உழவு (Tillage) என்பது கருவிகளையும் எந்திரங்களையும் கொண்டு மண்ணை விதை முளைப்பதற்கும், பயிர் விளைச்சலுக்கும் ஏற்றபடி பக்குவப்படுத்தி ஆயத்தப் படுதலாகும்.

உழவு
உழவு

பண்படுத்துதல் (Tilth) என்பது உழவின் மூலம் அடையப்பெறும் நிலையாகும். பண்படுத்துதலில் மேம்போக்கான பண்படுத்துதல், நடுத்தர பண்படுத்துதல், நுண்ணிய பண்படுத்துதல் என மூன்று வகைகள் உண்டு.

முதல்நிலை உழவு (Primary Tillage) என்பது அறுவடைக்கு அடுத்து உடனடியாக நிலத்தை உழுது பண்படுத்துதலே முதல்நிலை உழவு எனப்படுகிறது. முதன்மை உழவு எனப்படுவது மண்ணை நன்கு உழுது, நிலத்தை விதைப்புக்கு ஏற்றாற் போல் தயார்படுத்துதல் ஆகும். இதில் களைகள், பயிர் கட்டைகள் போன்றவை இருப்பின் உள் மூடப்பட்டு மட்க வைக்கப்படுகின்றன. நாட்டுக் கலப்பை,இரும்பு இறக்கைக் கலப்பை,போஸ் கலப்பை மற்றும் டிராக்டர்கள் கொண்டு உழுவது முதல்நிலை உழவு ஆகும்.

இரண்டாம்நிலை உழவு (Secondary Tillage) என்பது முதல்நிலை உழவுக்குப்பின் மண்ணை நுண்ணிய முறையில் பண்படுத்துவதற்கு செய்யப்படும் உழவு இரண்டாம் நிலை உழவு எனப்படுகிறது. கட்டியை உடைத்தல் மட்டப்படுத்துதல், கீறிவிடுதல்போன்றவை இரண்டாம்நிலை உழவு ஆகும்.

மூன்றாம்நிலை உழவு (Tertiary Tillage) என்பது பார் ஒட்டுதல், வரப்புக் கட்டுதல் போன்றவை மூன்றாம் நிலை உழவு ஆகும்.

குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

நூல்தொகை தொகு

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
உழவு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உழவு&oldid=3759087" இலிருந்து மீள்விக்கப்பட்டது