இங்கிலாந்து உள்நாட்டுப் போர்

இங்கிலாந்து உள்நாட்டுப் போர் (English Civil War, 1642–1651) இங்கிலாந்து இராச்சியத்தில் உருள்தலையினர் (Roundhead) என்றழைக்கப்பட்ட நாடாளுமன்றத்தினருக்கும் புரவியர் (Cavalier) என்றழைக்கப்பட்ட அரசருக்கு விசுவாசமான அரசப்படைகளுக்கும் இடையே நிகழ்ந்த ஆயுதச் சண்டைகளையும் அரசியல் சூழ்ச்சிகளையும் குறிப்பிடுகிறது. இப்போர்கள் மூன்று முறை இடம் பெற்றன அவையாவன,

  • முதலாம் உள்நாட்டுப் போர்.
  • இரண்டாம் உள்நாட்டுப் போர்.
  • மூன்றாம் உள்நாட்டுப் போர்.
இங்கிலாந்து உள்நாட்டுப் போர்
மூன்று இராச்சியங்களின் போர்கள் பகுதி

சர் தாமசு பயர்பேக்சு மற்றும் ஆலிவர் கிராம்வெல்லின் தலைமையில் நாடாளுமன்றத்தினரின் புதிய வடிவ படை இளவரசர் ரூபர்ட்டு தலைமையிலான அரசப்படைகளை நேசுபி சண்டையில் (சூன் 14, 1645) வென்றது இங்கிலாந்து உள்நாட்டுப் போரில் ஓர் திருப்புமுனை நிகழ்வாக அமைந்தது.
நாள் ஆகத்து 22, 1642 – செப்டம்பர் 3,1651
(9 ஆண்டு-கள், 1 வாரம் and 5 நாள்-கள்)
இடம் இங்கிலாந்து இராச்சியம்
நாடாளுமன்றத்தினர் வெற்றி; சார்லசு I மன்னரின் மரணதண்டனை, ஆலிவர் கிராம்வெல் தலைமையிலமைந்த பொதுநலவாயக் குடியரசு .
பிரிவினர்
அரசப்படைகள் (புரவியர்) நாடாளுமன்றத்தினர் (உருள்தலையினர்)
தளபதிகள், தலைவர்கள்
சார்லசு I ஆலிவர் கிராம்வெல்

முதலாம் உள்நாட்டுப் போரிலும் (1642–46) இரண்டாம் உள்நாட்டுப் போரிலும் (1648–49) முழுமையான நாடாளுமன்றத்தினர் முதலாம் சார்லசின் ஆதரவாளர்களுடன் போரிட்டனர்; மூன்றாம் உள்நாட்டுப் போரில் (1649–51) ஆட்குறைந்த நாடாளுமன்றத்தினரும் இரண்டாம் சார்லசு ஆதரவாளர்களும் போரிட்டனர். இந்த உள்நாட்டுப் போர்கள் செப்டம்பர் 3, 1651இல் வொர்செசுடர் சண்டையில் நாடாளுமன்றத்தினரின் வெற்றியடைந்ததுடன் முடிவுற்றன.

இந்த உள்நாட்டுப் போர்களின் விளைவாக முதலாம் சார்லசு மரணதண்டனை வழங்கப்பட்டுக் கொல்லப்பட்டார்; அவரது மகன் இரண்டாம் சார்லசு நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்; இங்கிலாந்தின் முடியாட்சிக்கு மாற்றாக முதலில் இங்கிலாந்தின் பொதுநலவாயமும் (1649–53), பின்னர் ஆலிவர் கிராம்வெல்லின் தலைமையில் அமைந்த காப்பரசும் (1653–59) அமைந்தன. இங்கிலாந்தில் கிறித்தவ வழிபாட்டிற்கான இங்கிலாந்து திருச்சபையின் முழுநிறை அதிகாரம் குறைக்கப்பட்டது. இந்தப் போர்களினால் இங்கிலாந்தின் மன்னர்கள் நாடாளுமன்றத்தின் இசைவின்றி அரசாள முடியாது என்பதற்கான ஒரு முன்னுதாரணமாக விளங்கியது. இந்தக் கோட்பாடு சட்டப்படியாக அந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த மேன்மையான புரட்சிக்குப் பின்னரே நிறுவப்பட்டது.

வெளி இணைப்புகள் தொகு