இரவுக்கு ஆயிரம் கண்கள்

2018 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படம்

இரவுக்கு ஆயிரம் கண்கள் (பொருள். The Night has a Thousand Eyes) என்பது 2018 இல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை மு. மாறன் இயக்கியுள்ளார்.

இரவுக்கு ஆயிரம் கண்கள்
இயக்கம்மு. மாறன்
தயாரிப்புதில்லி பாபு
இசைசாம் சி. எஸ்.
நடிப்பு
ஒளிப்பதிவுஅரவிந்த் சிங்
படத்தொகுப்புசான் லோகேஷ்
கலையகம்ஆக்சஸ் பிலிம் பேக்கடரி
விநியோகம்24PM
வெளியீடுமே 11, 2018 (2018-05-11)
ஓட்டம்121 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அருள்நிதி, அஜ்மல் அமீர், மகிமா நம்பியார், வித்யா பிரதீப், சாயா சிங், மற்றும் சுஜா வருணே போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆனந்த் ராஜ் (நடிகர்), ஜான் விஜய், லட்சுமி ராமகிருஷ்ணன், மற்றும் ஆடுகளம் நரேன் போன்றோரும் நடிக்கின்றனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

நடிகர்கள் தொகு

குலமகள் ராதை (1963) என்ற திரைப்படத்தில் வருகின்ற இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற பாடல் வரியை தலைப்பாக வைத்தனர். இப்படத்தின் இயக்குநர் மு. மாறன் ராகவா லாரன்ஸ் மற்றும் கே. வி. ஆனந்த் அவர்களுடன் துணை இயக்குனராகப் பணியாற்றினார்.[1][2]

குற்றம் 23 (2017) திரைப்படத்தில் நடித்தால் மகிமாவை செவிலியர் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்தார்.[3]

கதைமாந்தர் பெயர்ச் சிறப்பு தொகு

இப்படத்தின் முக்கிய கதைமாந்தர்கள் அனைவருக்கும் பிரபல தமிழ் மர்மக்கதை எழுத்தாளர்களின் துப்பறியும் ஆஸ்தான கதாபாத்திரங்களின் பெயர் வைத்து பாத்திரப் படைப்பை படைத்திருப்பது சிறப்பாகும். பரத்&சுசீலா பட்டுக்கோட்டை பிரபாகர், நரேந்திரன்&வைஜெயந்தி- அனிதா முருகேசன் சுபா, கணேஷ்&வசந்த் சுஜாதா, விவேக்&ரூபலா ராஜேஷ்குமார் ஆகியோரின் பிரதான கதாபாத்திரங்களாகும் [4] .

வெளி இணைப்புகள் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "Arulnithi gets a chartbuster song title for his next". deccanchronicle.com. 11 February 2017. பார்க்கப்பட்ட நாள் 19 April 2017.
  2. "Arulnithi to sport a new look in his upcoming crime thriller — Times of India". indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 19 April 2017.
  3. "Mahima to pair opposite Arulnithi — Times of India". indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 19 April 2017.
  4. மேற்குறிப்பிட்ட எழுத்தாளர்களின் பல துப்பறியும் நாவல்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவுக்கு_ஆயிரம்_கண்கள்&oldid=3659460" இலிருந்து மீள்விக்கப்பட்டது