ஆம்ஸ்டர்டேம் பல்கலைக்கழகம்

ஆம்ஸ்டர்டேம் பல்கலைக்கழகம் (University of Amsterdam) நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டமில் உள்ளது. இது பெரியதும் குறிப்பிடத்தக்க ஆய்வுப் பல்கலைக்கழகமும் ஆகும். நெதர்லாந்தில் நிறுவப்பட்ட மிகப் பழைய கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்று.[1] மானுடவியல், சமூகவியல், பொருளாதாரம், அறிவியல், சட்டம், மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட துறைகளைக் கொண்டுள்ளது. டச்சு, ஆங்கில மொழிகளுக்கும் படிப்புகள் உண்டு. இது ஐரோப்பிய ஆய்வுப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளது.

ஆம்ஸ்டர்டேம் பல்கலைக்கழக கட்டடங்கள்.

இந்த பல்கலைக்கழகம் ஆறு நோபல் பரிசு வெற்றியாளர்களையும், ஐந்து நெதர்லாந்து பிரதமர்களையும் உருவாக்கியுள்ளது.[2]

The Bushuis building
The Binnengasthuis area
The Oost-Indisch Huis building
The Allard Pierson Museum
The Artis Library

மேற்கோள்கள் தொகு

  1. Jacob Belzen (2010). Towards Cultural Psychology of Religion: Principles, Approaches, Applications. பக். 215. https://archive.org/details/towardsculturalp00belz. 
  2. "Academic awards". University of Amsterdam. Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-06-27.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Universiteit van Amsterdam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.