உத்தரகாசி நிலநடுக்கம்

உத்தரகாசி நிலநடுக்கம் (1991 Uttarkashi earthquake) என்பது இந்திய நாட்டின் உத்தராகண்டம் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டம் மற்றும் கார்வால் பகுதிகளில் 1991 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தைக் குறிக்கிறது.

உத்தரகாசி நிலநடுக்கம்,1991
1991 Uttarkashi earthquake
உத்தரகாசி நிலநடுக்கம் is located in இந்தியா
உத்தரகாசி நிலநடுக்கம்
நாள்அக்டோபர் 20, 1991 (1991-10-20)
நிலநடுக்க அளவு6.8 Mw
ஆழம்10 km (6.2 mi)
நிலநடுக்க மையம்30°46′48″N 78°46′26″E / 30.780°N 78.774°E / 30.780; 78.774
பாதிக்கப்பட்ட பகுதிகள்இந்தியா
அதிகபட்ச செறிவுVIII (கடுமை)[1]
உயிரிழப்புகள்768 இறப்பு, 5,066 காயம்[1]

சேதம் தொகு

உந்தத்திறன் ஒப்பளவு அடிப்படையில் 6.8 என்ற நிலநடுக்கவியல் அளவில் அந்நிலநடுக்கம் அளவிடப்பட்டது. இமயமலைப் பகுதியின் பிரதான உந்துகைப் பகுதியில் இந்நிலநடுக்கம் நிகழ்ந்தது.[2] அப்போது கிட்டத்தட்ட 1294 கிராமங்களும் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 42,400 வீடுகள் இந்நிலநடுக்கத்தால் மிகவும் சேதமடைந்தன.[3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 National Geophysical Data Center. "Comments for the Significant Earthquake". பார்க்கப்பட்ட நாள் February 22, 2013.
  2. Rupture history and seismotectonics of the 1991 Uttarkashi, Himalaya earthquake [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Garhwal Earthquake of Oct. 20, 1991". National Information Centre of Earthquake Engineering. பார்க்கப்பட்ட நாள் 24 July 2013.
ஆதாரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தரகாசி_நிலநடுக்கம்&oldid=3354599" இலிருந்து மீள்விக்கப்பட்டது