இனப்பெருக்க நோயெதிர்ப்பியல்

இனப்பெருக்க நோயெதிர்ப்பியல் (Reproductive immunology) என்பது நோயெதிர்ப்பு அமைப்பிற்கும், இனப்பெருக்கத் தொகுதிக்கும் இடையில் நடைபெறுகின்ற அல்லது நடைபெறாத ஊடாடல்களைக் குறித்துப் பயிலும் ஒரு மருத்துவத் துறையாகும். உதாரணங்களாக, கரு வளர்வதற்குத் தகவான தாயின் நோயெதிர்ப்புச் சகிப்புத் தன்மை (maternal immune tolerance)[1], இரத்த-விந்தக தடுப்பரணுக்கு (blood-testis barrier) ஊடான நோயெதிர்ப்பிய ஊடாடல்கள்[2] ஆகியவற்றைக் கூறலாம். இத்தகு நோயெதிர்ப்புச் சகிப்புத் தன்மை முழுமையாக இல்லாததனால் நிகழும் மலட்டுத் தன்மைப் பிறழ்வினைகள், அடிக்கடி நிகழும் கருச்சிதைவுகள், கருப்பச் சிக்கல்கள் குறித்து விளக்க கருத்தரிப்பு மருத்துவமனைகளில் இனப்பெருக்க நோயெதிர்ப்பியல் என்னும் கருத்தாக்கம் பயன்படுத்தப்படுகிறது. நோயெதிர்ப்பியச் சிகிச்சை முறைகள் முன்னர் விளக்க இயலாத மலட்டுத் தன்மை அல்லது அடிக்கடி நிகழும் கருச்சிதைவுகள் கொண்டவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் புதிய வழிமுறைகளாகும்[3], [4].

மேற்கோள்கள் தொகு