இரட்டை நிலநடுக்கம்

கிட்டத்தட்ட ஒத்த அதிர்வுகளை கொண்ட இரண்டு நிலநடுக்கங்கள் ஒரே இடத்தில் ஏற்படும்போது அவை இரட்டை நிலநடுக்கம் (Doublet earthquake) எனப்படும்[1]. இவை தற்போது, ஒரேயளவான அதிர்வு கொண்டதாய் சில நேரங்களில்ஒரு நொடியின் பத்தில் சில பங்கான நேரவளவில் நிகழும் அல்லது பல ஆண்டுகள் இடைவெளியில் ஏற்படும் தனித்தனி நிலநடுக்கங்களாகக் கொள்ளப்படுகின்றன.[2] நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்படும் மறுநிலவதிர்வின் இயல்பான வடிவங்களிலிருந்து இது வேறுபட்டது. நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்படும் மறுநிலவதிர்வு அளவில் குறைவானதாக ஏற்படும்[3][4].

இரட்டை நிலநடுக்கங்களில், முதல் நிலநடுக்கம் இரண்டாம் நிலநடுக்கத்தை விட தூரமும் நேரமும் குறிப்பிட்டளவு விலகி இருக்கும்.[5][6].

ஜப்பானின் கூரில் தீவில் 2006 பிற்பகுதியிலும் 2007 ஆரம்பத்திலும் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் இரட்டை நிலநடுக்கம் ஆகும்.[7] 2006 நவம்பர் 15 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 8.3 ஆகும். 2007 சனவரி 13-ல் ஏற்பட்ட இரண்டாம் நிலநடுக்கத்தின் அளவு 8.1 ஆகும். ஒவ்வொரு நிலநடுக்கமும் சுனாமியை ஏற்படுத்தின.[8] 2007 நவம்பர் 15-ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தோன்றிய சுனாமி கலிபோர்னியா கடற்கரை அடைந்து, $500,000- $1,000,000 அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியது[9].

மேற்கோள்கள் தொகு

  1. "Magnitude 7.8 – VANUATU #Summary". USGS. 2009-10-07. Archived from the original on 2009-10-10. பார்க்கப்பட்ட நாள் 2009-10-09.
  2. Beroza, Cole & Ellsworth 1995, ப. 3977, 3978
  3. "How One Big Earthquake Triggers Another". Live Science. http://www.livescience.com/9572-big-earthquake-triggers.html. 
  4. See Omori's law, Båth's law, and Gutenberg–Richter law.
  5. "Doublet Earthquakes And Earthquake Dynamics". scientificblogging.com. January 30, 2008. பார்க்கப்பட்ட நாள் 2010-02-03.
  6. "Doublet Earthquakes And Earthquake Dynamics". Science 2.0. 2014-08-27. பார்க்கப்பட்ட நாள் 2016-11-01.
  7. Ammon, Charles J.; Kanamori, Hiroo; Lay, Thorne (2008), "A great earthquake doublet and seismic stress transfer cycle in the central Kuril islands", Nature, 451 (7178): 561, Bibcode:2008Natur.451..561A, doi:10.1038/nature06521, PMID 18235499.
  8. MacInnes, B.T., Bourgeois, J., Pinegina, T.K., Kravchunovskays, E., 2009. Tsunami geomorphology: erosion and deposition from the 15 November 2006 Kuril Island tsunami: Geology, v. 37, p. 995–998.
  9. "Central Kuril Island Tsunami in Crescent City and California.html". www.usc.edu. Archived from the original on 2016-04-01. பார்க்கப்பட்ட நாள் 2016-11-01.

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_நிலநடுக்கம்&oldid=3615600" இலிருந்து மீள்விக்கப்பட்டது