ஆவடை இரகுநாத தொண்டைமான்

கள்ளர் இனத் தலைவர்

ராய ரகுநாத ராய வஜ்ரிடு ராய மண்ணித ராய ஆவடை ரகுநாத தொண்டைமான் (இறப்பு 1661) என்பவர் கறம்பக்குடியைச் சேர்ந்த ஒரு கள்ளர் குறுநிலத் தலைவராவார். இவர் விஜய நகரப் பேரரசின் கூட்டமைப்புக்கு உட்பட்டு இருந்தவராவார்.

பிறப்பு மற்றும் துவக்கக்கால வாழ்க்கை தொகு

ஆவடை ரகுநாத தொண்டைமான் கறம்பக்குடியில் 17 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிறந்தார். இவர் திருமலை தொண்டைமான் என்பவரின் மரபு வழியில் வந்தவர். திருமலை தொண்டாமான் அக்காலத்தில் தொண்டை நாடு அல்லது தொண்டை மண்டலத்தில் இருந்த திருப்பதியில் இருந்து அன்புக்கோயிலில் குடியேறியவர்.

வாழ்க்கை தொகு

விசய நகர மன்னர் மூன்றாம் ஸ்ரீரங்க ராஜாவுக்காக 1639 இல் ஆவடி ரகுநாத தொண்டாமான் தற்போதைய புதுக்கோட்டைப் பகுதியை பரவ ராய மரபினரிடமிருந்து கைப்பற்றினார். இதனால் மூன்றாம் ஸ்ரீரங்க ராஜா இவருக்கு ராய ரகுத ராய வஜ்ஜிரடு ராய மன்னிடுராய என்னும் பட்டத்தை அளித்தார். ஆவடை ரகுநாத தொண்டாமான் 1661 இல் இறந்தார். இவருக்குப் பின் இவரது மகன் இரகுநாதராய தொண்டைமான் பொறுப்புக்கு வந்தார். இந்த மரபினரே புதுக்கோட்டை அரசர்களாவர்.

மேற்கோள்கள் தொகு

  • "Pudukkottai 2". Tondaiman Dynasty. Christopher Buyers.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவடை_இரகுநாத_தொண்டைமான்&oldid=3063310" இலிருந்து மீள்விக்கப்பட்டது