இரு பிரிவு மண்டலம்

இரு பிரிவு மண்டலம் (ஜப். 両界曼荼羅 Ryōkai mandara) என்பது ஐந்து வித்யாராஜாக்களின் கர்பகோசதாதுவையும் ஐந்து தியானி புத்தரிகளின் வஜ்ரதாதுவையும் உள்ளடக்கிய ஒரு மண்டலம் ஆகும். இந்த மண்டலத்தில் சுமார் 414 பௌத்த தேவதாமூர்த்திகள் உள்ளதாக கருதப்படுகிறது.

வஜ்ரதாது புத்தரின் மாறாத பிரபஞ்சத்தன்மையையும், கர்பகோசதாது புத்தரின் வீரியம் நிறைந்த செயல்பாட்டுடன் கூடிய தன்மையையும் குறிக்கிறது. எனவே மகாயான பௌத்தத்தில் இந்த இரு மண்டலங்களும் தர்மத்தை முழுவதுமாக குறிப்பதாக கருதப்படுகிறது. இவையே வஜ்ரயான பௌத்தத்தின் கருவாகவும் விளங்குகிறது. ஜப்பானிய ஷிங்கோன் பௌத்தத்தில் இந்த மண்டலத்தின் படங்கள் சுவரில் மாட்டப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரு_பிரிவு_மண்டலம்&oldid=3913381" இலிருந்து மீள்விக்கப்பட்டது