இந்திரஜித் குப்தா

இந்திய அரசியல்வாதி

இந்திரஜித் குப்தா (18 மார்ச்சு 1919 - 20 பிப்பிரவரி 2001) என்பவர் இந்திய அரசியலாளர் மற்றும் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். இந்திய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராக பல ஆண்டுகள் இருந்தவர்.[1]

1996 முதல் 1998 வரை ஐக்கிய முன்னணி அரசில் தேவ கவுடா தலைமையிலும் ஐ. கே. குஜரால் தலைமையிலும் இந்திரஜித் குப்தா உள்துறை அமைச்சராக இருந்தார்.

1960இல் முதன் முறையாக தெற்கு கொல்கத்தா தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வேறு வேறு தொகுதிகளிலிருந்து 11 முறை தேர்தலில் வெற்றி பெற்றார். பொதுவுடைமைக் கட்சியின் தொழிற்சங்கத்தில் பொதுச் செயலாளராக இருந்தார்.

மேற்கோள் தொகு

  1. "Biography – Indrajit Gupta". Vol. No. XLIV 07March 2001 B. No.35 (16Phalguna 1922). Research, Reference and Training Division, Ministry of Information and Broadcasting, Govt. of India. பார்க்கப்பட்ட நாள் 15 March 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரஜித்_குப்தா&oldid=3146827" இலிருந்து மீள்விக்கப்பட்டது