இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பதின்மூன்றாவது திருத்தம்

இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பதின்மூன்றாவது திருத்தம் (Thirteenth Amendment (13A) to the Constitution of Sri Lanka) என்பது இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்குவதற்காக அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தச் சட்டமூலம் ஆகும்.[1] இத்திருத்தச் சட்டமூலத்தின் படி, சிங்களம், தமிழ் ஆகிய மொழிகள் நாட்டின் அதிகாரபூர்வ மொழிகள் ஆகவும் ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் ஆக்கப்பட்டது.[2]

வரலாறு தொகு

1987 சூலை 29 இல், அதிகாரங்களை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் முகமாக இலங்கை-இந்திய ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அரசுத்தலைவர் ஜெயவர்தனாவிற்கும் இடையில் கொழும்பு நகரில் கையெழுத்திடப்பட்டது.[3] இதனை அமுல் படுத்தும் வகையில் 1987 நவம்பர் 14 இல் இலங்கை நாடாளுமன்றம் 1978 அரசமைப்புச் சட்டத்திற்கு 13வது திருத்தத்தை அறிவித்து, இல. 42 மாகாண சபை சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Upasiri de Silva (ஏப்ரல் 3, 2013). "13th Amendment - President Rajapaksa can barter his Waterloo?". Sri Lanka Guardian. பார்க்கப்பட்ட நாள் 2013-05-23. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. Sabina Martyn (சனவரி 16, 2013). "In Post-Conflict Sri Lanka, Language is Essential for Reconciliation". Asia foundation. பார்க்கப்பட்ட நாள் 2013-05-23.
  3. R. Hariharan (July 28, 2010). "Looking back at the Indo-Sri Lanka Accord". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-05-26.
  4. "Sri Lanka - Provincial Councils". Priu.gov.lk. 2010-09-03. Archived from the original on 2009-07-07. பார்க்கப்பட்ட நாள் 2013-05-26.

வெளி இணைப்புகள் தொகு