இருண்ட நெபுலா

இருண்ட நெபுலா (Dark Nebula) நெபுலாவிலிருந்தே மற்ற விண்பொருட்கள் தோன்றின.நெபுலா என்ற லத்தின் சொல்லுக்கு பனிமூட்டம் அல்லது புகை என்று பொருள். முதன்முதலாக சிறிய தொலைநோக்கிகளின் மூலம் விஞ்ஞானிகள் வானத்தைப் பார்க்கத் தொடங்கியபோது ஒளியுடன் கூடிய புகை போன்ற அமைப்புகளைக் கண்டார்கள். வழமையாக நெபுலாக்களில் புதிய பல நட்சத்திரங்கள் உருவாகும். உதாரணமாகக் கழுகு நெபுலாவைக் குறிப்பிடலாம். இப்படியான அண்டவெளி முகில்களில் உள்ள வாயுக்கள் ஈர்ப்பால் ஒன்றிணைந்து நட்சத்திரங்களை உருவாக்குகின்றன. விண்மீன்களாக உருவாகாத மீதி முகில் பிரதேசங்கள் விண்மீன்களின் ஈர்ப்பால் ஒன்றிணைந்து கோள்கள் உருவாகின்றன. தூசு, ஐதரசன், ஹீலியம் மற்றும் ஏற்றமடைந்த வாயுக்களால் ஆன திரளான முகிலே நெபுலா (Nebula) ஆகும். இந்த நெபுலாவே சூரியக் குடும்பம் உருவாகக் காரணம் ஆகும்.

[1]

தோற்றமும் பரிணாம வளர்ச்சியும் தொகு

சுமார் 4.568 பில்லியன்ஆண்டுகளுக்கு முன்னர் இராட்சத மூலக்கூறுகளாலான மேகத்தின் ஒரு சிறு பகுதி ஈர்ப்புக்குரிய மோதல் மூலம் தொடங்கப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது.

உடைந்து வீழ்ந்துகொண்டிருந்த பெரும்பாலான திரள், மையத்தில் ஒன்றுசேர்ந்து சூரியனாகஉருவெடுத்தது, மீதமிருந்தவை ஒரு மூல கோள் வட்டாகத் தட்டையானது, அதிலிருந்து கோள்கள், நிலவுகள், சிறுகோள்கள் மற்றும் இதர சிறு சூரியக் குடும்ப அமைப்புகள் உருவாயின.

விண்மீன்படலக் கோட்பாடு என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த உருமாதிரி முதன் முதலில் எமானுவல் சுவீடன்போர்க், இம்மானுவல் கன்ட் மற்றும் பீயெர்ரெ-சைமன் லாப்லேஸ்ஆகியோரால் 18 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. அதனைப் பின்தொடர்ந்து வந்த வளர்ச்சிகள் வான்ஆய்வியல், இயற்பியல், நில அமைப்பியல் மற்றும் கோள் அறிவியல் உட்பட பல்வேறு அறிவியல் துறைகள் என பின்னிப்பிணைந்திருக்கிறது. 1950 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட விண்வெளிக் காலம் மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட கூடுதல் சூரியக் கோள்கள் ஆகியவை இந்தச் சூரியக் குடும்ப மாதிரிகளைக் கேள்விக்குள்ளாக்கியதுடன் புதிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் வழிவகுத்தது.

சூரியக் குடும்பம் தொகு

சூரியக் குடும்பம் அதன் தொடக்க உருவாக்கம் முதல் படிப்படியாக வளர்ச்சிப்பெற்று வந்திருக்கிறது. தங்கள் மூல கோள்களைச் சுற்றிலும் சுற்றிக்கொண்டிருந்த வாயு மற்றும் துகள்களின் வட்டுகளிலிருந்து பல நிலவுகள் தோன்றியிருக்கின்றன, அதே நேரத்தில் இதர நிலவுகள் தனித்தே உருவாகி பின்னர் தம்முடைய கோள்களால் கைப்பற்றப்பட்டதாக நம்பப்படுகிறது. பூமியின் நிலவு போன்ற மேலும் சில, இராட்சத மோதல்களின் விளைவாக ஏற்பட்டிருக்கலாம். மண்டலங்களுக்கிடையிலான மோதல்கள் தொடர்ச்சியாக இன்றைய நாள் வரையில் நடைபெற்றுவந்திருக்கிறது மேலும் அவை சூரியக் குடும்பத்தின் பரிணாம வளர்ச்சியை மையம் கொண்டே இருந்து வருகிறது. கோள்களின் நிலைகள் அவ்வப்போது மாற்றம் கொண்டுள்ளது மேலும் கோள்கள் தங்கள் இடங்களை மாற்றியமைத்துக் கொண்டும் உள்ளன.இப்போதைய இந்தக் கோள்களின் இடப்பெயர்வுகள் தான் சூரியக் குடும்பத்தின் ஆரம்ப கால பரிணாம வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

கோள்கள் பற்றிய சில தகவல்கள் தொகு

'PLANET' என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து வந்தது - கிரேக்க

 'PLANET' என்பதன் பொருள் - அலைந்து திரிபவன்

சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் - 8[2]

முதல் நான்கு கோள்கள் - உட்கோள்கள் (புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்)

உட்கோள்கள் வேறு பெயர் - பாறைக் கோள்கள்

அடுத்த நான்கு கோள்கள் - வெளிக்கோள்கள் (வியாழன், சனி, யுரெனஸ், நெப்டியூன்)

வெளி கோள்கள் வேறு பெயர் - வாயு கோள்கள்

கோள்களில் மிக பெரியது - வியாழன்

கோள்களின் மிக சிறியது - புதன்

சூரியனுக்கு அருகில் உள்ள கோள் புதன்

சூரியனுக்கு தொலைவில் உள்ள கோள் - நெப்டியூன்

மிக வெப்பமான கோள் - வெள்ளி

மிக குளிர்ச்சியான கோள் - நெப்ட்யூன்

துணை கோள்கள் இல்லாத கோள்கள் - புதன், வெள்ளி

தன்னை தானே வேகமாக சுழலும் கோள் - வியாழன்

தன்னை தானே மெதுவாக சுழலும் கோள் - வெள்ளி

2° சாய்ந்து சூரியனை வலம் வரும் கோள் - வியாழன்

23 1/2° சாய்ந்து சூரியனை வலம் வரும் கோள் - பூமி

98° சாய்ந்து சூரியனை வலம் வரும் கோள் - யுரேனஸ்

கிழக்கில் இருந்து மேற்காக வலம் வரும் கோள் - வெள்ளி

கோள்கள் தன்னைத் தானே சுற்றுவது - சுழலுதல் (Rotation)

கோள்கள் சூரியனை சுற்றுவதற்கு - வலம் வருதல் (Revolution

மேற்கோள்கள் தொகு

  1. Di Francesco, James; Hogerheijde, Michiel R.; Welch, William J.; Bergin, Edwin A. (2002-11), "Abundances of Molecular Species in Barnard 68", The Astronomical Journal, 124 (5): 2749–2755, doi:10.1086/344078, ISSN 0004-6256 {{citation}}: Check date values in: |date= (help)
  2. Kozloff, Arielle P., "A Mixed Forecast: Dazzling Sun and Dark Clouds", Amenhotep III, Cambridge University Press: 213–224, ISBN 9780511997679
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருண்ட_நெபுலா&oldid=3393705" இலிருந்து மீள்விக்கப்பட்டது