ஆரன் சோர்க்கின்

அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர்

ஆரன் பெஞ்சமின் சோர்க்கின் (Aaron Benjamin Sorkin, பிறப்பு: சூன் 9, 1961[1]) என்பவர் அகாதமி, மற்றும் எம்மி விருதுகள் பெற்ற அமெரிக்கத் திரைக்கதை எழுத்தாளரும், தயாரிப்பாளரும், நாடக ஆசிரியரும் ஆவார். சிறந்த திரைக்கதைக்கான கோல்டன் குளோப் விருதுக்கு இவர் திரைக்கதை எழுதிய ’எ ஃபியூ குட் மென்’ (A FEW GOOD MEN-1989) திரைப்படம் முன்மொழியப்பட்டது.

ஆரன் சோர்க்கின்
Aaron Sorkin
2009 மே 18 இல் ஆரன் சோர்க்கின்
2009 மே 18 இல் ஆரன் சோர்க்கின்
பிறப்புஆரன் பெஞ்சமின் சோர்க்கின்
சூன் 9, 1961 (1961-06-09) (அகவை 62)
நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம்,
ஐக்கிய அமெரிக்கா
தொழில்திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், நாடக ஆசிரியர்
கல்வி நிலையம்சிரக்கியூஸ் பல்கலைக்கழகம்
செயற்பட்ட ஆண்டுகள்1984– இலிருந்து
துணைவர்யூலியா பிங்காம் (1996–2005; மணமுறிப்பு; 1 பிள்ளை)

இவர் திரைக்கதைகளில் பெரும்பாலும் மதுபான அருந்தகத்தில் வரும் மனிதனாக இவர் இடம் பெறுவார். நடந்து கொண்டே பேசும் பல உரையாடல்கள் இவர் தம் கதைகளில் வரும். இவருடைய அரசியல் நோக்கும் எண்ணங்களின் வெளிப்பாடும் இவர் கதைகளில் அமைந்து இருக்கும். அரசு மற்றும் அரசு துறைகள் அவற்றை பற்றி வெகுவாக விமர்சிக்கும் வகையிலும் இவர் கதைக்களம் அமைந்து இருக்கும். மனோதத்துவ பகுப்பாய்வுகளில் திறமையாக எதிர்கொள்ளும் பாத்திரங்கள் இவர் கதைகளில் இடம் பெறும்.

இவர் படங்களில் பெரும்பாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் நிகழ்வுகள் கொண்டதாக இருக்கும். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இவர் தம் நாடகமாகிய "எ பியு குட் மென்" பின்னாளில் திரைப்படமாக வெளிவந்தது. அதில் வரும் ஒரு ராணுவ வழக்கறிஞர் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட கடற்படை அதிகாரிகளுக்காக, அவர்களைப் பாதுகாக்கும் சட்டத்தரணியாக உள்ளது போன்ற கதைபோக்கு கொண்டதாக இருக்கும்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் உள்ளடங்கிய மன்ஹாட்டனில் பிறந்தவர். இவருடைய தாயார் ஒரு பள்ளி ஆசிரியர். இவர்தம் தந்தை தனி பதிப்புரிமை வழக்கறிஞர். இவரின் தந்தை இரண்டாம் உலக போரில் பங்கேற்றவர். இவருடைய மூத்த சகோதரியும், மூத்த சகோதரனும் சட்டம் பயின்று வழக்குரைஞர்களாகச் சென்றுவிட்டனர்.

இவர் நியூயார்க் புறநகர் பகுதியில் உள்ள சுகேர்சுடேல் (scarsdale) உயர்நிலை பள்ளியில் படித்தார். பள்ளியில் படிக்கும் காலம்தொட்டு நாடகம் மற்றும் கலையரங்க குழுக்களில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கு கொண்டார். இவர் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் நடிப்புத் துறையில் மேற்படிப்பைத் தொடர விரும்பினார். ஆனால் தன் திறமை எழுத்துத்துறையில் மேலோங்கி உள்ளதை அவர் விரைவாக உணர்ந்தார். இவரது முதல் நாடகம் ’ரிமூவிங் ஆல் டவுட்’ (removing all doubt) பெரும் வெற்றி அடையவில்லை. இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து பல நாடகங்கள் எழுதினார்.

இவர் தம் நாடகமாகிய "எ பியு குட் மென்" கதைக் கரு இவர் சகோதரியுடன் ஏற்பட்ட ஒரு உரையாடலின் போது உருவானதாகும். அவரது சகோதரி ஒரு கடற்படை நீதிமன்றத்தின் நீதிபதியாக பனி ஆற்றினர் .அவர் தன்னுடைய பணியில் தான் நீதிபதியாக இருந்த போது வழக்காட பெற்ற ஒரு வழக்கை பற்றி தனது சகோதரனாகிய சோர்கினிடம் தெரிவித்தார் .அந்த உரையாடல் இவரை பெரிதும் பாதித்தமையல் .அதனை தழுவி ஒரு கதையை எழுத முற்பட்டார் .அந்த கதை தான் முதலில் நாடகமாகவும் பின்பு திரைப்படமாகவும் வெளிவந்த எ பியு குட் மென் ஆகும் இவருடைய தந்தை வழிப் பாட்டனார் சர்வதேச மகளிர் 'ஆடை தொழிலாளர்கள் சங்கத்தின்’ நிறுவனர்களில் ஒருவர். சோர்க்கின் இளவயதில் நடிப்பில் நாட்டம் கொண்டார். இவர் தன்னுடைய பதின்பருவம் எய்தும் முன் இவரது பெற்றோர் இவரை Who's Afraid of Virginia Woolf? மற்றும் That Championship season போன்ற நாடகங்களைக் காண நாடக அரங்குங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

