இசுபகான் மாகாணம்

இஸ்ஃபஹான் மாகாணம் (Isfahan province (பாரசீக மொழி: استان اصفهان‎, romanized: Ostāne Esfahan), மேலும் Esfahan, Espahan, Isfahan, அல்லது Isphahan என்று ஒலிபெயற்கப்படுகிறது), என்பது ஈரானின் முப்பத்தோறு மாகாணங்களில் ஒன்றாகும். இந்த மாகாணமானது நாட்டின் மையப்பகுதியில், ஈரானின் இரண்டாம் வட்டாரத்தில் உள்ளது.[2] இதன் தலைமையகமானது இசுபகான் நகரில் உள்ளது.

இஸ்ஃபஹான் மாகாணம்
Isfahan Province

استان اصفهان
மாகாணம்
Map of Iran with Esfahan highlighted
ஈரானில் இஸ்ஃபஹான் மாகாணத்தின் அமைவிLம்
ஆள்கூறுகள்: 32°39′28″N 51°40′09″E / 32.6577°N 51.6692°E / 32.6577; 51.6692
நாடு ஈரான்
வட்டாரம்வட்டாரம் 2
தலைநகரம்இஸ்ஃபஹான்
மாவட்டங்கள்24
அரசு
 • ஆளுநர்அப்பாஸ் ரெசீ
பரப்பளவு
 • மொத்தம்1,07,029 km2 (41,324 sq mi)
மக்கள்தொகை (2016)[1]
 • மொத்தம்51,20,850
 • அடர்த்தி48/km2 (120/sq mi)
நேர வலயம்IRST (ஒசநே+03:30)
 • கோடை (பசேநே)IRST (ஒசநே+04:30)
மொழிகள்முதன்மையாக பாரசீகம்
சிறுபான்மையாக: பக்திரி லுரி, கஷ்ஷாய், சியார்சியன், அருமேனியம் மாகாணத்தின் சில பகுதிகிளல் பேசக்கூடிய மொழிகள்
இணையதளம்[1]

நிலவியல் தொகு

இஸ்ஃபஹான் மாகாணமானது சுமார் 107,027 சதுர கிமீ பரப்பளவு கொண்டுள்ளது. இது நாட்டின் மையப் பகுதியில் உள்ளது. இதன் வடக்கே, மார்கசி (மத்திய) மாகாணம், குவாம் மற்றும் செம்னானின் மாகாணங்கள் உள்ளன. இதன் தெற்கில் பர்ஸ் மாகாணம், மற்றும் கோஹிலுவே மற்றும் போயர்-அஹ்மத் மாகாணங்களை எல்லைகளாக கொண்டுள்ளது. இஸ்ஃபஹான் மாகாணத்தின் மிகத் தெற்கில் உள்ள நகராக அமீனாபாத் உள்ளது. இந்த நகரமானது மாகாண எல்லைப் பகுதியில் இருந்து இரண்டு கிமீ தொலைவில் உள்ளது. இஸ்ஃபஹான் மாகாணத்தின் கிழக்கே, யாசுது மாகாணத்தின் எல்லையும், மேற்கில் லுரேஸ்தான் மாகாணமும், தென் மேற்கில் சஹர் மஹல் மற்றும் பக்தியாரி மாகாணம் எல்லையாக உள்ளது.

