இல்ம் என்பது அரபு மொழியில் அல்லது இசுலாமிய சமயத்தில் அறிவைக் குறிக்கப் பயன்படும் சொல். இச் சொல் எல்லா அறிவையும் குறிக்கிறது எனினும், 14 ம் நூற்றாண்டில் இல்ம் என்றால் சமய அறிவு என்ற கருத்தாக்கத்தை உலாமா கொண்டு வந்தார்கள்.[1]

இசுலாமிய சமயத்தில் இல்ம் பெறுவது ஊக்குவிக்கப்படுகிறது. இசுலாமிய பொற்காலத்தின் ஆக்க சக்தியாக இந்த உந்தல் அமைந்தது. இசுலாமிய நாகரிகத்தின் வீழ்ச்சிக்கும், இல்ம் சமய அறிவு மட்டும் என்று கருத்தாக்கம் செய்யப்பட்டது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Ziauddin Sardar & Zafar Abbas Malik. (2001). Introduction to Silam. London: Icon Books Ltd.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இல்ம்&oldid=2752348" இலிருந்து மீள்விக்கப்பட்டது