இயற்கை வளம்

இயற்கை வளங்கள் (natural resources), அல்லது பொருளாதார ரீதியில் நிலம் மற்றும் மூலப்பொருள் அல்லது கச்சாப் பொருட்கள் எனப்படுபவை ஒப்பிட்டளவில் மனிதத் தலையீடுகளின்றித் தன் இயல்பு நிலையில் சூழல் தொகுதிகளில் காணப்படும் பொருட்கள் ஆகும். இயற்கை வளங்கள் சுற்றுச்சூழலிலிருந்து தருவிக்கப்படுபவை. இவற்றில் பெரும்பான்மையானவை நம் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவையாகவும் தேவைகளுக்குப் பயன்படக்கூடியவைகளாகவும் அமைகின்றன. இயற்கையில் காணப்படுவதும் மனித குலத்திற்குப் பயன்படுவதுமான கூறுகள் இயற்கை வளங்கள் எனப்படுகின்றன.

மழை காடு உள்ள பாடு-ஹிவ,மார்குயிஸ் என்ற உள்ள தீவு ஆனது எந்தவித தொந்தரவும் இல்லாத இயற்கை வளம் ஆகும்.
உப்சலா கிளாசேயர் உள்ள சான்டா குருஸ் பகுதி உள்ள அர்ஜென்டினா மாநிலம் இயற்கை வளம் உள்ள பகுதிக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்
கடல் இயற்கை வளத்தின் ஓர் எடுத்துக்காட்டு

இயற்கை வளங்களின் பண்புகள் அவைகளைச் சுற்றியுள்ள மாறுபட்ட சிற்றுயிர் முதல் மனிதன் வரையான உயிரினங்கள் உள்ள உலகம் மற்றும் அவைகளின் சுற்றுப்புற சூழ்நிலை பண்புகளின் வேறுபாட்டின் அடிப்படையில் மாறுகின்றன.

இயற்கை வளங்களின் பாகுபாடு(வகுப்பாக்கம்) தொகு

இயற்கை வளங்கள் பல்வேறு அடிப்படைகளில் பாகுபடுத்தப்படுகின்றன. அவற்றின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.:

  • உயிருள்ளவை: உயிர்க் கோளத்திலிருந்து வருவிக்கப்படுகின்றவை இதிலடங்கும். உதாரணமாக காடு மற்றும் காடு சார்ந்த பொருட்கள், விலங்குகள், உயிரினங்களின் சேதமாக்கலால் விளையும் பெட்ரோலியப் பொருட்கள் போன்றவை ஆகும்.
  • உயிரற்றவை: உயிரற்ற கூறுகளான நீர் நிலம் வளி என்பவற்றிலிருந்து வருவிக்கப்படுபவை.

அவற்றின் உருவாக்கப் படிகளின் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.:

  • வாய்ப்புள்ள வளங்கள்: எதிர்காலத்தில் பயன்படக் கூடிய வாய்ப்புள்ளதாக விருத்திபெறக்கூடிய வளங்கள் வாய்ப்புள்ள வளங்கள் எனப்படுகின்றன. உதாரணமாக இந்தியாவில் உள்ள பெட்ரோலியப் பொருட்கள்.
  • உண்மை வளங்கள்: தற்போது தரமும் அளவும் அறியப்பட்ட, பயன்பாட்டிலுள்ள வளத்தின் அளவு இதுவாகும் அவற்றின் புதுப்பிக்கப்படும் தன்மையின் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படும்:
  • புதுப்பிக்கக்கூடிய வளங்கள்: பயன்படுத்தப்படுதல் காரணமாக குறைவுபடுதலுக்குட்பட்டாலும் உடனடியாக அல்லது குறுகிய காலப்பகுதியில் மீளப் புதுப்பிக்கப்படக்கூடிய வளங்கள் இவை ஆகும்.
    உதாரணம்: வளி, காற்று, சூரிய ஒளி மற்றும் நீர். காட்டு வளமும் ஒப்பீட்டு ரீதியில் ஒரு மீளப்புதுப்பிக்கக்கூடிய வளமாகும்.
  • புதுப்பிக்கமுடியாத வளங்கள்: நீண்ட புவியியல் காலத்தில் உருவாக்கம் கொள்ளுகின்ற வளங்கள் இவை ஆகும். அழிக்கப்படுமாயின் இலகுவில் மீளப்புதுப்பிக்கப்பட மாட்டாது.
    உதாரணம்: உயிர்ச் சுவட்டு எரிபொருட்கள்(Fossil Fuel) கனிம வளங்கள்(Minerals)

