எட்வர்டு

ஆண்களுக்கு சூட்டிய பெயர்

எட்வர்டு (Edward) என்பது ஆங்கில இயற்பெயர்களுள் ஒன்றாகும். இப்பெயரானது, பண்டைய ஆங்கிலச் சொல்லில் (Éadweard) இருந்து தோன்றியதாகக் கருதுகின்றனர். இதன் பொருள், செல்வம், வளம், நல்வாய்ப்பு, காவலன், பாதுகாப்போன் என்பனவாகும். இப்பெயர் பலநபர்களைக் குறித்தாலும், குறிப்பாக, இங்கிலாந்தை பல்வேறு காலங்களில் ஆண்ட எட்டு மன்னர்களையேக் குறிக்கின்றது.

எட்வர்டு
எட்வர்டு I, இங்கிலாந்து அரசன்
ஒலிப்பு/ˈɛdwərd/
Polish: [ˈedvart]
இடாய்ச்சு: [ˈedvart]
பாலினம்ஆண்
பூர்வீகம்
சொல் / பெயர்பண்டைய ஆங்கிலம்: Ēadweard
பொருள் செல்வம், வளம், நல்வாய்ப்பு, காவலன், பாதுகாப்போன்
வேறு பெயர்கள்
வேறு பெயர்கள்Eduard, Édouard, Eduardo, Edvard, Eduardas, Edvardas, Eddie, Ed, Edd, Ned, Ted, Woody

முதலாம் எட்வர்டு தொகு

முதலாம் எட்வர்டு (Edward I of England) (1239–1307) என்ற பெயரினை உடையவன், இங்கிலாந்தின் அரசன் ஆவான். [1] இவரது தந்தையான மூன்றாம் என்ரி இறந்தபின் 1272 ஆம் ஆண்டு பட்டத்துக்கு வந்தான். 1276 ஆம் ஆண்டு வெல்சு மக்களுடன் போர் தொடங்கி, 10 ஆண்டுகளுக்குப்பின், அவர்களை வெற்றிக் கொண்டான். அதனால் வேல்சு நாடு, இங்கிலாந்தின் ஒரு பகுதியாயிற்று. அதுமுதல் இங்கிலாந்துப் பட்டத்து இளவரசன், வேல்சு இளவரசன் என்னும் பட்டம் பெற்று வருகிறான். சுகாட்லாந்து மீது படையெடுத்துச் சென்று, அந்நாட்டுக் கலகத்தை அடக்கி, அதை இங்கிலாந்துடன் இணைப்பதில், தம் வாழ்க்கையிற் பெரும்பகுதியைக் கழித்தார். எனினும் சுகாட்லாந்து மக்களின் கலகத்தை முற்றிலும் அடக்க, இவரால் முடியவில்லை. சுகாட்லாந்து மன்னர் புரூசை அடக்குவதற்கு, இங்கிலாந்தினின்றும் புறப்பட்ட எட்வர்டு, வழியில் மரணமடைந்தார். நாடாளுமன்ற உத்தரவு பெற்றே, வரிகள் வசூலிக்கப்பட வேண்டும் என்பதை, இம்மன்னர் ஏற்றுக்கொண்டார். அரசாங்கத்தில் பல சீர்த்திருத்தங்களைச் செய்தார். நிலமானிய திட்டத்தை ஒழிப்பதற்குக் கொண்டு வரப்பட்ட சட்டங்களையும், கிறித்தவத் திருச்சபையாரின் அதிகாரங்களை ஓரளவு குறைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டங்களையும் ஆதரித்தார். இதுபற்றியே ரோமானிய நாட்டுச் சட்டங்கள் வகுப்பதில் புகழ்பெற்றிருந்த, ஜசுடினியன் மன்னர் பெயரை வைத்து, இவரை 'இங்கிலாந்து ஜசுடினியன்' என்று அழைத்தனர்.

