உயிரொளிர்வு

உயிரொளிர்வு (Bioluminescence) என்பது ஒரு வாழும் உயிரினம் மூலம் ஒளியின் உற்பத்தி மற்றும் உமிழ்வு ஏற்படுவது ஆகும். உயிரொளிர்வு உயிரினங்களில் இயற்கையாக ஏற்படும் ஒரு வேதிம ஒளிர்வு, இங்கு ஆற்றலானது ஒளி உமிழ்வு வடிவத்தில் வெளிவிடப்படுகின்றது. மின்மினிப் பூச்சிகள், தூண்டில்மீன் மற்றும் இலுசிபெரின் (ஒரு நிறமி), இலுசிபெரேசு (ஒரு நொதி) போன்ற வேதிப் பொருட்களை உருவாக்கும் பிற உயிரினங்கள் உயிரொளிர்வை ஏற்படுத்தவல்லன. இலுசிபெரின் ஒட்சிசனுடன் வினைபுரிந்து ஒளியைத் தோற்றுவிக்கின்றது; வினைவேகத்தைக் கூட்டுவதற்கு இலுசிபெரேசு ஒரு ஊக்கியாகச் செயல்படுகிறது, சில நேரங்களில் கல்சியம், ஏடிபி போன்றவை இந்த எதிர்வினைக்குத் துணைக்காரணிகளாக உதவுகின்றன. இந்த வேதிய எதிர்வினை உயிரணுக்களுக்கு உள்ளே அல்லது வெளியே நிகழலாம்.[1] நின்றொளிர் காளான் உட்பட சுமார் 71 வகை பூஞ்சை வகைகள் உயிரொளிர்வு உயிரினங்கள் ஆகும்.[2]

மின்மினிப்பூச்சி
பொதுவான ஒளிரும்புழுவின் பெண்

மேற்கோள்கள் தொகு

  1. Kirkwood, Scott (Spring 2005). "Park Mysteries: Deep Blue". National Parks Magazine (National Parks Conservation Association): pp. 20–21 இம் மூலத்தில் இருந்து 2009-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090714114002/http://www.npca.org/magazine/2005/spring/mysteries.html. பார்த்த நாள்: 2010-06-14. 
  2. Bryner, Jeanna (5 October 2009). "Glow-in-the-Dark Mushrooms Discovered". Live Science. http://www.livescience.com/strangenews/091005-glowing-mushrooms.html. பார்த்த நாள்: 2009-10-06. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரொளிர்வு&oldid=3354639" இலிருந்து மீள்விக்கப்பட்டது