இமாத் வசிம்

பொதுவாக இமாத் வாசிம் என்று அழைக்கப்படும் சையத் இமாத் வாசிம் ஹைதர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர

சையத் இமாத் வசிம் ஹைதர் (Syed Imad Wasim Haider, பொதுவாக இமாத் வசிம் என அறியப்படும் இவர் (பிறப்பு: டிசம்பர் 18, 1988) வேல்சில் பிறந்த பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.இடதுகை மட்டையாளரான இவர் இடதுகை கழல் திருப்பப் பந்துவீச்சாளர் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையினை வென்ற பாக்கித்தான் அணியில் விளையாடினார். மேலும் இவர் பாக்கித்தான் அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பாக்கித்தான் அணிக்காக பட்டியல் அ துடுப்பாட்ட இருபது20 போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.மேலும் இஸ்லாமாபாத் சிறுத்தை புலி அணிக்காக ஃபௌசல் வங்கி இருபது20 கோப்பைக்கான தொடரில் விளையாடுகிறார். கராச்சி கிங்ஸ் அணியின் தலைவராக தர்போது உள்ளார்.ஆகஸ்டு 2018 இல் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இவர் உட்பட முப்பத்து மூன்று வீரர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய ஒப்பந்த விருதினை வழங்கியது. இவர் பாக்கித்தான் அணி , 19 வயதிற்கு உட்பட்ட பாக்கித்தான் அணி, இஸ்லாமாபாத் மாநிலத் துடுப்பாட்ட அணி,இஸ்லாமாபாத் சிறுத்தைப் புலிஅணி, ஜமைக்கா தலாவஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் ஆகிய அணிகளுக்காகவும் விளையாடி வருகிறார்.

2017 இல் இமாத் வாசிம்

ஆரம்பகால வாழ்க்கை தொகு

இமாத் வசிம் வேல்சில் உள்ள சுவன்சியாவில் பிறந்தார்.[1] இவரின் தந்தை இலண்டனில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார்.[2] தனது இளமைக் காலத்திலேயே தனது குடும்பத்தினருடன் இவர் பாக்கித்தான் குடியேறினார். அங்கு முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.[3] வேல்சில் பிறந்து பாக்கித்தான் அணிக்காக விளையாடிய முதல் வீரர் எனும் சாதனை படைத்தார்.[4][5]

சர்வதேசப் போட்டிகள் தொகு

201 5ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற பன்னாட்டு இருபது20 தொடரில் இவர் அறிமுகமானார்.[6] பின் சூலை 19, 2015 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[7]2016 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் பாக்கித்தான் அணியில் இடம்பெற்றார். 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி வாகையாளர் கோப்பைத் தொடரில் வெற்றி பெற்ற பாக்கித்தான் அணியில் விளையாடினார். அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 21 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்து 338 ஓட்டங்கள் இலக்கினை எடுக்க உதவினார். மேலும் முதல் ஐசிசிவாகையாளர் கோப்பையினை பாக்கித்தான் அணி வென்றது.[8] 2019 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. செப்டம்பர் 30, கராச்சி துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் பன்னாட்டுத் த்ஹ்டுப்பாட்டப் போட்டியில் ஏழு ஓவர்களை வீசி 38 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். அதில் ஒரு ஓவரை மெய்டனாக வீசி ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். மட்டையாட்டத்தில் எட்டு பந்துகளில் 12 ஓட்டங்கள் எடுத்து உதானா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 97 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[9]

சர்ச்சை தொகு

2017 ஆம் ஆண்டில் ஆப்கானித்தானில் பிறந்த இடச்சுக் குடியரசை சேர்ந்த பெண் ஒருவர் தான் இமாத் வசிமுடன் உறவில் இருந்ததாகக் குற்றம் சாட்டினார். தாங்கள் இருவரும் இலண்டனில் சந்தித்தாகவும் . இமாத் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி பின் தன்னை ஏமாற்றியதாகவும் கூறிய அவர் இமாத் நேர்மையற்றவர் எனவும் குற்றம் சாட்டினார்.[10][11] ஆனால் இமாத் அந்தப் பெண் கூறுவது உணமை அல்ல எனவும் அவர் ஊடக வெளிச்சத்திற்காகப் பொய் கூறுபவர் எனவும் தெரிவித்தார்.[11][12] இதனால் அந்தப் பெண் இவர்கள் உரையாடிய வாட்சப் செய்திகளை வெளியிட்டார்.[10]

விருது தொகு

பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த இருபது20 வீரர் விருதினை இவருக்கு வழங்கியது[13]

