ஆதித்தர்கள்

ஆதித்தர்கள் என்பது வேதகாலத்தில் சிறப்பாக வணங்கப்பட்ட ஒரு கடவுளர் (தேவர்) குழுவைக் குறிக்கின்றது. இந்த அண்டத்தையும், மனித சமுதாயத்தையும் கட்டுப்படுத்துகின்ற விதிகளுக்குக் கொடுக்கப்பட்ட உருவகங்களே ஆதித்தர்கள் என இந்துத் தத்துவவியலாளர்கள் கூறுகின்றனர். காசிபர் - அதிதி இணையர்களின் புதல்வர்கள் ஆதித்யர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

நடுவில் சூரிய பகவானும், மேல் பகுதியில் பிற 11 ஆதித்தர்கள் கொண்ட சிற்பம், காலம் 11ம் நூற்றாண்டு
சூரிய நமஸ்காரத்தின் போது செய்யப்படும் 12 வகையான ஆசனங்களைக் காட்டும் சிற்பம், இடம், இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்,[1] தில்லி

ஆதித்தர்களின் எண்ணிக்கை என்றும் ஒரேயளவாகவே இருந்ததாகத் தெரியவில்லை. வேதங்களில் இவர்களை பற்றிய குறிப்புகள் குறைவாகவே உள்ளன. இந்துக்களின் மிகப் பழைய வேதமான ரிக் வேதம் ஆறு ஆதித்தர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. பிராமணங்கள் எட்டு வரையான ஆதித்தர்களைப் பற்றிக் கூறுகின்றன. இதற்குப் பின்வந்த நூல்களில் கூடிய அளவாகப் பன்னிரண்டு தேவர்கள் ஆதித்தர் குழுவில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். விஷ்ணு புராணத்தின் படி 12 ஆதித்தியர்கள் உள்ளனர். மற்ற புராணங்களில் யமன், வருணன், இந்திரன் போன்றோரும் ஆதித்யர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் பின்வருமாறு:

  1. சூரிய பகவான்
  2. அம்சன்
  3. ஆர்யமான்
  4. பாகன்
  5. மித்திரா
  6. பூஷண்
  7. சாவித்திரன்
  8. துவஷ்டா
  9. இந்திரன்
  10. வருணன்
  11. யமன்
  12. விஷ்ணு

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்தர்கள்&oldid=3755758" இலிருந்து மீள்விக்கப்பட்டது