இலிதியா சேரசுகாயா

இலிதியா சேரசுகாயா (Lidiya Tseraskaya) (Russian: Лидия Петровна Цераская) (1855 - 1931)ஓர் உருசிய சோவியத் வானியலாளர் ஆவார்.

இலிதியா சேரசுகாயா
பிறப்பு23 சூன் 1855
அஸ்டிரக்கான்
இறப்பு22 திசம்பர் 1931 (அகவை 76)
பணிவானியல் வல்லுநர்
அறிவியல் வாழ்க்கைப் போக்கு
துறைகள்மாறுபடும் விண்மீன்

இவர் அசுத்ரகானில் பிறந்து பீட்டர்சுபர்கு ஆசிரியர் நிறுவனத்தில் பட்டம் பெற்றார். இவர் மாஸ்கோ வான்காணகத்தில் பணிபுரிந்தார். இவர் 219 மாறும் விண்மீன்களைக் கண்டுபிடித்தார். அவற்றில் 1905 இல் கண்டுபிடித்த ஆர் வி தவுரி மாறும் விண்மீன் அதன் தனித்தன்மைக்காக பெயர்பெற்றது. வெள்ளியின் மொத்தல் குழிப்பள்ளம் சேரசுகாயா இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.[1]

இவர் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியராக விளங்கிய விதோல்டு சேரசுகியை மணந்தார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் "வி (W). சேரசுகி" எனும் பெயரில் வெளியிடப்பட்டன.[2]

குறிப்புகள் தொகு

  1. (ஆங்கிலம்) FindTheData : Where does the name for the astrogeological feature Tseraskaya come from? பரணிடப்பட்டது 2013-07-04 at Archive.today
  2. Hockey, Thomas; Trimble, Virginia; Williams, Thomas R.; Bracher, Katherine; Jarrell, Richard A.; Marché, Jordan D.; Ragep, F. Jamil (2009). The Biographical Encyclopedia of Astronomers. Bibcode: 2009bea..book.....H. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலிதியா_சேரசுகாயா&oldid=3792603" இலிருந்து மீள்விக்கப்பட்டது