ஆன்டி ரூபின்

ஆன்ட்ரு ஈ. ரூபின்(ஆங்கிலம்:Andrew E. Rubin) ஆண்ட்ராய்டு இங்க்(Android Inc.,) மற்றும் டேஞ்சர் இங்க்(Danger Inc.,) ஆகிய இரண்டு நிறுவனங்களின் துணை நிறுவனர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியும் ஆவார். மேலும், இவர் மார்ச் 2013 வரை கூகிளின் நகர்பேசி மற்றும் எண்ணிமத் தரவு பிரிவிற்கு துணைத் தலைவராகவும் இருந்தார், அப்பொழுது அவர் நுண்ணறிபேசிகளில் இயங்குதளமாக இருக்கும் ஆண்ட்ராய்டின் உருவாக்கம் மற்றும் மேம்பாட்டையும் கவனித்துவந்தார். இவர் தனது பெயரில் 4 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையைக் கொண்டுள்ளத்தோடு, 100 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடையவர் எனவும் நம்பப்டுகிறது[1]. மார்ச் 13, 2013-ல் லாரி பேஜ் தனது வலைப்பூவில் ரூபின் தனது தற்போதைய ஆண்ட்ராய்டு பொறுப்பகளிலிருந்து விடுவிக்கப்பட்டு கூகிளின் மற்ற திட்டங்களை கவனிப்பார் என அறிவித்தார்[2]. தற்போது ரூபினின் பொறுப்புகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த கணிணியில் வல்லுனரான சுந்தர் பிச்சையிடம் தரப்பட்டுள்ளது[3].

ஆன்டி ரூபின்
பிறப்பு13 மார்ச்சு 1963 (அகவை 60)
Chappaqua
படித்த இடங்கள்
  • Horace Greeley High School
பணிகணினி விஞ்ஞானி
வேலை வழங்குபவர்
ஆன்டி ரூபின் 2008-ல் ஜப்பானில் நடந்த கூகுளின் உருவாக்குனர் நாளில் (Google Developer Day)

மேற்கோள்கள் தொகு

  1. "ஆன்டி ரூபினின் சொத்து மதிப்பு". பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 17, 2013.
  2. "லாரி பேஜ்ஜின் அறிவிப்பு". பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 17, 2013.
  3. "ஆன்டி ரூபினுக்குப் பிறகு சுந்தர் பிச்சை". பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 17, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்டி_ரூபின்&oldid=3455968" இலிருந்து மீள்விக்கப்பட்டது