எட்வின் அர்னால்டு

சர் எட்வின் அர்னால்டு (Sir Edwin Arnold) (10 சூன் 1832 – 24 மார்ச் 1904) ஆங்கிலக் கவிஞர், ஊடகவியலாளர் மற்றும் இதழாசியர் எனும் பன்முகங்கொண்ட இங்கிலாந்து நாட்டவர் ஆவார். கௌதம புத்தரின் வரலாற்றை ஆசியாவின் ஜோதி எனும் பெயரில் நூல் எழுதியமைக்காக உலக முழுவதும் அறியப்பட்டவர்.[1]

சர் எட்வின் அர்னால்டு
பிறப்பு(1832-06-10)10 சூன் 1832
கிரேவ்செண்ட், கெண்ட், இங்கிலாந்து
இறப்பு24 மார்ச்சு 1904(1904-03-24) (அகவை 71)
லண்டன், இங்கிலாந்து
தொழில்ஊடகவியலாளர், இதழாசிரியர், கவிஞர்
தேசியம்இங்கிலாந்து
கல்விஆக்சுபோர்டு பல்கலைக்கழகக் கல்லூரி
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஆசியாவின் ஜோதி
கையொப்பம்

வரலாறு தொகு

இங்கிலாந்து நாட்டு ஆங்கிலேயரான எட்வின் அர்னால்டு, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகக் கல்லூரியில் படித்தவர். பின்னர் 1856இல் இந்தியாவில் உள்ள புனே சமசுகிருத மொழிக் கல்லூரியின் முதல்வராக ஏழு ஆண்டுகள் பணி புரிந்தார்.

பின்னர் இங்கிலாந்து திரும்பிய எட்வின் அர்னால்டு, 1861இல் த டெயிலி டெலிகிராப் நாளிதழில் ஊடகவியலாளராகச் சேர்ந்து, அந்நாளிதழின் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று 40 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தார்.[2] கௌதம புத்தரின் வாழ்க்கை குறித்து இவர் எழுதிய உலகப் பெற்ற படைப்பான ஆசியாவின் ஜோதி அல்லது பெருந்துறவு எனும் கவிதை நூல், இந்தி மற்றும் பிற உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது.[3] இவரது ஆசியாவின் ஜோதி நூல் மூலம், மேற்கு உலக மக்கள் புத்தரின் தத்துவங்களை முதன் முதலாக அறிந்து கொள்ள முடிந்தது.

இந்நூலை தேசிக விநாயகம் பிள்ளை, தமிழில் ஆசிய ஜோதி எனும் பெயரில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார்.

பிற படைப்புகள் தொகு

 
சர் எட்வின் அர்னால்டுவின் கல்லறை, இலண்டன்
  • உலகின் ஜோதி (The Light of the World – 1891)
  • இந்தியக் கவிதைகளின் கவிதை (Indian Song of Songs -1875)
  • நம்பிக்கையின் முத்துக்கள் (Pearls of the Faith - 1883)
  • வானுலக கவிதை (The Song Celestial - 1885)
  • சடியுடன் தோட்டத்தில் (With Sadi in the Garden - (1888)
  • போத்திபாரின் மனைவி (Potiphar's Wife - 1892)
  • ஜப்பானியனின் மனைவி (The Japanese Wife - 1893)
  • இந்தியக் கவிதைகள் ("Indian Poetry" - 1904)

மொழிபெயர்ப்பு நூல்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Sir Edwin Arnold த நியூயார்க் டைம்ஸ், 25 March 1904
  2. Notices of 'The Light of Asia' www.phx-ult-lodge.org.
  3. The Oxford Companion to English Literature, 6th Edition. Edited by Margaret Drabble, Oxford University Press, 2000 Pp 42
  4. Arnold, Sir Edwin (2005). Bhagavad-Gita : or The song celestial : translated from the Sanskrit text. Stilwell, KS: Digireads.com Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1420926012 இம் மூலத்தில் இருந்து 2016-12-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161225135917/https://books.google.com/books/about/Bhagavad_Gita.html?id=WnSkmAEACAAJ. பார்த்த நாள்: 2016-11-11. 

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Edwin Arnold
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வின்_அர்னால்டு&oldid=3286436" இலிருந்து மீள்விக்கப்பட்டது