திரைப்படங்கள் தொகு

இவர் திரைக்கதை எழுதியுள்ள ஆங்கில திரைப்படங்கள்:

* த சோசியல் நெட்வொர்க் (THE SOCIAL NETWORK), 2010[2]
* மணி பால் (MONEY BALL), 2011[3]
* சார்லி வில்சன் வார் (CHARLIE WILSON WAR), 2007[4]
* எ புயு குட் மேன் (A FEW GOOD MEN), 1992
* தி அமெரிக்கன் பிரெசிடெண்ட் (THE AMERICAN PRESIDENT), 1995
* மாலீஸ் (MALICE), 1993

நாடகங்கள் தொகு

  • ரிமூவிங் ஆல் டவுட் (REMOVING ALL DOUBT)
  • இன் திஸ் பிச்சர் (HIDDEN IN THIS PICTURE ), 1988
  • எ புயு குட் மேன் (A FEW GOOD MEN), 1989
  • என்தூரேஜ் (ENTOURAGE), 2004
  • தி வெஸ்ட் விங் (THE WEST WING), 1999

தி வெஸ்ட் விங் தொகு

இத் தொலைக்காட்சித் தொடருக்கு ஏழு பகுதிகளாகக் கொண்ட தொடர்நாடகத்தை எழுதினார். இந்த நாடகம் 1999-2006 வரை ஒளிபரப்பப் பெற்றது.

  • 2001ஆம் ஆண்டுக்கான சிறந்த தொலைக்காட்சி தொடர்காண கோல்டன் குளோப் விருதை பெற்றது
  • 2003 ஆம் ஆண்டு சிறந்த நாடகத்துக்கான பிரிம்டைம் விருதை பெற்றது .
  • 2007 ஆம் ஆண்டு அந்த வருடத்திற்கு கொடுக்கப்பட்ட சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான விருதை பெற்றது .

என்தூரேஜ் தொகு

இது 2004-2011 வரை ஒளிபரப்பட்ட ஒரு நகைச்சுவை நாடகம். இந்த நாடகம் ஒரு கோல்டன் குளோப் விருதை பெற்றது.

இந்த நாடகத்தின் கதையில் வரும் கதாநாயகன் திடீர் என்று புகழின் உச்சிக்கு வரும் திரைப்பட கதாநாயகன் .ஹாலிவுட்டில் வெகு சிலர் மட்டுமே அனுபவிக்கும் சொகுசு வாழ்க்கையைக் கண்டு வியக்கிறான் .அவனது நெருங்கிய நண்பர்களும் அவனுடன் வந்து தங்கிவிடுகின்றனர் இதனால் அவன் சந்திக்கும் நிகழ்வுகள் நகைசுவை பாங்குடன் சொல்லி இருப்பார்.

ஏற்று நடித்த வேடங்களில் சில தொகு

இவர் திரைப்படங்களில் அதிகம் நடிப்பதில்லை. இருப்பினும் நடிப்பின் மீது அவர் கொண்ட ஆர்வத்தால் தான் திரைக்கதை எழுதிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறார்.

  1. ’எ புயு குட் மேன்’ என்ற படத்தில் மதுபான அருந்தகத்தில் வரும் ஒரு மனிதனாக இவரைக் காண முடியும்.
  2. ’தி அமெரிக்கன் பிரெசிடென்ட்’ என்ற படத்தில் மதுபான அருந்தகத்தில் இருக்கும் உதவியாளராக வரும் ஒரு மனிதனாக நடித்திருந்தார்
  3. ’ஸ்போர்ட்ஸ் நைட்’ என்ற நாடகத்தில் மதுபான அருந்தகத்தில் வரும் ஒரு மனிதனாக நடித்திருந்தார்
  4. ’தி வெஸ்ட் விங்’ என்ற நாடகத்தில் கூட்டத்தில் வரும் ஒரு மனிதனாக நடித்திருந்தார்
  5. மற்றுமொரு திரைப்படத்தில் இவர் ஒரு விளம்பரப் பிரதிநிதியாக நடித்துள்ளார்.

விருதுகள் தொகு

அகாதமி விருது தொகு

  • 83ஆவது ஆண்டு சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது வழங்கும் விழாவில் சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது பிப்ரவரி 13, 2011 அன்று 2010 ஆம் ஆண்டு வெளிவந்த ’தி சோசியல் நெட்வொர்க்’ திரைப்படத்திற்காக இவருக்கு வழங்கபட்டது. இத்திரைப்படத்தின் திரைக்கதை 2009இல் பென் மெஸ்ரிச்சால் (Ben Mezrich) எழுதப்பட்ட ’தி அக்சிதென்டல் பில்லியநர்கள்’ (The Accidental Billionaires) என்ற புத்தகத்தைத் தழுவி எழுதப்பட்டது.

கோல்டன் குளோப் விருது தொகு

2010ஆம் ஆண்டு சிறந்த தழுவிய திரைக்கதைக்கான கோல்டன் குளோப் விருது ’தி சோசியல் நெட்வொர்க்’ திரைப்படத்திற்காக இவருக்கு வழங்கபட்டது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரன்_சோர்க்கின்&oldid=2912685" இலிருந்து மீள்விக்கப்பட்டது