எட்வர்டு படங்கள் தொகு

இரண்டாம் எட்வர்டு தொகு

இரண்டாம் எட்வர்டு (Edward II of England) (1284–1327) இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டின் மகனாவார். 1307 ஆம் ஆண்டு தந்தை இறந்ததும் மன்னர் ஆனார். மன்னர் ஆகுமுன் 'வேல்சு இளவரசர்' என்னும் பட்டம், இவருடைய தந்தையால், இவருக்கு 1301 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இவரே முதன் முதல் இப்பட்டம் பெற்றவர் என்பது வரலாற்றுக் குறிப்பாகும். இவர் ஆட்சித் திறமையற்றவர். இவரால் சுகாட்லாந்து மக்களை அடக்க முடியவில்லை. [2][3] 1314 ஆம் ஆண்டு அந்நாட்டினர் பானக்பான் போரில் வெற்றி பெற்றுத் தம் விடுதலையைத் திரும்பிப் பெற்றனர். 1327 ஆம் ஆண்டு நாடாளுமன்றம், இவரை அரசப் பதவியிலிருந்து நீக்கி, இவர் மகன் எட்வர்டை அரசனாக்கிற்று. பிறகு தம் அரசியின், காதலன் மார்ட்டிமரால் கொலையுண்டார்.

மூன்றாம் எட்வர்டு தொகு

மூன்றாம் எட்வர்டு (Edward III of England) (1312–1377) என்பவர், இரண்டாம் எட்வர்டின் மகன் ஆவார். இவர் தனது 14வது வயதில், பிப்ரவரி முதலாம் நாள் அரசப்பதவி ஏற்றார்.[4] அவருக்குப் பின் இங்கிலாந்து நாட்டை ஆட்சிபுரிந்தவர். இவர் சுகாட்லாந்தின் மீது படையெடுத்துச் சென்றாலும், அந்நாட்டு மக்களின் விடுதலை உணர்ச்சியை இவரால் முற்றிலும் ஒடுக்க முடியவில்லை. இவர் பிரெஞ்சு முடியரசுக்கு உரிமைக் கொண்டாடி, ஐரோப்பிய வரலாற்றில் 'நூறாண்டுப் போர்' என வழங்கும் போரைத் தொடங்கினார். ஆங்கலேயர், கிரெசி (Cressey) என்னும் இடத்தில் பிரெஞ்சுக்காரரை வெற்றி அடைந்தனர். ஆயினும் நீடித்து நடந்த இப்போரினால், ஆங்கிலேயர் தளர்ச்சி அடைந்து, அந்த போரிலிருந்து விலகிக் கொண்டனர். அதனால் கைப்பற்றிய பல பகுதிகளையும், கைவிட்டனர். இம்மன்னர் தம் ஆட்சியின் பிற்பகுதியில், பல முறை தம் நாடாளுமன்றத்திடம் பிணங்கி, அதன் ஆதரவை இழந்தார்.

நான்காம் எட்வர்டு தொகு

(Edward IV of England) (1442–1483)

ஐந்தாம் எட்வர்டு தொகு

(Edward V of England) (1470–1483?)

ஆறாம் எட்வர்டு தொகு

(Edward VI of England) (1537–1553)

ஏழாம் எட்வர்டு தொகு

(Edward VII of the United Kingdom) (1841–1910)

எட்டாம் எட்வர்டு தொகு

(Edward VIII of the United Kingdom) (1894–1972)

மேற்கோள்கள் தொகு

  1. Burt 2013, ப. 75; Carpenter 1985; Lloyd 1986; Powicke 1947
  2. Tuck (1985), p. 52.
  3. John Maddicott (1970). Thomas of Lancaster, 1307–1322. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-821837-0. இணையக் கணினி நூலக மையம்:132766. https://archive.org/details/thomasoflancaste0000madd. 
  4. Mortimer (2006), p. 54. The later fate of Edward II has been a source of much scholarly debate. For a summary of the evidence, see: Mortimer (2006), pp. 405–10
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வர்டு&oldid=3259078" இலிருந்து மீள்விக்கப்பட்டது