உள்ளூர்ப் போட்டிகள் தொகு

முதல்தரத் துடுப்பாட்டம் தொகு

2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற சில்வர் லீக் குவைத் - இ- அசாம் கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் இஸ்லாமாபாத் மாநிலத் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். சனவரி 12, இஸ்லாமாபாத்தில் உள்ள அரங்கில் குவெத்தா துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல்தரத் துடுப்பட்டப்போட்டியில் இவர் அறிமுகமனார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் இரு ஓவர்கள் வீசி 12 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. மட்டையாட்டத்தில் 58 பந்துகளில் 33 ஓட்டங்களை எடுத்து இம்ரான் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 11 ஓவர்களை வீசி 63 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். அதில் ஒரு ஓவரை மெய்டனாக வீசி இரு இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இஸ்லாமாபாத் அணி ஓர் ஆட்டப் பகுதி மற்றும் 125 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற குவைத் - இ- அசாம் கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் பாக்கித்தானின் வடக்கு அணி சார்பாக விளையாடினார். செப்டமபர், 14 அப்போதாபாத்தில் உள்ள அரங்கில் கைபர் பக்துன்வா துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல்தரத் துடுப்பட்டப்போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 16 ஓவர்கள் வீசி 22 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இரு ஓவர்களாஇ மெய்டனாக வீசி ஓர் இலக்கினைக் கைப்பற்றினார்.88 ஓட்டங்களை எடுத்து சலத் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.

பட்டியல் அ தொகு

2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஏ பி என் - அம்ரோ கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் இஸ்லாமாப்த் லிபோர்ட்ஸ் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். மார்ச் 11, இஸ்லாமாப்பாத்தில் உள்ள மைதானத்தில் கராச்சி டால்பின்ஸ் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ துடுப்பாட்டம் போட்டியில் இவர் அறிமுகமனார். இந்தப் போட்டியில் 10 ஓவர்களை வீசி 31 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். அதில் ஒரு ஓவரை மெய்டனாக வீசி இரு இலக்குகளைக் கைப்பற்றினார்.இந்தப் போட்டியில் இஸ்லாமாபாத் லிபோர்ட்ஸ் துடுப்பாட்ட அணி ஒன்பது இலக்குகளில் வெற்றி பெற்றது. 2019 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. செப்டம்பர் 30, கராச்சி துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டையல் அ போட்டியில் ஏழு ஓவர்களை வீசி 38 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். அதில் ஒரு ஓவரை மெய்டனாக வீசி ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். மட்டையாட்டத்தில் எட்டு பந்துகளில் 12 ஓட்டங்கள் எடுத்து உதானா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 97 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

சான்றுகள் தொகு

  1. "Born in one country, played for another". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 27 April 2018.
  2. "Reporters turn Imad Wasim press conference into background interview - The Express Tribune". 29 August 2016.
  3. "Imad Wasim". Instonians. Archived from the original on 22 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Swansea-born Imad Wasim makes debut for Pakistan". BBC Sport. 19 July 2015. https://www.bbc.com/sport/0/wales/33589949. பார்த்த நாள்: 20 July 2015. 
  5. "Imad Wasim becomes the first man born in Wales to play international cricket for Pakistan". Wales Online. 19 July 2015. http://www.walesonline.co.uk/sport/cricket/imad-wasim-becomes-first-man-9690619. பார்த்த நாள்: 20 July 2015. 
  6. "Zimbabwe tour of Pakistan, 2nd T20I: Pakistan v Zimbabwe at Lahore, May 24, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 May 2015.
  7. "Pakistan tour of Sri Lanka, 3rd ODI: Sri Lanka v Pakistan at Colombo (RPS), Jul 19, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 July 2015.
  8. "Pakistan beat India by 180 runs to win ICC Champions Trophy 2017 final – as it happened". The Guardian. 21 February 2018.
  9. "Full Scorecard of Pakistan vs Sri Lanka 2nd ODI 2019 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-05.
  10. 10.0 10.1 "Imad Wasim scandal: Dutch woman warns other girls".
  11. 11.0 11.1 "Dutch woman accuses Imad Wasim of being 'disloyal to her'".
  12. "'Leaked' pictures with Afghan woman fake, claims Imad Wasim - Cricket - Dunya News".
  13. "Sarfaraz bags outstanding player of the year at PCB awards 2017". Dawn News. 14 September 2017. பார்க்கப்பட்ட நாள் 29 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமாத்_வசிம்&oldid=3543879" இலிருந்து மீள்விக்கப்பட்டது