உருசிய தேசிய காற்பந்து அணி

உருசிய தேசிய காற்பந்து அணி (Russia national football team, உருசியம்: национа́льная сбо́рная Росси́и по футбо́лу) பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் உருசியாவின் சார்பில் பங்கேற்கும் காற்பந்தாட்ட அணியாகும். இவ்வணியை உருசிய காற்பந்து ஒன்றியம் (உருசியம்: Российский Футбольный Союз) நிருவகிக்கிறது. உருசியா ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியத்திலும் உறுப்பு நாடாக உள்ளது. 1960 இல் நடைபெற்ற முதலாவது ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியில் சோவியத் அணியாகப் பங்குபற்றி ஐரோப்பியக் கோப்பையை வென்றது.[2]

உருசியா
Shirt badge/Association crest
அடைபெயர்Сборная (ஸ்போர்னயா, தேசிய அணி)
கூட்டமைப்புஉருசிய காற்பந்து ஒன்றியம்
Российский футбольный союз
கண்ட கூட்டமைப்புஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா)
தலைமைப் பயிற்சியாளர்இசுதானிசுலாவ் செர்சேசொவ்
அணித் தலைவர்ஈகர் அக்கின்ஃபியேயெவ்
Most capsசிர்கேய் இக்னசேவிச் (127)
அதிகபட்ச கோல் அடித்தவர்
பட்டியல்
  • உருசிய அணியில்
    அலெக்சாந்தர் கெர்சாக்கொவ் (30)
    சோவியத் அணியில்
    அலேக் புளோகின் (42)
தன்னக விளையாட்டரங்கம்லூசினிக்கி அரங்கு, மாஸ்கோ
பீஃபா குறியீடுRUS
பீஃபா தரவரிசை70 4 (7 சூன் 2018)
அதிகபட்ச பிஃபா தரவரிசை3 (ஏப்ரல் 1996)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை70 (சூன் 2018–இன்று)
எலோ தரவரிசை38 5 (7 சூலை 2018)
அதிகபட்ச எலோ7 (ஆகத்து 2009)
குறைந்தபட்ச எலோ50 (29 மார்ச் 2017)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 உருசியா 2–0 மெக்சிக்கோ 
(மாஸ்கோ, உருசியா; 16 ஆகத்து 1992)
பெரும் வெற்றி
 சான் மரீனோ 0–7 உருசியா 
(சான் மரீனோ, 7 சூன் 1995)
 லீக்கின்ஸ்டைன் 0–7 உருசியா 
(வாதூசு, லீக்கின்ஸ்டைன்; 8 செப்டம்பர் 2015)
பெரும் தோல்வி
 போர்த்துகல் 7–1 உருசியா 
(லிஸ்பன், போர்த்துகல்; 13 அக்டோபர் 2004)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்11 (முதற்தடவையாக 1958 இல்)
சிறந்த முடிவுநான்காவது இடம் (1966)[1]
ஐரோப்பிய வாகையாளர்
பங்கேற்புகள்11 (முதற்தடவையாக 1960 இல்)
சிறந்த முடிவுவாகையாளர் (1960)
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 2017 இல்)
சிறந்த முடிவுகுழுநிலை (2017)

உருசிய அணி (1991 சோவியத் பிளவின் பின்னர்) மூன்று உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றது. 1994, 2002, 2014); 2018-இல் உலகக்கோப்பையை நடத்தும் நாடாக விளையாடத் தகுதி பெற்று, காலிறுதிப் போட்டி வரை விளையாடியது. நான்கு முறை ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றிருக்கிறது (1996, 2004, 2008 மற்றும் 2012). யூரோ 2008- இலேயே முதன்முறையாக குழுநிலையைத் தாண்டி அடுத்த நிலைக்குச் சென்றனர்.

உருசிய அணி தனது உள்ளக விளையாட்டுகளை மாஸ்கோவில் உள்ள லூசினிக்கி அரங்கில் விளையாடுகிறது. இதன் தற்போதைய பயிற்சியாளர் இசுதானிசுலாவு செர்சேசொவ் ஆவார்.

குறிப்புதவிகள் தொகு

  1. உருசிய அணியின் சிறந்த பெறுபேறு: 2018 இல் காலிறுதி. ஆனாலும், உருசியா சோவியத் ஒன்றியத்தின் பதில் அணியாக பீஃபா கருதுகிறது.
  2. "Russia– Association Information". FIFA.com. 15 July 2015. Archived from the original on 12 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 24-10-2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help); Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள் தொகு