மாகாண தலைநகராக இசுபகான் நகரம் உள்ளது. இந்த மாகாணத்தின் மாவட்டங்களாக அரான் வத்திக்கான் கவுன்ட், லெஜான் கவுண்டி, சாஹின் ஷாஹ்ர் மற்றும் மேமேஹ் கவுண்டி, கோம்னி ஷார் கவுண்டி, கன்சார் கவுண்டி, செம்ரோம் கவுண்டி, ஃபரிடான் கவுண்டி, ஃபெரிடியன்ஹார்ன் கவுண்டி, ஃபால்வாரான் கவுன், கசான் கவுண்டி, கல்பாயகான் கவுண்டி, மொபராகே கவுண்டி, நைன் கவுண்டி , நஜபபாத் கவுண்டி, தெஹகான் கவுண்டி, ஷெரெஸா கவுண்டி, போர்க்ஹார் கவுண்டி, டிரான் மற்றும் கர்வண் கவுண்டி, சாடகான் கவுண்டி, ப்யூய் வா மியான்ஹாஷ் கவுண்டி, குர், பிபன்பாக் கவுண்டி நாடன்ஸ் கவுண்டி போன்றவை உள்ளன. மாகாணத்தில் 18 நகரியங்கள், 25 மாவட்டங்கள், 93 நகரங்கள், 2,470 கிராமங்கள் உள்ளன. 2006 ஆண்டு கணக்கெடுப்பின்படி மாகாணத்தில் 4,559,256 மக்கள் வசிக்கின்றனர். இதில் 83.3 விழுக்காட்டினர் நகரங்களிலும், 16.7 விழுக்காட்டினர் கிராமப்பகுதிகளிலும் வசிக்கின்றனர். எழுத்தறிவு விகிதமானது 88.65 விழுக்காடு. 2011 இல் இஸ்ஃபஹானின் மக்கள்தொகை 4,879,312ஆக உயர்ந்தது.[3]

இந்த மாகாணமானது பெரும்பாலும் மிதமான மற்றும் வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. குளிர்காலத்தில் ஒரு நாளின் வெப்பநிலையாக 40.6 °C மற்றும் 10.6 °C க்கும் இடையே உள்ளது. சராசரி ஆண்டு வெப்பநிலையானது 16.7 °C என பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டு சராசரி மழைவீழ்ச்சி 116.9 மிமீ எனப் பதிவாகியுள்ளது. எனினும் செபஹானின் நகரமானது (எஸ்பானன்) ஆண்டில் நான்கு மாறுபட்ட கால நிலையைக் கொண்டதாக உள்ளது.

4,040 மீட்டர் உயரம் கொண்ட, ஷாங்குஹ் இஸ்ஃபஹான் பகுதியானது மாகாணத்தின் மிக உயர்ந்த பகுதியாகும். இந்த மலையானது இஸ்ஃபஹான் மாகாணத்தின் மேற்குப் பகுதியிலுள்ள பெரெதின்ஷஹர் என்ற நகரத்தின் தெற்கே 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

வரலாறு மற்றும் கலாச்சாரம் தொகு

 
மாகாணத்தின் மற்றொரு கலாச்சார அணிகளனான கசான் நகரத்தில் உள்ள, ஏகா போஸார் பள்ளிவாசல்.
 

வரலாற்று அறிஞர்கள் எஸ்பானன், சிபகான் அல்லது இஸ்ஃபஹான் ஆகியவற்றை ஆரம்பத்தில் பாதுகாப்பு மற்றும் இராணுவ தளமாக பதிவு செய்துள்ளனர். இப்பகுதியில் படிப்படியாக அதிகரித்து வந்த அரண்மனைகள் மற்றும் காப்பரண்களால், அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் பாதுகாப்பை பெற்றதோடு, அருகிலுள்ள பெரிய குடியிருப்புகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்குத்தது. இந்த வரலாற்று அரண்மனைகளானது அடாஷ்கா, சரோயாயி, தபரோக், கோஹன் தேஜ் மற்றும் கார்ட் தேஜ் போன்ற பகுதிகளில் உருவாயின. இவற்றில் வரலாற்றுக் கால பழமை வாய்ந்த தளங்களானது கலாம் செஃபீத் மற்றும் தமஜானில் உள்ள அடித்தளம் ஆகும். வரலாற்று ரீதியான கிராமமான அபியான், தேசிய அளவில் கவரக்கூடியது, சாசானியர்களின் இடிபாடுகள் மற்றும் நெருப்புக் கோயில்கள் போன்ற பிற சாசானியப் பேரரசு வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. "National census 2016". amar.org.ir. பார்க்கப்பட்ட நாள் 2017-03-14.[]
  2. "همشهری آنلاین-استان‌های کشور به ۵ منطقه تقسیم شدند (Provinces were divided into 5 regions)" (in Persian). Hamshahri Online. 22 June 2014 (1 Tir 1393, Jalaali) இம் மூலத்தில் இருந்து 23 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces. 
  3. Selected Findings of National Population and Housing Census 2011 பரணிடப்பட்டது 2013-05-31 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுபகான்_மாகாணம்&oldid=3432181" இலிருந்து மீள்விக்கப்பட்டது