ஆலிஸ் (ஆலிஸின் அதிசயயுலக சாகசங்கள்)

ஆலிஸ் (Alice), லீவிஸ் கரோலின் எழுதிய குழந்தைகளின் புதினமான ஆலிஸின் அதிசயயுலக சாகசங்கள் (Alice's Adventures in Wonderland) (1865) என்பதில் வரும் முக்கியக் கற்பனை கதாபாத்திரம். ஆலிஸின் அதிசயயுலக சாகசங்களின் தொடர்ச்சியாக வந்த கதை "கண்ணாடியின் வழியாக" (Through the Looking-Glass (1871) என்பதாகும். ஆலிஸ், விக்டோரியாவின் காலத்து நடுப்பகுதியில் வரும் ஒரு கற்பனை குழந்தை கதாபாத்திரம். ஆலிஸ் தற்செயலாக ஒரு முயல் வளைக்குள் விழுந்து நிலத்தடியில் இருக்கும் அதிசயயுலகிற்குச் செல்கிறார்; அதன் தொடர்ச்சியாக, அவர் ஒரு மாற்று (அதிசய) உலகிற்கு ஒரு கண்ணாடியின் வழியாக செல்கிறார்.

ஆலிஸ்
ஆலிஸின் அதிசயுலக சாகசம்
முதல் தோற்றம் ஆலிஸின் அதிசயுலக சாகசம் (1865)
இறுதித் தோற்றம் கண்ணாடியின் வழியாக (1871)
உருவாக்கியவர் லீவிஸ் கரோல்
தகவல்
பால்பெண்

கரோல் மற்றும் அவரது நண்பர் ராபின்சன் டக்வொர்த்துடன் ஐசிஸ் (தேம்ஸ் நதியில்) படகில் செல்லும் போது, லிட்டெல் சகோதரிகளை மகிழ்விக்க கரோலால் கூறப்பட்ட கதைகளில் இந்த ஆலிஸ் பாத்திரம் உருவானது. தொடர்ச்சியான படகுப் பயணங்களில் மேலும் உருவானது. ஆலிஸ் கதாபாத்திரம் தனது பெயரை 'ஆலிஸ் லிட்டெலின்' முதல் பெயரிலிருந்து கொண்டிருந்தாலும், இக்கதாபாத்திரம் லிட்டெலை எந்தளவு ஒத்துள்ளது என்பதில் சில அறிஞர்கள் மறுக்கின்றனர். கரோல், ஆலிஸ் கதாபாத்திரத்தை "அன்பும் மென்மையும்", "அனைவரையும் உபசரிக்கும் தன்மை", "நம்பகத்தன்மை", "பெரும் ஆர்வம்" ஆகிய பண்புகள் இருப்பவராக உருவாக்கியிருப்பார். [1]

ஆலிஸ், புத்திசாலியாக, நல்ல நடத்தை கொண்டவராக மற்றும் சந்தேகப்படுபவராக என பல்வேறு கோணங்களில் பார்க்கப்படுகிறார். ஆயினும் சில விமர்சகர்கள் அவரது தனித்தன்மையில் அதிக எதிர்மறை அம்சங்களைக் கண்டறிந்துள்ளனர். ஆலிசின் தோற்றம் ஆலிசின் அதிசயயுலக சாகசங்களின் முதல் வரைவான ஆலிசின் நிலத்தடி சாகசங்களில் இருந்து மாறியிருந்தது. அரசியல் கேலிச்சித்திர ஓவியர் ஜான் டென்னியேல் என்பவர் ஆலிசின் இந்த இரண்டு புத்தகங்களுக்கும் விளக்கச் சித்தரங்களை வரைந்துக் கொடுத்தார்.

ஆலிஸ் கதாப்பாத்திரம் ஒரு கலாச்சார சின்னமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆலிஸ் பத்தொன்பதாம் நூற்றாண்டின் வழக்கமான கதாபாத்திரத்திலிருந்து வேறுபட்ட ஒரு புதிய புறப்பாடு என விவரிக்கப்படுகிறது, மேலும் இரு ஆலிசின் புத்தகங்களின் வெற்றி பல தொடர்கள், நகைச்சுவை படைப்புகள் மற்றும் பிரதிபலிப்புகள் தோன்ற ஒரு உத்வேகத்தை வழங்கியது. ஆலிஸ் பல்வேறு விமர்சன அணுகுமுறைகளால் புரிந்து கொள்ளப்பட்டார், வால்ட் டிஸ்னியின் செல்வாக்கு நிறைந்த திரைப்படம் (1951) உள்ளிட்ட பல தழுவல்களில் ஆலிஸ் பாத்திரம் மீண்டும் தோன்றியது. இந்தப் பாத்திரம் தொடர்ச்சியாக மாற்றங்களுக்கு உட்படுத்திக்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கதாப்பாத்திரம் தொகு

ஆலிஸ் விக்டோரியா காலத்தில் நடுவே வாழும் ஒரு கற்பனைக் குழந்தை.[2] ஆலிஸின் அதிசயயுலகச் சாகசங்களில் (1865), மே 4 நடைபெறுவதாக சித்தரிக்கப்படுகிறது. இதில் ஆலிஸ் ஏழு வயது நிரம்பியவராக காட்டப்படுகிறது. ஆலிஸின் அடுத்த தொடர்கதையில் 4 நவம்பரில் நடக்கும் நிகழ்வில் தனது அகவை ஏழு மற்றும் அரை வருடம் என்று கூறுகிறார். லீவிஸ் கரோல் தனது இரண்டு புத்தகங்களிலும் ஆலிஸ் கதாபாத்திரத்தின் தோற்றத்தைப் பற்றி பேசவில்லை. ஆலிஸின் கற்பனை வாழ்க்கைப் பற்றிய விவரங்கள் இரண்டு புத்தகங்களின் உரையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. ஆலிஸ் வீட்டில் அவருடன் ஒரு மூத்த சகோதரி, தீனா என்ற ஒரு வளர்ப்புப் பூனை, ஒரு முதிய செவிலியர் மற்றும் ஒரு ஆசிரியர் வசிக்கிறார்கள். ஆசிரியர் காலை ஒன்பது மணிக்கு ஆலிஸிற்கு பாடம் கற்றுக் கொடுக்க ஆரம்பிப்பார்.[3] கூடுதலாக சில நாட்களுக்கு முன் ஆலிஸ் பகல் நேரப் பள்ளிக்கும் சென்றார்.[3] ஆலிஸ் பின்வரும் வகைகளில் மேல்தட்டு மக்கள்,[4][5] நடுத்தர மக்கள் [2] என வகைப்படுத்தப்படுகிறார்.[6]

மேற்கோள்கள் தொகு