ஆயில்யம் திருநாள் இராமவர்மன்

திருவாங்கூர் மகாராசா

ஆயில்யம் திருநாள் இராமவர்மன் (Ayilyam Thirunal Rama Varma) (1832–1880) 1860 முதல் 1880 வரை இந்தியாவின் திருவிதாங்கூர் சுதேச அரசின் ஆட்சியாளராக இருந்தார். திருவிதாங்கூர் "இந்தியாவின் மாதிரி மாநிலம்" என்ற பெயரைப் பெற்றதன் மூலம் இவரது ஆட்சி மிகவும் வெற்றிகரமாக இருந்தது. ஆயில்யம் திருநாள் உத்திரம் திருநாள், சுவாதித் திருநாள் ராமவர்மனின் மருமகனும், புகழ்பெற்ற கௌரி லட்சுமி பாயியின் பேரனும் ஆவார்.

ஆயில்யம் திருநாள் இராமவர்மன்
திருவிதாங்கூரின் மகாராஜா
மகாராஜா 1875
ஆட்சிக்காலம்1860 ஆகத்து 18 – 1880 மே 30
முன்னையவர்உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா
பின்னையவர்விசாகம் திருநாள்
பிறப்பு1832 மார்ச் 14
இறப்பு1880 மே 30 (வயது 48)
மனைவிகள்
  • பனபிள்ளை மாதவி பிள்ளை லட்சுமி பிள்ளை கொச்சம்மா
  • கல்யாணிகுட்டி அம்மா
மரபுவேணாநாடு சொரூபம்
அரசமரபுகுலசேகர வம்சம்
தந்தைபூரம் திரநாள் ராம வர்ம கோயில் தம்புரான்
தாய்கௌரி ருக்மிணி பாய்
மதம்இந்து சமயம்
இளவரசி ருக்மிணி பாய், ஆயில்யம் திருநாள் ராம வர்மனின் தாய்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

மகாராஜாக்கள் சுவாதி திருநாள், உத்திரம் திருநாள் ஆகியோரின் ஒரே சகோதரியான ராணி ருக்மிணி பாயிக்கு 1832 மார்ச் 14 ஆம் தேதி ஆயில்யம் திருநாள் பிறந்தார். திருவிதாங்கூரில் அரசக் குடும்ப பரம்பரை என்பது முதன்மையாக மருமக்கதாயம் முறையால் அதாவது பெண் வழியே தீர்மானிக்கப்பட்டது. 1846 ஆம் ஆண்டில் இவரது மூத்த சகோதரர் உத்திரம் திருநாளின் இயலாமையின் காரணமாக அடுத்தடுத்த வரிசையில் இருந்து விலக்கப்பட்டதும், ஆயில்யம் திருநாள் திருவிதாங்கூர் மாநிலத்தின் வெளிப்படையான இளையராஜ வாரிசானார். ருக்மிணி பாயிக்கு பிறந்த ஏழு குழந்தைகளில், ராணி லட்சுமி பாய் என்ற மகள் உட்பட நான்கு பேர் மட்டுமே தப்பிப்பிழைத்தனர். மேலும் மூத்த மகனும் மூன்றாவது மகனும் மன நோய் காரணமாக ஆட்சி செய்ய தகுதியற்றவர் என்று அறிவிக்கப்பட்டனர்.

ஆயில்யம் திருநாளின் ஆரம்பக் கல்வி தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டது. பின்னர் த. மாதவ ராவ் 1848 இல் இவருக்கும் இவரது சகோதரருக்கும் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 1857 ஆம் ஆண்டில் உத்திம் திருநாள் மாதவ ராவை திவானாக நியமித்தார். 1854 ஆம் ஆண்டில் ஆயில்யம் திருநாள் தனது மாமாவின் மகள் திருவட்டாறு அம்மாவீட்டைச் சேர்ந்த பனபிள்ளை மாதவி பிள்ளை லட்சுமி பிள்ளை கொச்சம்மாவை மணந்தார். இருப்பினும் இவரது துணைவியார் சில ஆண்டுகளுக்குப் பிறகு இறந்தார். 1860 ஆம் ஆண்டில் மகாராஜா உத்திரம் திருநாள் இறந்ததும், இவர் மகாராஜாவானார்.

ஆட்சி தொகு

இவரின் ஆட்சிக்காலம் திருவிதாங்கூரில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது. இவரது திவான் த. மாதவ ராவின் உதவியுடன், இவர் திருவிதாங்கூரில் பல சீர்திருத்தங்களையும் மாற்றங்களையும் செயல்படுத்தினார். இவை அனைத்தும் மாநிலத்திற்கு ஏற்றதாக இருந்தன. இவர் பதவியேற்ற நேரத்தில், திருவிதாங்கூர் அரசு அதன் பல கடன்களுடன் போராடி வந்தது. எனவே, பல ஏகபோகங்கள், வரி, நிறுத்தங்கள் அரசாங்கத்தால் அகற்றப்பட்டன. 1863 ஆம் ஆண்டில், திருவிதாங்கூருக்கு இனி பொதுக் கடன் இல்லை என்று திவான் இறுதியாக அறிவித்தார். கல்வி, சட்டம், பொதுப்பணி, மருத்துவம், தடுப்பூசி மற்றும் பொது சுகாதாரம், வேளாண்மை போன்றவற்றில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது. ஆண்டுதோறும் திருவிதாங்கூர் சென்னை அரசாங்கத்தால் பாராட்டப்பட்டது. 1867 ஆம் ஆண்டின் ]]ஜென்மி]], குடியன் பிரகடனம் போன்ற முக்கியமான பிரகடனங்கள் செய்யப்பட்டன. 1866 ஆம் ஆண்டில் மகாராஜா இந்திய நட்சத்திரத்தின் ஆணை என கௌரவிக்கப்பட்டார். அதே ஆண்டில், பிரிட்டிசு அரசு அதிகாரப்பூர்வமாக மகாராஜா என்ற பட்டத்தை இவருக்கு வழங்கியது. 1874 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் உள்ள மகாராஜா கல்லூரி ஒரு சட்ட வகுப்பைத் தொடங்கியது. மேலும் கல்வித் துறையில் பல முன்னேற்றங்கள் செய்யப்பட்டன. 1875 ஆம் ஆண்டில், திருவிதாங்கூரின் முதல் முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இவரது முதல் மனைவியான திருவட்டாறு அம்மச்சியின் மரணத்திற்குப் பிறகு, மகாராஜா 1862 ஆம் ஆண்டில் மீண்டும் திருமணம் செய்து கொண்டார். மகாராஜாவுக்கு திருமணத்திலிருந்து குழந்தைகள் இல்லை. ஆனால் இவர் தனது இரண்டு மருமகன்களை தத்தெடுத்தார்.

இவரின் ஆட்சியின் முதல் தசாப்தம் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருந்தது, ஆனால் திவான் மாதவ ராவ் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் பல சிக்கல்கள் எழுந்தன. கேரள வர்மா வலிய கோயில் தம்புரானுடன் மகாராஜாவின் உறவு, கசப்பாக மாறியது. இவர் 1880 மே 30 அன்று இறந்தார். பிரிட்டிசு அரசாங்கத்தின் புனித ஜார்ஜ் கோட்டையின் அரசிதழ் மகாராஜாவின் ஆட்சி குறித்து கருத்தை வெளியிட்டது.

குறிப்புகள் தொகு

மேலும் காண்க தொகு