உருப்பெருக்கம்

ஒரு பொருளின் உருவத்தை தோற்றத்தில் மாத்திரம் பெருப்பிப்பதே உருப்பெருக்கம் எனப்படும். எனவே உருப்பெருக்கத்தின் மூலம் பொருளின் பௌதிக அளவு பெருப்பிக்கப்படாது. எம் கண்களுக்கு மாத்திரம் பெரிதாகத் தென்படும். உதாரணமாக உருப்பெருக்கமானது உயிரியலில் சிறிய நுண்ணங்கிகளை நுணுக்குக்காட்டி மூலம் அவதானிக்கப் பயன்படும்.[1][2]

பூதக்கண்ணாடி மூலம் ஒரு முத்திரையை உருப்பெருக்கச் செய்தல்

உருப்பெருக்கத்துக்கான உதாரணங்கள் தொகு

  • பூதக் கண்ணாடி சாதாரணமாக அன்றாட வாழ்வில் சிறிய பொருட்களை பெரிதாக்கிக் காட்ட பயன்படுகிறது.
  • தொலைநோக்கி தூரத்தில் சிறிதாகக் கண்களுக்குத் தென்படும் பொருட்களை உருப்பெருக்கிக் காட்டும்.
  • நுணுக்குக்காட்டியானது மிகச் சிறிய அளவுடைய பொருட்களைப் பார்வையிட உதவும்.
  • ப்ரொஜெக்டர் உபகரணமானது கணனித் திரையில் சிறிதாக தென்படுவதை உருப்பெருக்கி பெரிய திரையில் விழச்செய்யும்.
 

மேற்கோள்கள் தொகு

  1. Ray, Sidney F. (2002). Applied Photographic Optics: Lenses and Optical Systems for Photography, Film, Video, Electronic and Digital Imaging. Focal Press. பக். 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-240-51540-4. https://books.google.com/books?id=cuzYl4hx-B8C&pg=PA40. 
  2. wayne (2021-03-22). "Magnification ratio and how to choose the Best macro lens" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-06.{{cite web}}: CS1 maint: url-status (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருப்பெருக்கம்&oldid=3769134" இலிருந்து மீள்விக்கப்பட்டது