Bhutan)] 1999
  இந்தியா இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) 1974
  ஈரான் ஈரான் இஸ்லாமியக் குடியரசு மத்திய வங்கி (Central Bank of the Islamic Republic of Iran) 1974
  மாலைத்தீவுகள் மாலத்தீவுகள் நாணயஞ் சார்ந்த ஆணையம் (Maldives Monetary Authority) 2009
  மியான்மர் மியான்மர் மத்திய வங்கி (Central Bank of Myanmar) 1977
  நேபாளம் நேபாள ராஷ்டிரீய வங்கி (Nepal Rastra Bank) 1974
  பாக்கித்தான் பாக்கிஸ்தான் ஸ்டேட் வங்கி (State Bank of Pakistan) 1974
  இலங்கை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) 1974

தீர்வுக்குரிய அடிப்படை பண அலகு தொகு

ஆசிய பண அலகு என்பது ஆசிய கணக்குத் தீர்வு ஒன்றியத்தின் கணக்குக்குரிய பொது அலகாகும். அது ஏசீயூ டாலர் மற்றும் ஏசீயூ யூரோ என்ற மதிப்பிலக்கங்களில் ஒரு அமெரிக்க டாலருக்கும், ஒரு யூரோவுக்கும் முறையே ஈடானதாகும்.[3] பணம் செலுத்தும் அனைத்துச் செயல்முறைகளிலும், ஆசிய பண அலகே இலக்க மதிப்பாகக் குறிப்பிடப்பட வேண்டும். அத்தகைய செயல் முறைகளின் தீர்வுகள் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களால், ஏசீயூ டாலர் (ACU dollar) கணக்குகளின் வழிச் செயல்பாடுகளால் முடிவு செய்யப்படலாம்.

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. "ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம்". asianclearingunion. பார்க்கப்பட்ட நாள் 01 சனவரி 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம்". இந்திய ரிசர்வு வங்கி. பார்க்கப்பட்ட நாள் 01 சனவரி 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Definition of 'Asian Currency Unit - ACU'". investopedia. பார்க்கப்பட்ட நாள் 01 சனவரி 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள் தொகு