எடுத்துக்காட்டுகள் தொகு

இயற்கை வளங்களில் ஒரு சில எடுத்துக்காட்டுகள்

  • பயிராக்கவியல் (Agronomy)[1]-என்பது அறிவியல் நுணுக்கங்களை கொண்டு தாவரங்களை உணவு , தீவணம்,எரி சக்தி மற்றும் நார்ப்பொருட்கள் சம்பந்தமான உற்பத்திகளைக் கையாள்வதாகும். இது மனிதனால் ஆக்கப்படுவதால் ஒரு இயற்கை வளமாகக் கொள்ளமுடியாது.
  • நீர், காற்று மற்றும் சுற்றுப்புற சுழ்நிலை.[1]

செடிகள்/பூக்கள்[1]

இயற்கை வளமுகாமைத்துவம் தொகு

இயற்கை வளமுகாமைத்துவம் என்பது நிலம்,நீர்,மண்வகைகள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகிய இயற்கை வளங்களின் தாக்கம் எவ்வாறு நடைமுறையில் வாழ்க்கை தரம் மற்றும் எதிர்கால வாழ்க்கை தரத்தை பாதிக்கிறது என்பதை முகாமைத்துவம் செய்வது ஆகும். இயற்கை வளமுகாமைத்துவம் நிலைப்பேறான அபிவிருத்தி கருதுகோளுடன் அதாவது நிலங்களை கையாளும் முறை மற்றும் சுற்றுச் சூழல் பராமரிப்பு ஆகியவற்றிற்கு நெருக்கமான தொடர்பு கொண்டது ஆகும்.

நகர சீரமைப்பு மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையை கையாளும் முறை போன்றவற்றிற்கு முரண்பாடாக இயற்கை வளங்களை பாதுகாக்கும் முறை ஆனது சுழ்நிலை அறிவியல் மற்றும் இயற்கை வளங்களை பற்றி நுணுக்கமாக தெரிந்து கொள்வது; இந்த இயற்கை வளங்களைப் பேணி காக்க உதவும் ஆதாரங்களையும் புரிந்து கொள்வது ஆகும்.[2]

இயற்கை வளங்களின் சீரழிவு தொகு

சமீப காலமாக இயற்கை வளங்களின் சீரழிவு மற்றும் அவைகளைத் தக்க வைத்துக் கொள்வதில் தொடர்ந்து முன்னேற்றம் காண்பது, ஆகியவற்றை பற்றி சிந்திப்பது இயற்கை வளத்தை முறைப்படுத்தும் வல்லுனர் குழுக்களின் வேலையாக உள்ளது. காடுகளின் மழை பெறும் பகுதி இயற்கையான ஈடு செய்ய முடியாத ஆதாரமான வளபகுதிகள் ஆகும். மற்ற பகுதிகளில் உள்ள உயிரின வகைகளுக்கும் மழை பெரும்பகுதிகளில் உள்ள உயிரின வகைகளுக்கும் உயிரின வேறுபட்டால அவ்வாறு இருக்கிறது. மழை பெரும் பகுதிகளில் இயற்கையாக உள்ள பல்வேறு உயிரின வகைகள் , பூமியின் வழி வழியாக தொடர்கின்றன. இது ஒரு மாற்று இல்லாத மூலதனம் ஆகும். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது ஆற்றல் சேமிப்பு மற்றும் இயற்கை மூலதனம் ஆகும். சூழ்நிலை பற்றிய சமுதாய இயக்கம், உயிரினங்களிடையே உள்ள தொடர்பு மற்றும் அவற்றின் இயக்கம், பசுமை புரட்சி ஆகியவை முக்கியமான சித்தாந்தமாக உள்ளது. ஒரு சிலர் இந்த இயற்கை சீரழிவு சமுதாயத்தின் அமைதியில்லா தன்மையினாலும் மற்றும் வளரும் நாடுகளில் உள்ள குழப்பங்ககளினாலும் ஏற்படுவதாக கருதுகின்றனர்.

சுரங்கங்கள், பெட்ரோல் எடுப்பு, மீன் பிடிப்பு, வேட்டை ஆடுதல் மற்றும் காடு வளம் ஆகியவை இயற்கை நமக்கு தந்த வளங்களாகும்.விவசாயம் மனிதனால் உருவாக்கப்பட்ட தொழிலாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், இயற்கை வளங்களை பாதுகாக்கும் வல்லுநருமான தியோடர் ரூஸ்வெல்ட், இயற்கை வளங்களை முறையில்லா முறையில் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இயற்கை வளம் பற்றி அமெரிக்காவின் மண்ணியல் துறை வரையறுப்பது என்னவென்றால் "நாட்டின் இயற்கை வளங்கள் என்பது தாது வளங்கள், வளமான நிலங்கள், நீர் மற்றும் பயோடா ஆகும்.[3]

இயற்கை வளங்களின் பாதுகாப்பு தொகு

 
இயற்கை வளம் மூலம் காற்றாலைகள் மற்றும் அவைகளின் மூலம் கிடைக்கும் 5 MW சக்தி, பெல்ஜியம் கடற்கரை பகுதியில் உள்ள தோர்டன் பாங்கில் பயன்படுத்தபடுகிறது.

