உருசிய இலக்கியம்

உருசிய மொழியில் எழுதப்பட்ட இலக்கியம் உருசிய இலக்கியம் ஆகும்.

வரலாறு தொகு

முதன் முதலில் உருசிய மொழியில் 17 ம் நூற்றாண்டில் மத்தியில் இலக்கியப் படைப்புகள் வெளிவந்தன. 19 ம் நூற்றாண்டில் உருசிய மொழியில் பல முக்கிய படைப்புகள் வெளியாகின. இந்த நூற்றாண்டே உருசிய இலக்கியத்தின் பொற் காலம் எனப்படுகிறது. இக் காலத்தில் உருசிய மொழியின் உன்னத படைப்பாளிகளான அலெக்சாண்டர் புசுகின், லியோ ரொல்சுரோய், ஃபியோடார் டாசுரோவுசுகி போன்றோர் வாழ்னர். சோவியத் ஒன்றியத்தின் எழுச்சி உருசிய மொழிக்கு உலகில் கூடிய முக்கியத்துவத்தை தந்தது. இக் காலப்பகுதியில் தமிழ் உட்பட்ட பல மொழிகள் உருசிய இலக்கியங்கள் மொழி பெயர்க்கப்பட்டன. ஒப்பீட்டளவில், தற்போது உருசிய இலக்கியம் ஒரு தேக்க நிலையில் உள்ளது.

கருப்பொருட்கள் தொகு

வாழ்கையில் வேதனை, இன்னல், துன்பம், அதில் இருந்து மீளுதல் உருசிய இலக்கியத்தின் ஒரு முக்கிய கருப்பொருளாக இருக்கிறது. இருத்தலியல் கோட்பாடுகளை உருசிய இலக்கியத்தில் விரிவாகக் காணலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருசிய_இலக்கியம்&oldid=1605172" இலிருந்து மீள்விக்கப்பட்டது