ஆல்பிரட் பார்னார்டு பாசெட்

ஆல்பிரட் பார்னார்டு பாசெட் (Alfred Barnard Basset, சூலை 25, 1854 – 5 திசம்பர் 1930) ஒரு பிரித்தானியக் கணிதவியலாளர் ஆவார். இவர் இயற்கணித வடிவியல், மின்னியக்கவியல் மற்றும் பாய்ம இயக்கவியல் ஆகிய துறைகளில் பங்காற்றினார்.  பாய்ம இயக்கவியலில், பாசெட் விசை அல்லது பெளசினெசுக்-பாசெட் விசை  என அறியப்படும் விசை நிலையற்ற இயக்கத்தில் (ஒரு பிசுபிசுப்பு திரவத்துடன் தொடர்புடையது), உடலில் உணரப்படும்  விசையின் வரலாற்றினை விவரிக்கிறது. இவர் மேலும் பெசெல் சார்புகளில் தன் பங்களிப்பை ஆற்றினார். பாசெட் சாா்பு என்னும் பதம் பெசெல் சாா்பின் மாற்றம் அடைந்ததாகும். ஆனால் இப்போது அது பயன்படுத்தப்படுவதில்லை. இவா் 1889  ஆம் ஆண்டில் அரச கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆல்பிரட் பார்னார்டு பாசெட்
பிறப்பு(1854-07-25)25 சூலை 1854
இலண்டன்
இறப்பு5 திசம்பர் 1930(1930-12-05) (அகவை 76)
தேசியம்பிரித்தானியர்
துறைகணிதம்
இயற்பியல்
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
அறியப்படுவது• பாசெட் விசை
• பாசெட்–பூசினெசுக்–ஒசேன் சமன்பாடு

உசாத்துணைகள் தொகு

  • "Obituary Notices", Proceedings of the Royal Society of London, Series A, 131 (818): i–xxv, 1931, JSTOR 95635
  • H. L. (1931), "Mr. A. B. Basset, F.R.S", Nature, 127 (3198): 244, Bibcode:1931Natur.127..244L, doi:10.1038/127244a0