உலகளாவிய கிராமம்

உலகளாவிய கிராமம் அல்லது புவிக் கிராமம் (Global village) என்பது பல்வேறு விதமான தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டினால் புவியானது ஒரு கிராமமாகச் சுருக்கப்பட்டதை உருவகிக்கும் ஒரு சொற்றொடர் ஆகும். உலகளாவிய கிராமம் என்பது உலகளாவிய அளவில் பருப்பொருளியலுக்கும் சமூகவியலுக்கும் இடையிலான தொடர்பை விளக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக இணையத்தளம் மூலமாக செய்திகளை வெகு எளிதாக உலகம் முழுவதும் பரவச் செய்து உலகில் உள்ள மக்கள் ஒரு சிறிய கிராமத்தில் இருப்பதை போல மிகவும் எளிதாகவும் விரைவாகவும் தொடர்பு கொள்ளப்படுகிறார்கள்.

கனடாவைச் சேர்ந்த மார்சல் மெக்லூகன் என்னும் மெய்யியலாளர் 1960களில் இச்சொற்றொடரை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார்.[1] உலகம் மின்னணுத் தொழில்நுட்பத்தினால் எவ்வாறு ஒரு கிராமமாகச் சுருங்கியுள்ளது எனபதையும்,[2] எவ்வாறு தகவல்கள் ஒரே நேரத்தில் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் உடனடியாக இயக்கப்படுகின்றன எனவும் விளக்கினார்.[3]

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Eric McLuhan (1996). "The source of the term 'global village'". McLuhan Studies (issue 2). பார்க்கப்பட்ட நாள் 2008-12-30. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. McLuhan, Marshall. Understanding Media. (Gingko Press, 1964, 2003) p6.
  3. McLuhan, Marshall. Letters of Marshall McLuhan. (Oxford University Press, 1987) p254.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகளாவிய_கிராமம்&oldid=3064001" இலிருந்து மீள்விக்கப்பட்டது