இன்டர் மிலான்


இன்டர்நேசியோனல் மிலான் கால்பந்துக் கழகம் (F.C. Internazionale Milano)[5] (ஒலிப்பு [ˌinternattsjoˈnaːle]) , பொதுவாக இன்டர்நேசியோனல் அல்லது இன்டர் என்றழைக்கப்படுவது, இத்தாலியைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்துக் கழகம் ஆகும். இத்தாலியைத் தவிர்த்து பிற நாடுகளில் இன்டர் மிலான் என்று வழமையாக அறியப்படுகிறது. இது இத்தாலியின் முதல்நிலைக் கால்பந்துக் கூட்டிணைவுத் தொடரான சீரீ ஆவில் பங்கேற்று ஆடிவருகிறது; 1909-ஆம் ஆண்டிலிருந்து இத்தாலியின் முதல்நிலைக் கூட்டிணைவுத் தொடரிலேயே ஆடிவருகிறது.

இன்டர் மிலான்
முழுப்பெயர்இன்டர்நேசியோனல் மிலான் கால்பந்துக் கழகம் S.p.A.
அடைபெயர்(கள்)
  • I Nerazzurri (The Black and Blues)
  • La Beneamata (The Cherished One)
  • Il Biscione (The Big Grass Snake)
தோற்றம்9 மார்ச்சு 1908; 116 ஆண்டுகள் முன்னர் (1908-03-09)
ஆட்டக்களம்சான் சிரோ
ஆட்டக்கள கொள்ளளவு80,018
உரிமையாளர்
  • Suning Holdings Group (68.55%)[1][2]
  • எரிக் தோஹிர் (International Sports Capital S.p.A.) (31.05%)[1][2][3]
  • பிரெல்லி (Pirelli) (0.37%)[4]
  • Others Shareholders (0.03%)
Presidentஎரிக் தோஹிர்
Head coachரொபெர்ட்டோ மான்சினி
கூட்டமைப்புசீரீ ஆ
2020–21சீரீ ஆ, 1-ஆம் இடம்
இணையதளம்கழக முகப்புப் பக்கம்
Current season

இன்டர் மிலான் உள்நாட்டுப் போட்டித் தொடர்களில் 30 கோப்பைகளை வென்றுள்ளது. அவற்றுள் 18 முதல்நிலைக் கூட்டிணைவுத் தொடர் பெருவெற்றிக் கோப்பைகளும், 7 இத்தாலியக் கோப்பைகளும், 5 இத்தாலிய உன்னதக் கோப்பைகளும் அடங்கும். 2006-ஆம் ஆண்டிலிருந்து 2010-ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக ஐந்து சீரீ ஆ கோப்பைகளை வென்றனர்; இதுவே அதிகபட்ச தொடர்வெற்றியாகும். மேலும், மூன்று வாகையர் கூட்டிணைவுக் கோப்பைகளையும் வென்றுள்ளது (1964, 1965 மற்றும் 2010).

80,000 பார்வையாளர்களுக்கும் மேல் கண்டு இரசிக்கக்கூடிய சான் சிரோ ஆட்டக்களத்தில் இக்கழகம் தனது அமைவிடப்போட்டிகளை ஆடிவருகிறது.

உசாத்துணைகள் தொகு

  1. 1.0 1.1 "SUNING HOLDINGS GROUP ACQUIRES MAJORITY STAKE OF F.C. INTERNAZIONALE MILANO". F.C. Internazionale Milano – Official website. Archived from the original on 9 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "Inter, Suning si prende il 68,55%, Moratti lascia dopo 21 anni". Gazzetta.it (in Italian). பார்க்கப்பட்ட நாள் 6 June 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Inter2015bilancio என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Pirelli2015bilancio என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. "Organization Chart". F.C. Internazionale Milano – Official website. பார்க்கப்பட்ட நாள் 6 July 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்டர்_மிலான்&oldid=3927728" இலிருந்து மீள்விக்கப்பட்டது