இரெனே பாவலோரோ

அர்கெந்தீனா இதய அறுவை மருத்துவ வல்லுநர்

இரெனே கெரோனிமோ பாவலோரோ (René Gerónimo Favaloro, சூலை 12, 1923 – சூலை 29, 2000) ஒரு புகழ்பெற்ற அர்கெந்தீனா இதய அறுவை மருத்துவ வல்லுநரும் மாரடைப்பு நோய்க்குத் தீர்வாக இதயக் குழாய்க்கு மாற்றுவழி அமைக்கும் அறுவையைப்பற்றிய சிறந்த கல்வியாளரும் ஆவார். தொடை-கால் பகுதியில் காணப்படும் மிக நீளமான "சபனசு" கழிவுக் குருதிக்குழாய் (great saphenous vein) வழியாகச் செய்யும் மாற்றுப்பாதை அறுவை மருத்துவத்தில் புகழ்பெற்றவர்.

இரெனே பாவலோரோ
René Favaloro
பிறப்புஇரெனே கெரோனிமோ பாவலோரோRené Gerónimo Favaloro
சூலை 12, 1923
இலா பிளாட்டா, அர்கெந்தீனா
இறப்புசூலை 29, 2000(2000-07-29) (அகவை 77)
புவெனஸ் ஐரிஸ், அர்கெந்தீனா
இறப்பிற்கான
காரணம்
தன்னைத்தானே சுட்டு தற்கொலை
தேசியம்அர்கெண்டீனன்
படித்த கல்வி நிறுவனங்கள்இலா பிளாட்டா தேசியப் பல்கலைக்கழகம்
செயற்பாட்டுக்
காலம்
1949–2000
பெற்றோர்குவான் மானுவேல் பாவலோரா (Juan Manuel Favaloro) வும் கெனி ஈடா இரஃபேலி (Geni Ida Raffaeli)[1]
வாழ்க்கைத்
துணை
மரியா அண்டோனியோ இடெல்காடோ (1951–1998)
María Antonia Delgado
விருதுகள்இளவரசர் மஃகிடோல் விருது (1998), பெருவின் கதிரவ வரிசையர் (1973), இத்தாலியக் குடியரசின் தகுதிய வரிசையர் (1978), கனடாவின் கெயிர்டினர் அனைத்துலக விருது (1987), தங்கப் பட்டய விருது (1993), கோனெக்சு விருது (1993)
கையொப்பம்

இளமை வாழ்க்கை தொகு

பாவலோரோ 1923 இல் பிறந்தார்,[2]. அர்கெந்தீனாவில் உள்ள இலா பிளாட்டா என்னுமிடத்தில் அவரின் பாட்டனார் பாட்டி ஆகியவர்களால் வளர்க்கப்பெற்றார். பாட்டனாரும் பாட்டியும் இத்தாலியைச் சேர்ந்த சிசிலித்தீவினர்.[3] சிறு அகவையிலேயே காற்பந்தாட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இலா பிளாட்டாவைச் சேர்ந்த கிம்னேசியா இ எசுகிரீமா (Gimnasia y Esgrima La Plata), என்னும் நங்கறியப்பட்ட குழுவின் ஆதரவாளராக இருந்தார்.[4]

1936 இல், பாவலாரோ இலா பிளாட்டாவின் இரஃபேல் எர்னாண்டேசு தேசியக் கல்லூரியில் சேர்க்கப்பெற்றார். அங்கு தேர்ச்சி பெற்றபின்னர், இலா பிளாட்டா தேசியகப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் சேர்ந்தார். அப்படிப்பின் மூன்றாவது ஆண்டில் சான் மார்ட்டின் பல்துறை மருத்துவ மனையில் அகப்பயிற்சி மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினார். இம்மருத்துவ மனையில் புயனோசு ஏயிரசு மாநிலத்தில் காணக்கூடிய மிகவும் சிக்கலான மருத்துவ நிலைகள் உள்ளவர்கள் வருவார்கள். இந்த அகப்பயிற்சி மருத்துவநிலையில்தான் முதன்முதலாக நோயாளிகளை நேராகப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

பேராசிரியர்கள் கோசே மரியா மைனெட்டியும் பெடரிகோ ஈ.பி. கிறித்துமன் அவர்களும் நடத்திய மருத்துவ முறைகளை பாவலோரோ உடனிருந்து கண்டார். அவர்களின் எளிய சீர்மைபப்டுத்தப்பட்ட முறாய்களைக் கண்டார். இவற்றைப் பின்னர் தன்னுடைய இதய அறுவைமுறாய்களில் பயன்படுத்தினார். இது பிற்காலத்தில் புகழீட்டிய முறையாக அமைந்தது. 1949 ஆம் ஆண்டு மருத்துவப் பட்டப்படிப்பை வெற்றியுடன் நிறைவுசெய்தார்[4].

அதன் பின்னர் துணை மருத்துவர் பதவிக்கு விண்ணப்பித்தார், ஆனால் அந்தப் பதவி கிடைக்க பெரோனிய கட்சியில் (அரசியல் கட்சி) உறுப்பினராகவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதனை அவர் ஏற்கவில்லை. மாறாக இவர் இலா பாம்பா மாநிலத்தில் உள்ள கசிந்தோ அராவுசு (Jacinto Aráuz) என்னும் சிறிய நகரத்துக்கு இடம்பெயர்ந்தார். அங்கே அந்நகரத்தின் மருத்துவர் இறந்த பின்னர் அந்நகர மருத்துவர் பதவியை ஏற்றார். தன் உடன்பிறந்தார் குவான் கோசே (Juan José) அவர்களையும் மருத்துவ அகத்துக்கு அழைத்து வந்தார். 1951 இல் மரியா அண்டோனியோ இடெல்காடோ (María Antonia Delgado) என்பாரை மணந்தார்.[4]

சான்றுகள் தொகு

  1. Larocca, Bruno (2013-06-13). "El caso del Dr. Favaloro" [The Case of Dr. Favaloro]. Gatopardo (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-12.
  2. "Rene Favaloro: A pioneer in heart bypass surgery". Aljazeera.com. பார்க்கப்பட்ட நாள் 12 July 2019.
  3. "Omaggio delle Eolie al cardiochirurgo inventore del by-pass". Lisolaweb.com. March 31, 2008.
  4. 4.0 4.1 4.2 "Así vivió y amó el corazón de un genio". Gente.com.ar. Archived from the original on 2012-12-02. பார்க்கப்பட்ட நாள் 2019-07-14.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரெனே_பாவலோரோ&oldid=3544349" இலிருந்து மீள்விக்கப்பட்டது