ஆஷுரா தினம்

ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அரபுமொழியில் அஷரா என்பது பத்தைக் குறிக்கும். இம்மூலப் பதத்திலிருந்தே ஆஷுரா எனும் வார்த்தைப் பதம் பிரயோகத்துக்கு வந்தது. உலகளாவிய ரீதியில் வசிக்கும் முஸ்லிம்கள் ஆண்டுக் கணக்கில் தமது முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தையே கொள்வர்.[1][2][3]

வரலாற்றுப் பின்னணி தொகு

முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா (அலை) அவர்களையும் (இஸ்லாமிய சமயத்தின் ஒரு தூதுவர்) அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிழந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும். அதற்கு நன்றி செலுத்தும் முகமாக மூஸா (அலை) அவர்களின் சமூகத்தார் நோன்பு நோற்றார்கள்.

இத்தினத்தில் நபி நாயகம் தானும் நோன்பு நோற்று தன் தோழர்களையும் நோற்கும் படி ஏவினார்கள். இதனடிப்படையிலேயே ஆஷுரா தினத்தன்று முஸ்லிம்கள் நோன்பு நோற்று வருகின்றார்கள். இது இஸ்லாத்தில் கட்டாய கடமையல்ல. இதுவொரு சுன்னத்தாக (நபி நாயகத்தின் வழிமுறை) கொள்ளப்படுகின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. "Holidays and observances in Iraq in 2022". www.timeanddate.com.
  2. "When is Ashura Day Worldwide". 30 September 2017. Archived from the original on 28 September 2019. பார்க்கப்பட்ட நாள் 21 August 2018.
  3. "Islamic Calendar". islamicfinder.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஷுரா_தினம்&oldid=3768835" இலிருந்து மீள்விக்கப்பட்டது