இன்சுவான் (Yinchuan) எனப்படும் இந்நகரம் சீனாவின் நின்ஷியா தன்னாட்சிப் பகுதியின் தலைநகரம். கிழக்குப் பகுதியில் மஞ்சள் ஆற்றைப் பார்த்தவாறு அமைந்துள்ள, இது அழகான இயற்கைக் காட்சிகள் அமைந்த நகரம். இதன் சூழ்நிலை விவசாயத்திற்கு ஏற்றதாக உள்ளது. இது "வடமேற்கிலுள்ள ஆற்றங்கரை நகரம்" மற்றும் "மீன்கள் மற்றும் அரிசியின் வீடு" ஆகிய பெயர்களை பெற்றுள்ளது. சீனா மற்றும் அரபு நாடுகளுக்கு இடையிலான கலாச்சார மற்றும் பொருளாதார பரிமாற்றங்களுக்கான சர்வதேச தளமாக இந்நகரம் அமைந்துள்ளது.

மக்கள் தொகை தொகு

முஸ்லிம் ஹுயி மக்களின் மையமாக இன்சுவான் உள்ளது. அவர்கள் இந்நகரத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்களாக உள்ளனர். நகர கட்டட அமைப்பு, அரபு-சீன சாலை அடையாளங்கள் மற்றும் உணவு ஆகியவற்றில் அவர்களது தாக்கத்தை இந்நகரத்தில் எளிதாக காணமுடியும். வேறுபட்ட அமைப்பு மற்றும் அளவுகளில் சுமார் 500 மசூதிகளை இன்சுவான் நகரத்தில் காணலாம்.

வரலாறு தொகு

இன்சுவான் என்பது உண்மையில் கிமு ஒன்றாம் நூற்றாண்டில் ஃபுபிங் என்ற பெயரில் ஒரு பகுதியாக இருந்தது; இதன் பெயர் கிபி ஆறாம் நூற்றாண்டில் ஹுவாயியுவான் என்று மாற்றப்பட்டது. 907 இல் தாங் அரசமரபின் வீழ்ச்சிக்கு பிறகு இப்பகுதி தாங்குடுகள் அமைத்த மேற்கு சியா அரசால் ஆளப்பட்டது. அப்பேரரசுக்கு தலைநகராக ஆனது. பூர்விக சீன மக்கள் இந்நகருக்கு அதிக அளவில் குடிபெயர்ந்தனர்.[1] 1227 இல் மங்கோலியர்களால் சி-சியா அரசமரபு அழிக்கப்பட்டபோது இன்சுவான் இரக்கமற்ற முறையில் சூறையாடப்பட்டது. அனைத்து மக்களும் கொல்லப்பட்டனர்.[2][3] மங்கோலியர்கள் இந்த நகரத்தை இர்யாய் என்று அழைத்தனர்.

சான்றுகள் தொகு

  1. Jack Weatherford Genghis Khan and the Making of the Modern World, p.85
  2. Frederick W. Mote (1999). Imperial China: 900-1800. Cambridge, Massachusetts: Harvard University Press. பக். 256. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0674012127. 
  3. Boland-Crewe, Tara, தொகுப்பாசிரியர் (2002). The Territories of the People's Republic of China. London: Europa Publications. பக். 215. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780203403112. https://books.google.com/books?id=k6Yl62R5ayEC&printsec=frontcover#v=onepage&q&f=false. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்சுவான்&oldid=2849633" இலிருந்து மீள்விக்கப்பட்டது