உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கம்

உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கம் (ஆங்கில மொழி: Excommunication) என்பது ஒரு சமயக்குழுவின் உறுப்பினரை அச்சமயத்தின் உறுப்பு நிலையிலிருந்து நீக்கவோ அல்லது அதில் அவருக்கு இருக்கும் உரிமைகளைக் குறைக்கவோ, நீக்கவோ விதிகப்படும் கண்டன அறிக்கை அல்லது செயலாகும். இவ்வாறு உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கம் விதிக்கப்பட்டோ அறிக்கையிடப்பட்டோ இருக்கும்போது, ஒருவர் சமய செயல்களை நிறைவேற்றவும் பெறவும் தடை செய்ப்படுவர்.[1] இவ்வகை செயல்பாடு கிறித்தவத்தில் பெருவாரியாக பழக்கத்தில் உள்ளது என்றாலும், பிற சமயங்களிலும் பல்வேறு வகைகளிலும் உள்ளது. சில பிரிவுகளில் இத்தகையோரோடு எவ்வித தொடர்பும் கொள்ளாமல் அவர்களை ஒதுக்கி வைக்கும் பழக்கமும் உள்ளது.

திருத்தந்தை ஏழாம் கிரகோரி, புனித உரோமைப்பேரரசர் நான்காம் நென்றியினை திருச்சபையின் உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கும் கற்பனை ஓவியம்

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. திருச்சபைச்சட்டம் 1331