ஈர்ப்பியல் மாறிலி

ஈர்ப்பியல் மாறிலி (gravitational constant அல்லது universal gravitational constant) என்பது இரு பொருட்களுக்கிடையிலான ஈர்ப்பு விசையைக் கணிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய இயற்பியல் மாறிலியாகும். இம்மாறிலி நியூட்டனின் மாறிலி (Newton's constant) எனவும் அழைக்கப்படுகிறது. இதனை G எனும் ஆங்கில எழுத்தால் குறிப்பர். (g - புவிஈர்ப்பு முடுக்கத்தைக் குறிக்கிறது.). ஈர்ப்பியல் மாறிலியின் அளவு கிட்டத்தட்ட 6.67408(31)×10−11 m3⋅kg−1⋅s−2[1] ஆகும்.

நியூட்டனுடைய ஈர்ப்பு பற்றிய விதியில் ஈர்ப்பியல் மாறிலி G ஒரு முக்கிய மாறிலியாகும்.

விதிகளில் பயன்பாடு தொகு

இரு பொருட்களுக்கிடையில் காணப்படும் ஈர்ப்பு விசையை அளப்பதற்கான சமன்பாட்டில் ஈர்ப்பியல் மாறிலி பயன்படுத்தப்படுகின்றது. இச்சமன்பாட்டில் m1, m2 என்பன இரு பொருட்களின் திணிவுகளைக் குறிக்கின்றன. r என்பது இரு பொருட்களுக்கிடையிலான தூரத்தையும், G என்பது ஈர்ப்பு மாறிலியையும் குறிக்கின்றது.

 

இம்மாறிலியை மிகத் துல்லியமாக இன்னமும் அளக்க முடியவில்லை. கிட்டத்தட்ட 1.2×10−4 எதிர்பார்க்கப்படும் வழுவோடு அளக்கப்பட்ட அளவீடு வருமாறு.

 

மேற்கோள்கள் தொகு

  1. "CODATA Value: Newtonian constant of gravitation". The NIST Reference on Constants, Units, and Uncertainty. US National Institute of Standards and Technology. June 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-09-25. 2014 CODATA recommended values {{cite web}}: Cite has empty unknown parameter: |month= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈர்ப்பியல்_மாறிலி&oldid=2746254" இலிருந்து மீள்விக்கப்பட்டது