எட்மோனியா லூவிசு

மேரி எட்மோனியா லூவிசு (யூலை 4, 1844 – செப்டம்பர் 17, 1907) ஒரு அமெரிக்க சிற்பி, இவர் தன் வேலை வாழ்நாளில்  பெரும் பகுதியை உரோம்  இத்தாலியில் கழித்தார். இவரே முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க மற்றும் அமெரிக்க தொல் குடியினர் மரபில் பன்னாட்டு  புகழும்    உலக  நுண்கலைகளில்  பெயரும் பெற்ற முதல் பெண்மணி  ஆவார்.  இவருடைய  கருப்பு  இனத்து  மக்களும்  அமெரிக்க  தொல்  குடி  இன  மக்களும் கலந்தவாறே  இவருடைய புதிய பாணி சிற்பங்கள் பெரும்பாலும்  இருக்கும். இவர் அமெரிக்க உள்நாட்டுப் போர் காலகட்டத்தில்  புகழ்  பெறத்தொடங்கினார். .19ஆம்  நூற்றாண்டில்  அமெரிக்க  கலை  மையநீரோட்டத்தில் அறியப்பட்ட  ஒரே  ஆப்பிரிக்க அமெரிக்க பெண்  இவராவார்.  2002இல் சிறந்த 100  சிறந்த ஆப்பிரிக்க  அமெரிக்கர்கள்  பட்டியலில் இடம்  பிடித்தார்.[1]

எட்மோனியா லூவிசு
பிறப்புஎட்மோனியா லூவிசு
c. (1844-07-04)சூலை 4, 1844
கிரின்புசு, நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா
இறப்புசெப்டம்பர் 17, 1907(1907-09-17) (அகவை 63)
இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
தேசியம்அமெரிக்கன்
கல்விஓப்பிரெலின் கல்லூரி
அறியப்படுவதுசிற்பி
அரசியல் இயக்கம்புதிய பாணி
Patron(s)யுலிசீசு கிராண்ட்

வாழ்க்கை வரலாறு தொகு

ஆரம்ப வாழ்க்கை தொகு

எட்மோனியா லூவிசு யூலை 4, 1844 பிறந்ததாக  பட்டியலிடப்பட்டுள்ளது நியூ யோர்க்   மாநிலத்திலுள்ள   கிரின்புசு  என்னுமிடத்தில்  இவர்  பிறந்தார்.  கிரின்புசு  இப்போது  ரென்சுசில்லர்  என  அழைக்கப்படுகிறது.[2] லூவிசின் தந்தை ஆப்பிரிக்க-எய்ட்டி  இனத்தவர்,  தாய் ஆப்பிரிக்க  அமெரிக்க  இன  மரபுள்ள   அமெரிக்க  தொல் குடி  இனத்தைத்  சேர்ந்தவர்.[3] லூவிசின்  தாய்  சிறந்த கை  வினைக்  கலைஞரும்   தையற்காரரும்  ஆவார்.  தந்தை பெருமுதலாளியின் வேலைக்காரன்.[4][5]  இக் குடும்ப பின்னணியால் ஈர்க்கப்பட்டு லூவிசு பின்னர்  சிற்ப  வேலையை  தேர்ந்தெடுத்தார்

லூவிசுக்கு ஒன்பது வயது அடையும் போது அவரின் பெற்றோர்கள் இறந்துவிடுகின்றனர்.  அவரின்  தந்தை  1847இல் இறந்துவிடுகிறார். அவரின் மூத்த சகோதரரும் அவரும் அவரின் தாய் வழி உறவுகளால் தத்து எடுத்து  வளர்க்கப்படுகிறார்கள்.  அவரின் மூத்த  சகோதரர் சாமுவேல் 1835ஆம் ஆண்டு  எயிட்டியில்  லூவிசின் தந்தைக்கும் அவரது  முதல்  மனைவிக்கும் பிறந்தவர்.  அவரது  தந்தை  இறக்கும் போது சாமுவேல் முடி திருத்துநராக வேலைக்கு சென்றிருந்தார் அப்போது அவருக்கு 12 வயது ஆகியிருந்தது. எட்மோனியாவும் சாமுவேலும் 4 ஆண்டுகள்  தாய் வழி  உறவுகளுடன்  நயாகரா அருவி  நகரத்திலேயே இருந்தனர்.  லூசிசும்  அவரது  உறவுகளும் அமெரிக்க தொல்  குடிகளின்  கூடைகளையும்  நினைவுச்சின்னங்களையும் நயாகரா அருவி டொராண்டோ நியு யார்க் நகரங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு  விற்று  பணம்  சம்பாதித்தனர்.  அச்சமயத்தில் இவரது  பெயர் தொல் குடிகள்  இவருக்கு வைத்த  பெயரான  வைல்ட்பையர்   என்றும்  சாமுவேலின்  பெயர்  சன்சைன்  என்றும் கூறுவார்கள்..[6][7] 1852ஆம் ஆண்டு  சாமுவேல் சான் பிரான்சிசுக்கோ, கலிபோர்னியா நகருக்கு ,  கேப்டன் எசு. ஆர். மில்சு பாதுகாப்பில்  சென்றார்.எனினும் சாமுவேல் தன் படிப்புக்கும் தங்கும் இடத்திற்குமான பணத்தை  தந்துகொண்டிருந்தார். 1856ஆம்  ஆண்டு லூவிசு  மக்குராவில்லில் உள்ள நியூயார்க் நடுவண் கல்லூரியில் சேர்ந்தார்..[8] 1958ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வழக்கமான கல்லூரி படிப்புக்கு தயார் செய்யும் சிறப்பு வகுப்பில் படித்தார். மூன்று ஆண்டுகள் கழித்து அக்கல்லூரியை விட்டு வெளியேறினார்.[9]

மேற்கோள்கள் தொகு

  1. Asante, Molefi Kete (2002). 100 Greatest African Americans: A Biographical Encyclopedia.
  2. Passport application 21933, accessed on Ancestry.com on November 1, 2011.
  3. Wolfe 12.
  4. Wolfe 15.
  5. Hartigan, Lynda Roscoe (1985). Sharing Traditions: Five Black Artists in Nineteenth-Century America : From the Collections of the National Museum of American Art. Washington, DC: Smithsonian Institution Press. இணையக் கணினி நூலக மையம்:11398839. 
  6. http://americanart.si.edu/collections/search/artist/?id=2914
  7. Child of the Fire: Mary Edmonia Lewis and the Problem of Art History’s Black பக்கம் 4
  8. Buick, Kirsten Pai (2010). Child of the Fire: Mary Edmonia Lewis and the Problem of Art History's Black and Indian Subject. Durham, North Carolina: Duke University Press. பக். 4. 
  9. Buick (2010). Child of the Fire. பக். 5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்மோனியா_லூவிசு&oldid=3387031" இலிருந்து மீள்விக்கப்பட்டது