இந்திய சமூக ஜனநாயகக் கட்சி

இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (Social Democratic Party of India) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இது இசுலாமியர், தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக செயல்பட்டு வருகிறது. இந்த கட்சியானது 2009 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 அன்று தொடங்கப்பட்டது.[1][2] இது தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின்பிஎஃப்ஐ) அரசியல் பிரிவாகக் கருதப்படுகிறது.[3][4][5][6][7]

இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ)
தொடக்கம்21 சூன் 2009
தலைமையகம்புது டெல்லி, இந்தியா
தொழிலாளர் அமைப்புSDTU‬ தொழிற்சங்கம்
கொள்கைசமூக சனநாயகம்
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 545
இணையதளம்
http://www.sdpitamilnadu.in
http://www.sdpi.in
இந்தியா அரசியல்

தேர்தல் பங்களிப்பு தொகு

தமிழ்நாடு தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 தொகு

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஐந்து தொகுதியில் போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.

போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் வாக்குகள் வாக்கு %
5 0 19,034 2.68 %[8]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 இல் திமுக கூட்டணியில் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ) இணைந்து போட்டியிடும் என்று அறிவித்தது.[9].பின்னர் ஏப்ரல் 7 அன்று திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டாமல் கூட்டணியில் இருந்து விலகியது.[10] எஸ்.டி.பி.ஐ கட்சியானது 30 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் அப்போதைய தமிழ் மாநில தலைவர் தெகலான் பாகவி அறிவித்தார்.[11] 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணியின்றி போட்டியிட்து அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.

போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் வாக்குகள் வாக்கு %
30 0 65985 1.33 % .[12]

2021 சட்டமன்ற தேர்தல் தொகு

2021 தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.[13]

2021 சட்டமன்ற தேர்தல்
போட்டியிட்ட தொகுதிகள் வேட்பாளர் பெயர் வாக்குகள் வாக்கு %
ஆம்பூர் உமர் பாரூக் 1,793 1.01
ஆலந்தூர் முகமது தமின் அன்சாரி 1,761 0.74
திருச்சிராப்பள்ளி மேற்கு அப்துல்லா ஆசன் 2,545 1.39
திருவாரூர் நசிம் பானு 6,364 3.06
மதுரை மத்தி சிக்கந்தர் பாசா 3,347 2.24
பாளையம்கோட்டை முகமது முபாரக் 12,241 7.6

புதுச்சேரி தொகு

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் 2016 தொகு

புதுச்சேரி ஒன்றிய பகுதியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.

போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் வாக்குகள் வாக்கு %
4 0 846 0.82 %[14] .

கேரளா தொகு

கேரளா உள்ளாட்சி மன்ற தேர்தல்கள் தொகு

2015 ஆன்று நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி 32 கிராம ஊராட்சி வார்டுகள், 7 நகராட்சி வார்டுகள், ஒரு நகராட்சி வார்டு என 40 இடங்களில் வென்றது. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் இக்கட்சி 75 கிராம ஊராட்சி வார்டுகள், 1 ஒன்றிய கிராம ஊராட்சி வார்டு, 18 நகராட்சி வார்டுகள், 1 மாநகராட்சி வார்டு என 95 இடங்களில் வென்றது.[15]

கேரளா சட்டமன்றத் தேர்தல், 2011 தொகு

2011 கேரளா சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து 80 தொகுதிகளில் போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.

போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் வாக்குகள் வாக்கு %
80 0 158885 1.61 % .[16]

கேரளா சட்டமன்றத் தேர்தல், 2016 தொகு

2016 கேரளா சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து 82 தொகுதிகளில் போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.

போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் வாக்குகள் வாக்கு %
88 0 123241 1.0 % .[17]

பிகார் தொகு

பிகார் சட்டமன்றத் தேர்தல், 2020 தொகு

பிகார் மாநில சட்டமன்றதேர்தலில் எஸ்.டி.பி.ஐ.கட்சி பப்பு யாதவின் ஜான் அதிகார் கட்சி தலைமையிலான முற்போக்கு ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தது. இந்த கூட்டணியில் சந்திரசேகர ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சி, பகுஜன் முக்தி கட்சி,முசுலிம் அரக்ஷ்ன் மோர்ச்சா கட்சியும் அங்கம் வகித்தன. இந்த கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி 14 தொகுதியில் போட்டியிட்டது. [18]

போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் வாக்குகள் வாக்கு %
14 0 27871 1.12 %.[19]

மேற்கோள்கள் தொகு

  1. "SDPI Formed". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 2016-03-20.
  3. Poovanna, Sharan (17 January 2020). "Six members of radical Islamist organisation arrested in Bengaluru". Live Mint.
  4. "Kerala School Forced to Drop 'Vande Mataram' from Independence Day Eve Fete". NDTV.
  5. "Islamic fundamentalists rears its head in Kerala".
  6. Dennis, Subin (2011). "Kerala Elections: Nothing Mysterious". Economic and Political Weekly 46 (25): 127–128. http://www.jstor.org/stable/23018677. 
  7. "Kerala Police unmasks PFI's terror face". The New Indian Express. https://www.newindianexpress.com/thesundaystandard/2013/apr/28/kerala-police-unmasks-pfis-terror-face-472325.html. 
  8. "Tamil Nadu General Election 2011- Report". ELECTION COMMISSION OF INDIA. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  9. "திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ போட்டியிடும்:அக்கட்சியின் தலைவர் தெஹக்லான் பாகவி". தினமணி. 20 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  10. "தொகுதி பங்கீட்டில் அதிருப்தி.. திமுக கூட்டணியில் இருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ கட்சி!". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 7 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  11. "25 தொகுதிகளில் தனித்து போட்டி..முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது எஸ்.டி.பி.ஐ". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 13 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  12. "Puducherry General Legislative Election 2016 - Report". ELECTION COMMISSION OF INDIA. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  13. SDPI CANDIDATES LISTT 2021
  14. "Puducherry General Election 2016 - Report". ELECTION COMMISSION OF INDIA. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  15. "Kerala local body elections: SDPI increases its seats by more than 100 per cent". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-02-20.
  16. "GENERAL ELECTION TO LEGISLATIVE ASSEMBLY TRENDS & RESULT 2011". ELECTION COMMISSION OF INDIA. பார்க்கப்பட்ட நாள் 13 பிப்ரவரி 2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)
  17. "GENERAL ELECTION TO LEGISLATIVE ASSEMBLY TRENDS & RESULT 2016". ELECTION COMMISSION OF INDIA. பார்க்கப்பட்ட நாள் 13 பிப்ரவரி 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)
  18. "Bihar Assembly election 2020: Pappu Yadav forms poll alliance with Chandrasekhar Azad to take on ruling NDA". Zee News (in ஆங்கிலம்). 2020-09-28. பார்க்கப்பட்ட நாள் 2021-02-15.
  19. "GENERAL ELECTION RESULT 2020 - BIHAR". ELECTION COMMISSION OF INDIA. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)