ஊவா மாகாணசபைத் தேர்தல், 2014

6வது ஊவா மாகாணசபைத் தேர்தல் (6th Uva Provincial Council election) இலங்கையின் ஊவா மாகாணசபைக்கு 34 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2014 செப்டம்பர் 20 இல் நடைபெற்றன. ஊவா மாகாணத்தில் 942,730 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.[1] இலங்கை மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் படிநிலையில் நடைபெற்று வருகின்றன. இவ்வகையில் 5வது ஊவா மாகாணசபை 2014 சூலை 11 இல் கலைக்கப்பட்டது. வேட்பு மனுக்கள் 2014 ஆகத்து 6 வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன .ஏனைய எட்டு மாகாணசபைகளின் தேர்தல்கள் 2012, 2013, 2014 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றன.

6வது ஊவா மாகாணசபைத் தேர்தல், இலங்கை

← 2009 20 செப்டம்பர் 2014

ஊவா மாகாணசபைக்கு 34 இடங்கள்
  First party Second party
 
தலைவர் மகிந்த ராசபக்ச ரணில் விக்கிரமசிங்க
கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சி
மொத்த வாக்குகள் 349,906 274,773
விழுக்காடு 51.25% 40.24%
உறுப்பினர்கள் 19 13
சபைகள் 1 0

22 அரசியல் கட்சிகளும் 11 சுயேட்சைக் குழுக்களும் இத்தேர்தலில் போட்டியிட்டன. இவைகளின் சார்பில் 617 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஊவா மாகாணத்தில் 9 இலட்சத்து 42 ஆயிரத்து 730 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். பதுளை மாவட்டத்திலிருந்து 18 உறுப்பினர்களும், மொனராகலை மாவட்டத்திலிருந்து 14 உறுப்பினர்களும் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்டனர்.[1]

பின்புலம் தொகு

ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, இலங்கை-இந்திய ஒப்பந்தம் 1987 அக்டோபர் 29 இல் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் இலங்கை அரசு அதன் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகும்.[2] இதன்படி 1987 நவம்பர் 14 இல் இலங்கை நாடாளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது.[3][4] 1988 பெப்ரவரி 3 ஆம் நாள் ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன[5].

2009 இல் இடம்பெற்ற 5வது ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 25 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 7 இடங்களையும், மக்கள் விடுதலை முன்னணி ஒரு இடத்தையும், மலையக மக்கள் முன்னணி ஒரு இடத்தையும் கைப்பற்றியிருந்தன.

இம்முறை தேர்தலில் ஆளும்கட்சியின் பங்காளிக் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன தனித்து சனநாயக ஐக்கிய முன்னணி என்ற கட்சியூடாகப் போட்டியிட்டன.

முடிவுகள் தொகு

[உரை] – [தொகு]
2014 செப்டம்பர் 20 ஆம் நாள் நடைபெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகள்
கட்சி பதுளை மொனராகலை இருக்கைகள் வாக்குகள்
வாக்குகள் இருக்கைகள் வாக்குகள் இருக்கைகள் 2014 2009 +/− வாக்குகள் %
  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 209,056 9 140,850 8 [1]19 25 -6 349,916  58.55%
  ஐக்கிய தேசியக் கட்சி 197,708 8 77,065 5 13 7 +6 284,773 32.03%
  மக்கள் விடுதலை முன்னணி 20,625 1 15,955 1 2 1 +1 36,680  6.63%
  சனநாயகக் கட்சி 3,202 0 2,874 0 0 - - 6,076  1.19%
மொத்தம் 441,371 18 241,426 14 34 34 0 682,797  100%
வாக்காளர் வருகை:   76.06%
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம்

குறிப்பு:

1. ^ இரண்டு மேலதிக இடங்கள் உட்பட்டதாக

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "ஊவா தேர்தல் செப்டெம்பர் 20". தினகரன். 7 ஆகத்து 2014. பார்க்கப்பட்ட நாள் 7 ஆகத்து 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Indo Sri Lanka Agreement, 1987". TamilNation.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Introduction". Official Website of the Government of Sri Lanka. இலங்கை அரசு. Archived from the original on 2009-07-07. பார்க்கப்பட்ட நாள் 2014-08-07.
  4. "Amendments to the 1978 Constitution". Official Website of the Government of Sri Lanka. இலங்கை அரசு. Archived from the original on 2009-08-17. பார்க்கப்பட்ட நாள் 2014-08-07.
  5. "North-East merger illegal: SC". LankaNewspapers.com. 17 October 2006. http://www.lankanewspapers.com/news/2006/10/8947.html.