இலாப்பெ சனக்கு

ஈரானிய சிற்றூர்

இலாப்பெ சனக்கு (Lappeh Zanak, பாரசீக மொழி: لپه زنك‎, Lappeh Zang, Lapeh Sang, Lapeh Zang)[1] என்ற கிராமமானது, கானியபாத் (Ghaniabad) ஊரக மாவட்டத்தில் உள்ளது. இந்த ஊரக மாவட்டமானது, இரே மண்டலத்தின் (شهرستان رئ Ray County) நிருவாகப் பிரிவினுள் அடங்கியுள்ளது. 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 628 நபர்களையும், அவர்கள் 201 குடும்பங்களிலும் வாழ்ந்து இருந்தனர்.[2]

இலாப்பெ சனக்கு
لپه زنك
கிராமம்
இலாப்பெ சனக்கு is located in ஈரான்
இலாப்பெ சனக்கு
இலாப்பெ சனக்கு
ஆள்கூறுகள்: 35°34′19″N 51°35′38″E / 35.57194°N 51.59389°E / 35.57194; 51.59389
நாடு ஈரான்
மாகாணம்தெகுரான் மாகாணம்
மண்டலம்இரே மண்டலம், ஈரான்
மாவட்டம்நடுவ மாவட்டம்
ஊரகம்கானியபாத்து ஊரகம்
மக்கள்தொகை (2006)
 • மொத்தம்628
நேர வலயம்IRST (ஒசநே+3:30)
 • கோடை (பசேநே)IRDT (ஒசநே+4:30)

இரே மண்டலம் தொகு

இந்ந நிலப்பகுதியானது, தெகுரான் மாகாணத்தில் உள்ள நிருவாக ஆட்சி மண்டலத்தில் ஒன்றாகும். இந்த மண்டலத்தின் தலைநகரம், இரே நகரம் ஆகும். இது உண்மையில் தெகுரானின் ஒரு பகுதியாகும். 2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,இந்த மண்டலத்தில், 71,711 குடும்பங்களில், 292,016 நபர்கள் வாழ்ந்தனர். இந்த மண்டலம், மேலும் நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை யாதெனில், நடுவ மாவட்டம், பாசாபூயே (Fashapuyeh) மாவட்டம், கக்ரிசாக் ( Kahrizak) மாவட்டம், காலே நவ்வு (Qaleh Now) மாவட்டம் ஆகும்.

மக்கள் தொகை தொகு

இங்கு பல்வேறு மொழியிலானப் பாரம்பரியக் குடும்பங்கள் வாழ்ந்தாலும், பெரும்பான்மையான ஈரானியக் குடும்பங்களில் பிறந்தவர்கள், எந்த வகையான உறவுகளை விடவும், தமது குடும்ப வழித்தோன்றல்களுக்கு, அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றனர். இதனால் அவர்கள் அருகருகே வாழ்ந்தாலும், தொலைவில் வாழ்ந்தாலும், சிறிய, பெரிய குடும்பங்களுக்கு இடையை நிலவும், குடும்ப உறவுப் பிணைப்புகள், அவரவர் நடத்தும் தொழில்களிலும், குடும்ப உறுப்பினர்கள் பின்னிப்பிணைந்து இயங்குகின்றனர்.[3] தெகுரான் மாகாணத்தில் 1,20,00.000 கோடிக்கும் மிகுதியான மக்கள் வசிக்கின்றனர். மேலும் இது ஈரானின் மிகுந்த மக்கள் தொகை அடர்த்தி கொண்ட பகுதியாக உள்ளது. இங்கு ஏறத்தாழ 86.5 சதவீதம் பேர் நகர்ப்புறங்களிலும், 13.5 சதவீதம் தெகுரான் மாகாண மக்கள் கிராமப்புறங்களிலும் வசிக்கின்றனர்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Lappeh Zanak ஐ GEOnet Names Server இல் என்ற இணைப்பில் காணலாம்.
  2. "Census of the Islamic Republic of Iran, 1385 (2006)". Islamic Republic of Iran. Archived from the original (Excel) on 2011-11-11. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  3. http://countrystudies.us/iran/52.htm
  4. http://irandataportal.syr.edu/socio-economic-data/statistical-yearbook
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலாப்பெ_சனக்கு&oldid=2878942" இலிருந்து மீள்விக்கப்பட்டது