இசுரவேல் நாட்டுப்பண்

ஹதிக்வா (எபிரேயம்: הַתִּקְוָה, நம்பிக்கை) இசுரவேல் நாட்டுப்பண் ஆகும். இதனை உக்ரைனைச் சேர்ந்த யூத இனத்தவரான நப்தலி எர்ஸ் இம்பர் என்பவர் இயற்றினார்[1]. இவர் இசுரேல் நிலத்திற்கு 1880களில் புலம்பெயர்ந்தார்.[2][3]

ஹா-திக்வா

ஆங்கிலம்: The Hope
הַתִּקְוָה
நம்பிக்கை
'ஹா-திக்வா' பாடல்வரிகள் மங்கலான இசுரேலிய தேசிய கொடியில்

 இசுரேல் தேசியம் கீதம்
இயற்றியவர்நப்தலி எர்ஸ் இம்பர், 1878
இசைசாம்யுஎல் கொஎன், 1888
சேர்க்கப்பட்டது1897 (முதலாவது சீயோனிய சபையில்)
1948 (உத்தியோக பூர்வமற்று)
2004 (உத்தியோக பூர்வமாக)
இசை மாதிரி
இசைக்கருவி

ஏறத்தாழ 2000-ஆண்டுகளாக இசுரேல் நிலப்பரப்பில் யூத இன மக்களின் விடுதலை வேட்கையையும் மற்றும் அவர்களின் இறைமையையும் இப்பாடல் கருப்பொருளாகக் கொண்டிருக்கிறது.

உத்தியோக பூர்வ வரிகள் தொகு

எபிரேயம் வட்டெழுத்து தமிழ்
எபிரேயம்: כֹּל עוֹד בַּלֵּבָב פְּנִימָה கொல் ‘ஒத் பலேவாவ் பெனிமா மனதில் இருக்கும் வரை,
எபிரேயம்: נֶפֶשׁ יְהוּדִי הוֹמִיָּה, னெஃபெஷ் யெஹுதி ஹொமியா, யூதனின் ஆன்மா ஏங்குகிறது,
எபிரேயம்: וּלְפַאֲתֵי מִזְרָח, קָדִימָה, உல்ஃபாதே மிஸ்ராக் கடிமா, பின் நோக்கி, கிழக்கே,
எபிரேயம்: עַיִן לְצִיּוֹן צוֹפִיָּה; ஆயின் லெட்சீயொன் ட்சொஃபியா; பார்க்கிறது சீயோன் நோக்கி ஒரு கண்;
 
எபிரேயம்: עוֹד לֹא אָבְדָה תִּקְוָתֵנוּ, ஒத் லொ அவ்தா திக்வதேனு, எம் நம்பிக்கை இன்னும் மறையவில்லை,
எபிரேயம்: הַתִּקְוָה בַּת שְׁנוֹת אַלְפַּיִם, ஹடிக்வஹ் பத் ஷ்னொத் அல்பயீம், 2000 வருடங்களின் நம்பிக்கை,
எபிரேயம்: לִהְיוֹת עַם חָפְשִׁי בְּאַרְצֵנוּ, லீயொத் அம் சொஃப்ஷீ பெ’அட்சேனு, எம் நாட்டில் சுதந்திரமாக,
எபிரேயம்: אֶרֶץ צִיּוֹן וִירוּשָׁלַיִם. எட்-சீயொன் யேருசாலாயேம். சீயோன் நாடு மற்றும் எருசலேம்.

தமிழில் எளிமைப்படுத்திய பாடல் தொகு

நெஞ்சம் துடிப்பது நிற்கும் வரை,
யூதனின் உயிர் என்றென்றும் ஏங்கும்,
அங்கே கிழக்கின் எல்லையை நோக்கியே,
கண்கள் சியோனை வாஞ்சையுடன் பார்க்கும்;
எங்கள் நம்பிக்கை மறையவில்லை,
ஈராயிரம் ஆண்டுகள் கடந்த நம்பிக்கை,
எம்மண்ணில் விடுதலை பெற்று வாழ,
சியோனின் மண் எருசேலத்திலே.
எம்மண்ணில் விடுதலை பெற்று வாழ,
சியோனின் மண் எருசேலத்திலே.

மேற்கோள்கள் தொகு

  1. Jewish-Ukrainian bibliography (ஆங்கில மொழியில்)
  2. "The knesset Lexicon". m.knesset.gov.il. பார்க்கப்பட்ட நாள் 2023-04-29.
  3. "Hatikva - National Anthem of Israel". www.science.co.il. பார்க்கப்பட்ட நாள் 2023-04-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுரவேல்_நாட்டுப்பண்&oldid=3812860" இலிருந்து மீள்விக்கப்பட்டது