ஆந்தாலியா

துருக்கிய நகரம்

ஆந்தாலியா (Antalya) துருக்கியின் ஐந்தாவது மக்கள்தொகை மிக்க நகரமாகும். இதே பெயருள்ள மாகாணத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. அனத்தோலியாவின் வளமிக்க தென்மேற்கு கடலோரத்தில் அமைந்துள்ள ஆந்தோலியாவின் எல்லையாக தாரசு மலைத்தொடர் உள்ளது. ஆந்தோலியா பெருநகரப் பகுதியில் ஒரு மில்லியனுக்கும் கூடுதலான மக்கள் வசிக்கின்றனர். [2][3]

ஆந்தாலியா
அத்தாலியா
பெருநகர நகராட்சி
மேல் இடதிலிருந்து வலச்சுற்றாக: டியூடன் அருவி, யீவ்மினாரே மசூதி, கொன்யால்டி, இத்ரிலிக் கோபுரம், அத்ரியனின் வாயில், இரவு நேரத்தில் பலேசு பூங்கா.
மேல் இடதிலிருந்து வலச்சுற்றாக: டியூடன் அருவி, யீவ்மினாரே மசூதி, கொன்யால்டி, இத்ரிலிக் கோபுரம், அத்ரியனின் வாயில், இரவு நேரத்தில் பலேசு பூங்கா.
ஆந்தாலியா is located in துருக்கி
ஆந்தாலியா
ஆந்தாலியா
ஆந்தாலியாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 36°54′N 30°41′E / 36.900°N 30.683°E / 36.900; 30.683
நாடு துருக்கி
வட்டாரம்நடுநிலக்கடல் வட்டாரம்
மாகாணம்ஆந்தாலியா மாகாணம்
அரசு
 • வகைபெருநகர நகராட்சி
 • நகரத்தந்தைமென்டரெசு துரெல் (ஏகேபி)
பரப்பளவு
 • நகர்ப்புறம்1,417 km2 (547 sq mi)
ஏற்றம்30 m (100 ft)
மக்கள்தொகை (2014)[1]
 • அடர்த்தி478/km2 (1,240/sq mi)
 • நகர்ப்புறம்1,203,994
 • பெருநகர்2,222,562
நேர வலயம்தொலை கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு07x xx
தொலைபேசி குறியீடு0242
வண்டி உரிம எண்07
இணையதளம்www.antalya.bel.tr
www.antalya.gov.tr

இன்று ஆந்தாலியா நகரமாக விளங்கும் இவ்விடத்தில் முதன்முதலாக பொ.மு 200இல் பெர்காமோன் இராச்சியம் குடியிருப்பை அமைத்தது. விரைவிலேயே இது உராமானியர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. அவர்களது ஆட்சியில் அத்ரியனின் வாயில் போன்ற புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. சுற்றுப்புற நகர்களும் வளரத்தொடங்கின. பல முறை கைமாறிய இந்த நகரம் 1207இல் பைசாந்தியப் பேரரசு வசமும் 1391இல் உதுமானியப் பேரரசு வசமும் இருந்தது.[4] உதுமானியராட்சியில் அடுத்த 500 ஆண்டுகளுக்கு அமைதியும் நிலைத்தத்தன்மையும் நிலவியது. முதலாம் உலகப் போருக்குப் பின்னர் இது இத்தாலியரின் மேற்பார்வைக்கு மாற்றப்பட்டது. துருக்கிய விடுதலைப் போரின் விளைவாக புதிய சுதந்திர துருக்கியால் மீளவும் கைப்பற்றப்பட்டது.

ஆந்தாலியா துருக்கியின் பெரும் பன்னாட்டு கடலோர மகிழிடமாகும். நில நடுக்கடற்கரையோரத்தில் துருக்கிய ரிவேரா எனப்படும் இங்கு சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு அரசு பல மேம்பாட்டுத் முனைப்புகளை மேற்கொண்டு வருகிறது. 2014ஆம் ஆண்டில் 12.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இந்த நகருக்கு வந்து சென்றுள்ளனர்.[5]

ஆந்தாலியாவில் 2015ஆம் ஆண்டு ஜி-20 மாநாடும் 2016 பன்னாட்டு வணிக கண்காட்சியும் (எக்ஸ்போ 2016) நடைபெற்றுள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. "Turkey: Major cities and provinces". citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 2015-02-08.
  2. Turkish Statistical Institute 2011 Census (Büyükşehir belediyeleri ve bağlı belediyelerin nüfusları) – 2011 பரணிடப்பட்டது 19 அக்டோபர் 2012 at the வந்தவழி இயந்திரம்
  3. "2011". Citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 2014-06-24.
  4. "History of Antalya". Lonely Planet.
  5. "Turkey's Tourism Renaissance".

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Antalya
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்தாலியா&oldid=2749744" இலிருந்து மீள்விக்கப்பட்டது