இந்திரன் அமிர்தநாயகம்

இந்திரன் அமிர்தநாயகம் (பி. 1960, கொழும்பு, இலங்கை). இவர் ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் இஸ்பானிய மொழிகளில் எழுதும் கவிஞர். கை அமிர்தநாயகத்தின்(Guy Amirthanagam) மகன். அமெரிக்க அரசின் தூதுவரக அதிகாரியாகவும் பணியாற்றுகிறார்.

இந்திரன் அமிர்தநாயகத்தின் The Elephants of Reckoning 1994-இல் பற்றர்சன் கவிதைப் பரிசை (Paterson Poetry Prize)வென்றிருக்கிறது. E; Infierno De los Pajaros என்ற தலைப்பில் இவருடைய இஸ்பானியக் கவிதைத்தொகுப்பு வெளியாகியிருக்கிறது. Ceylon R.I.P., இவருடைய இன்னுமொரு கவிதைத்தொகுப்பு. இவருடைய So Beautiful கவிதை PBS-இன் The United States of Poetry என்னும் தொடரில் இடம்பெற்றிருக்கிறது. ஆகஸ்ட், 1999-இல் யூனிவி்ஷன், ஒரு செய்தித்தொகுப்பில் இவருடைய ஸ்பானிஷ் கவிதைகளைப் பயன்படுத்தியிருக்கிறது.

இவைபோக, The United States of Poetry, ALOUD: Voices from the Nuyorican Cafe, The Open Boat: Poems from Asian America, The Nuyorasian Anthology, Black Lightning, Living in America, The Four Way Reader #1 ஆகிய தொகுப்புகளிலும் இவருடைய கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரன்_அமிர்தநாயகம்&oldid=3234025" இலிருந்து மீள்விக்கப்பட்டது