ஆரணி சாலை தொடருந்து நிலையம்

ஆரணி ரயில் நிலையம்

ஆரணி சாலை தொடருந்து நிலையம் (Arani Road Railway Station, நிலையக் குறியீடு:ARV) இந்தியாவின், தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே, களம்பூர் என்னுமிடத்தில் அமையப்பெற்ற ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது ஆரணியிலிருந்து 10 கி.மீ தொலைவில், ஆரணி - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

ஆரணி சாலை
ஆரணி சாலை தொடருந்து நிலையம்
அமைவிடம்
ஆள்கூறு12°37′55″N 79°12′33″E / 12.6320780°N 79.2092586°E / 12.6320780; 79.2092586
வீதிஆரணி - திருவண்ணாமலை சாலை
நகரம்களம்பூர், ஆரணி
மாவட்டம்திருவண்ணாமலை
மாநிலம்தமிழ்நாடு
ஏற்றம்MSL + 20 அடி
நிலையத் தகவல்கள் & வசதிகள்
அமைப்புதரையில் உள்ள நிலையில்
நிலையம் நிலைசெயல்படுகிறது
வேறு பெயர்(கள்)களம்பூர் ரயில் நிலையம்
வாகன நிறுத்தும் வசதிஉண்டு
Connectionsவாடகையுந்து நிறுத்தும், பேருந்து
இயக்கம்
குறியீடுARN
கோட்டம்திருவண்ணாமலை
மண்டலம்தென்னக இரயில்வே
தொடருந்து தடங்கள்3
நடைமேடை2
வரலாறு
திறக்கப்பட்ட நாள்1986[1]
முந்தைய உரிமையாளர்தெற்கு இரயில்வே
மின்சாரமயமாக்கல்1989 [2]
அமைவிடம்
ஆரணி சாலை is located in தமிழ் நாடு
ஆரணி சாலை
ஆரணி சாலை
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
ஆரணி சாலை is located in இந்தியா
ஆரணி சாலை
ஆரணி சாலை
ஆரணி சாலை (இந்தியா)

அமைவிடம் தொகு

விழுப்புரம்- காட்பாடி தொடருந்து பாதை ஆரணி சைதாபேட்டையில் அமைய வேண்டிய நிலையம், தனியார் பேருந்து நல முதலாளிகள் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றுள்ளதால், தொடருந்து நிலையம் ஆரணி - திருவண்ணாமலை சாலையிலுள்ள களம்பூர் எனுமிடத்திற்கு மாற்றப்பட்டது. ஆரணி நகரத்தில் தொடருந்து நிலையம் ஏதும் இல்லை. ஆயினும் வணிகப் புகழ் பெற்ற நகரத்திற்கு 10 கிமீ தொலைவில் தொடருந்து நிலையம் அமைக்கப்பட்டு, அந்த ரயில் நிலையத்திற்கு ஆரணி சாலை தொடருந்து நிலையம் எனப் பெயரிடப்பட்டது. ஆரணி வர விரும்பும் புதிய மக்கள் இந்த தொடருந்து நிலையத்திலிருந்து ஆரணிக்குச் சுலபமாக வருவதற்க்கு வழி வகுக்கும். இந்த நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு 1889 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

போக்குவரத்து தொகு

ஆரணி சாலை தொடருந்து நிலையத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் ஆரணி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. தொடருந்து நிலையத்திற்கு வெளியே, ஆரணி பேருந்து நிலையத்திற்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. வாடகையுந்துகள் மற்றும் ஆட்டோ போன்ற மற்ற போக்குவரத்து முறைகள் நகரத்தினை இணைக்கின்றன.  

தொடருந்து சேவைகள் தொகு

தொடருந்து அட்டவணை தொகு

வண்டியின் பெயர் வண்டி எண் புறப்படும் இடம் சேருமிடம்
திருப்பதி விழுப்புரம் பயணிகள் வண்டி 56885 திருப்பதி விழுப்புரம்
விழுப்புரம்- காரக்பூர் விரைவு வண்டி 22603 விழுப்புரம் திருப்பதி
விழுப்புரம் காட்பாடி பயணிகள் வண்டி 56886 விழுப்புரம் காட்பாடி
காட்பாடி விழுப்புரம் பயணிகள் வண்டி 56881 காட்பாடி விழுப்புரம்
விழுப்புரம்-திருப்பதி 56882 விழுப்புரம் திருப்பதி
காட்பாடி-விழுப்புரம் 56883 காட்பாடி விழுப்புரம்

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு