ஆசீஷ் நேரா

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

ஆசீஷ் நேரா (Ashish Nehra (pronunciation இந்தி: आशीष नेहरा;, பிறப்பு: ஏப்ரல் 29, 1979, தில்லி) முன்னாள் இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார்.[1] இடதுகை விரைவுப் பந்து வீச்சாளராகிய நேரா 1999ஆம் ஆண்டு பன்னாட்டு அளவில் முதலில் இந்தியத் துடுப்பாட்ட அணியில் இடம்பெற்றார்.[1] தமது முதல் தரத் துடுப்பாட்டத்தைச் சொந்த ஊரான தில்லிக்காக 1997/98 பருவம் முதல் ஆடி வருகிறார்.[1] முதன்முறையாகத் தேர்வுத் துடுப்பாட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொழும்பில் 1999ஆம் ஆண்டில் விளையாடத் தொடங்கினார்.[1] முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தை சிம்பாப்வேயுடன் 2001ஆம் ஆண்டு அராரேயில் துவங்கினார்.[1] தமது முதல் தேர்வுப் போட்டியில் சில பந்துகளிலேயே மாவன் அத்தப்பத்தை வீழ்த்தினார்.[2] அதேபோல ஒருநாள் துடுப்பாட்டத்தின் முதல் ஆட்டத்திலும் இரண்டாவது பந்திலேயே அலிஸ்டர் கேம்பெல்லை வீழ்த்தினார்.[3] தென்னாபிரிக்காவில் நடந்த 2003 உலகக்கிண்ணத்தில் விளையாடி இங்கிலாந்திற்கு எதிராக 23 ஓட்டங்களுக்கு இலக்குகளை வீழ்த்தினார்.[4] பிற உலகக்கிண்ண ஆட்டங்களிலும் சிறப்பாகப் பந்து வீசினார்.

ஆசீஷ் நேரா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஆசீஷ் நேரா
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகம்
பன்னாட்டுத் தரவுகள்
தேர்வு அறிமுகம் (தொப்பி [[{{{country}}} தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்|17]])24 பிப்ரவரி 1999 எ. இலங்கை
கடைசித் தேர்வுஏப்ரல் 13 2004 எ. பாக்கித்தான்
ஒநாப அறிமுகம் (தொப்பி [[{{{country}}} ஒநாப துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்|117]])21 சூன் 2001 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாபசனவரி 21 2011 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப சட்டை எண்64
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1997–நடப்பில்புது தில்லி துடுப்பாட்ட அணி
2008மும்பை இந்தியன்ஸ்
2009–2010டெல்லி டேர்டெவில்ஸ்
2011-நடப்பில்புனே வாரியர்ஸ் இந்தியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து ஒ.ப.து மு.து ப. அ
ஆட்டங்கள் 17 117 78 174
ஓட்டங்கள் 77 140 515 341
மட்டையாட்ட சராசரி 5.50 6.08 8.30 8.31
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 19 24 43 24
வீசிய பந்துகள் 3447 5609 14829 8406
வீழ்த்தல்கள் 44 154 257 217
பந்துவீச்சு சராசரி 42.40 31.56 29.87 32.13
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 2 12 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 4 n/a
சிறந்த பந்துவீச்சு 4/72 6/23 7/14 6/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 17/– 24/– 25/–
மூலம்: ESPNcricinfo, சனவரி 22 2011

சர்வதேச போட்டிகள் தொகு

1999 ஆம் ஆண்டில் கொழும்பில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். தனது முதல் போட்டியின் துவக்கத்திலேயே அந்த அணித் தலைவரன மாவன் அத்தப்பத்து இலக்கினைக் கைப்பற்றினார். ஆனால் அவரால் அதன் பின் அந்தப் போட்டியில் மற்ற இலக்குகளை வீழ்த்த இயலவில்லை. 2001 ஆம் ஆண்டில் ஹராரேவில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். தனது முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் அலிஸ்டர் கம்பெல்லின் இலக்கினைக் கைப்பற்றினார். ஆனால் அவரால் அதன் பின் அந்தப் போட்டியில் மற்ற இலக்குகளை வீழ்த்த இயலவில்லை. தென்னாப்பிரிக்கவில் நடைபெற்ற 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் விளையாடினார். இந்தத் தொடரில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 23 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இலக்குகளை வீழ்த்தினார். இதுதான் அவரின் மிகச் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் பந்துவீச்சு ஆகும். இந்தத் தொடரின் மற்ற போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசினார்.

தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளை விட ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் சிறப்பாகப் பந்துவீசினார். ஒருநாள்போட்டிகளில் 144 இலக்குகளை வீழ்த்தியுள்ளார்.ஆனால் இவரின் பந்துவீச்சு சராசரியானது 30.54 ஆக உள்ளது. இது இந்திய அணியின் சக விரைவு வீச்சாளர்களான ஜாகிர் கான், இர்பான் பதான்மற்றும் அஜித் அகர்கர் ஆகியோரோடு ஒப்பிடுகையில் இவரின் சராசரி அதிகமாக உள்ளது. இவர்கள் அனைவரும் 30 க்கும் குறைவாகவே சராசரி வைத்துள்ளனர். இவருக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் புதுமுக விரைவு வீச்சளர்களான முனாஃவ் பட்டேல், இஷாந்த் ஷர்மா மற்றும் ஆர் பி சிங் ஆகியோரின் வருகையும் அணியில் இவருக்கான இடத்தை சிக்கலாக்கின. பின் காயங்கள் குணமாகி நான்கு வருடங்களுக்குப் பிறகு 2009 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். ஜாகிர் கானுக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு விளையாடும் வாய்ய்ப்பு கிடைத்தது.

இந்தியன் பிரீமியர் லீக் தொகு

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதல்பருவத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.[5]மே 7, 2008 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 இலக்குகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். பின் 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் சார்பாக விளையாடினார். 2011 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் 3.91 கோடி ரூபாய் மதிப்பில் இவரை புனே வாரியர்சு இந்தியா அணி ஏலத்தில் எடுத்தது.

பயிற்சியாளர் தொகு

2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்அணியின் தலைமைப் பயிற்சியாளரக இவர் நியமனம் செய்யப்பட்டார்.[6]

ஒருநாள் போட்டியில் 5 இலக்குகள் தொகு

# எண்ணிக்கை போட்டிகள் எதிரணி இடம் நகரம் நாடு ஆண்டு
1 6/23 33   இங்கிலாந்து கிங்க்ஸ்மெட் துடுப்பாட்ட மைதானம் டர்பன் தென்னாப்பிரிக்கா 2003
2 6/59 65   இலங்கை அஸ்கிரியா துடுப்பாட்ட மைதானம் கண்டி இலங்கை 2005

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "ஆசீஷ் நேரா (ஆங்கில மொழியில்)". ஈ. எசு. பி. என். கிரிக்கின்வோ. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 14, 2012.
  2. "இலங்கை எதிர் இந்தியா (ஆங்கில மொழியில்)". ஈ. எசு. பி. என். கிரிக்கின்வோ. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 14, 2012.
  3. "சிம்பாவே எதிர் இந்தியா (ஆங்கில மொழியில்)". ஈ. எசு. பி. என். கிரிக்கின்வோ. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 14, 2012.
  4. "இங்கிலாந்து எதிர் இந்தியா (ஆங்கில மொழியில்)". ஈ. எசு. பி. என். கிரிக்கின்வோ. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 14, 2012.
  5. "Nehra for Mumbai Indians, Mishra for Delhi". கிரிக்இன்ஃபோ. 14 March 2008. Archived from the original on 17 March 2008. பார்க்கப்பட்ட நாள் 21 April 2008.
  6. "IPL 2018: Gary Kirsten, Ashish Nehra Join RCB Coaching Team" (in en). The Quint. https://www.thequint.com/sports/cricket/gary-kirsten-ashish-nehra-rcb-coaches-ipl-2018. 

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசீஷ்_நேரா&oldid=3728025" இலிருந்து மீள்விக்கப்பட்டது