ஈகில்சு என்ற அமெரிக்க “கிராம ராக் இசை”க் குழு கிளென் பிரை, டான் என்லி, பெர்னீ லீடன், ரேண்டி மெய்சுனர் ஆகியோரால் 1971-இல் உருவாக்கப்பட்டது. தரப்பட்டியலில் ஐந்து முதலிட தனிப்பாடல்களையும் ஆறு பாடல் தொகுப்புகளையும் கொடுத்துள்ள இக்குழு 1970-களின் மிகப்பிரபலமான இசைக்குழுக்களுள் ஒன்றாக இருந்தது. ஈகில்சு இசையமைத்த ஓட்டல் கலிபோர்னியா என்ற பாடல் தொகுப்பு ரோலிங் இசுட்டோன் என்ற (இசைக்கான) பத்திரிகையின் “இதுவரை வெளியான தொகுப்புகளில் முதல் 500 மிகச்சிறந்த இசைத்தொகுப்பு” என்ற தரவரிசையில் 37-வது இடத்தைப் பிடித்தது. ஈகில்சின் “தேயர் கிரேட்டஸ்ட் ஹிட்ஸ்” என்ற தொகுப்பு அமெரிக்காவில் மட்டும் 29 மில்லியன் படிகளும் உலகளவில் மொத்தம் 42 மில்லியன் படிகளும் விற்று சாதனை படைத்தது. 1980-இல் இக்குழு பிரிந்து, மீண்டும் 1994-இல் ஒன்றிணைந்தது.[1][2][3]

ஈகில்சு
“லாங் ரோட் அவுட் ஆவ் ஈடன்” சுற்றின் போது (இ-வ): கிளென் பிரை, டான் என்லி, ஜோ வால்சு, திமொதி சிமிட்.
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம்லாசு ஏஞ்சலசு, கலிபோர்னியா.
இசை வடிவங்கள்ராக், ஹாட் ராக், கிராம ராக்,
இசைத்துறையில்1971–1980
1994–தற்போது வரையில்
இணையதளம்www.eaglesband.com
உறுப்பினர்கள்கிளென் பிரை
டான் என்லி
ஜோ வால்சு
திமொதி சிமிட்
முன்னாள் உறுப்பினர்கள்டான் பெல்டர்
ரேண்டி மெய்சுனர்
பெர்னீ லீடன்

மேற்கோள்கள் தொகு

  1. "Deacon Frey and Vince Gill Join The Eagles for Classic West-East Festivals". CMT. June 1, 2017. Archived from the original on December 1, 2017. பார்க்கப்பட்ட நாள் 15 March 2019.
  2. Willman, Chris (April 6, 2022). "Deacon Frey Leaves the Eagles After Long Run Filling in for Father Glenn Frey". Variety. பார்க்கப்பட்ட நாள் May 3, 2022.
  3. "Gold's Hall of Fame: Eagles". Gold. September 5, 2019. பார்க்கப்பட்ட நாள் September 3, 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈகில்சு&oldid=3769065" இலிருந்து மீள்விக்கப்பட்டது