ஆற்றல் சேகரிப்பு அறிவியல் என்பது இயற்கை மற்றும் பூமியின் நிலை மாறுபாடுகளைப் பொருத்து சிறு உயிரினங்களையும் அவற்றின் வாழ்விடங்களையும், சுற்றுப்புற சூழல்களையும் அதிகமான விகிதத்தில் அழிவதை தடுப்பதை அறிவியல் முறையில் ஆயும் படிப்பு ஆகும்.[4][5] இது அறிவியல், பொருளாதாரம் மற்றும் இயற்கை வளத்தை பாதுகாக்கும் முறை ஆகியவற்றை கொண்டு ஆராயும் துறை ஆகும்.[6][7][8][9]பாதுகாப்பு உயிரியல் என்பது 1978 - ஆம் ஆண்டு , சான்டிகோவில் அமைந்த கலிபோரினியா பல்கலைக்கழகத்தில் லா ஜோல்லாவில் ப்ருஸ் வில்காக்ஸ் மற்றும் மைக்கேல் சோல் நடத்திய கூட்டத்திற்கு வைக்கப்பட்ட பெயர் ஆகும்

வழக்கமான சேமிப்பு என்பது நிலங்களை நிர்வகிப்பது, காட்டு விலங்குகள் மற்றும் காட்டு தாவரங்கள் வாழும் இடங்களை பாதுகாப்பதாகும். முக்கியமாக அழியும் உயிரினங்களை அவற்றின் அழிவிலிருந்து பாதுகாப்பதாகும். சுற்றுப்புற சூழ்நிலையும் ஆற்றல் சேமிப்பும் குறைவாக உள்ள உயிரினங்களின் எண்ணிக்கை குறைவதை தடுப்பது ஆகும்.[10]. பல உயிரினங்களின் வகைகளின் பாதுகாப்பை பொறுத்து ஒரே ஒரு கொள்கையை உருவாக்குவது என்பது எளிதான ஒன்று அல்ல.

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 அமெரிக்காவின் விவசாய துறை - தேசிய வளங்களை பாதுகாக்கும் பணியில். பரணிடப்பட்டது 2009-10-08 at the வந்தவழி இயந்திரம் மே-2009 மாதத்தில் வந்த தகவல்
  2. மாஸே பல்கலைக்கழகம்: பயன்பாடு அறிவியலில் இளங்கலை பட்டம்[தொடர்பிழந்த இணைப்பு] (இயற்கை வளங்களை பாதுகாக்கும் முறை)
  3. "Natural Resources". U.S. Geological Survey. Archived from the original on 2008-09-17. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  4. எம்.இ. சோல் மற்றும் பி.எ.வில்காக்ஸ் 1980. உயிரியினங்களுக்கு இடையையுள்ள தொடர்பு மற்றும் அவைகளின் சூழ்நிலைகளுக்கும் அவைகளுக்கும் உள்ள தொடர்பு பற்றிய அறிவியல்: ஒரு முன்னேற்றமான சுழ்நிலையோடு தொடபுடைய பார்வை. சினோயுர் சங்கம் சுண்டேர்லாந்து, மாசசுசெட்ட்ஸ்
  5. எம்.இ. சோல் (1986). உயிரினங்களை பாதுகாக்கும் அறிவியல் என்பது என்ன?உயிர் அறிவியல், 35(11): 727-734 http://www.michaelsoule.com/resource_files/85/85_resource_file1.pdf பரணிடப்பட்டது 2019-04-12 at the வந்தவழி இயந்திரம்
  6. Soule, Michael E. (1986). Conservation Biology: The Science of Scarcity and Diversity. Sinauer Associates. பக். 584. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0878937951, 9780878937950 (hc). 
  7. ஹன்டர்.எம்.எல் (1996). 1996 உயிரினங்களை பாதுகாப்பதில் அடிப்படை கொள்கைகள் பிளாக்வெல் சயின்ஸ் ஐன்சி, கேம்பிரிட்ஜ், மச்சசுசெட்ட்ஸ்., ஐஎஸ்பின் 0-86542-371-7.
  8. குரும், எம்.ஜெ.மெப்பெ , ஜி.கே மற்றும் கரோல்,சி. ஆர்.உயிரினங்களை பாதுகாப்பதில் பின் பற்ற வேண்டிய கொள்கைகள். சிநோவூர் அஸோசேட்ஸ் சுண்டேர்லாந்து, எம்.ஏ ஐஎஸ்பின் 0-87893-518-5
  9. van Dyke, Fred (2008). Conservation Biology: Foundations, Concepts, Applications, 2nd ed.. Springer Verlag. பக். 478. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4020-6890-4 (hc). 
  10. Habitat Conservation Planning Branch. "Habitat Conservation". California Department of Fish & Game. Archived from the original on 2019-10-26. பார்க்கப்பட்ட நாள் 2009-04-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கை_வளம்&oldid=3648053" இலிருந்து மீள்விக்கப்பட்டது