எம். கே. விஷ்ணு பிரசாத்

இந்திய அரசியல்வாதி

எம். கே. விஷ்ணு பிரசாத் (M. K. Vishnu Prasad) ஓர் இந்திய அரசியல்வாதியும், ஆரணி மக்களவைத் தொகுதியின், பதினேழாவது மக்களவை உறுப்பினரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பிரிவான தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் செயல்தலைவர்களில் ஒருவராக உள்ளார்.[1]

எம்.கே.விஷ்ணுபிரசாத்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
2019-தற்போது வரை
பிரதமர்நரேந்திர மோதி
தொகுதிஆரணி
தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
2006-2011
தொகுதிசெய்யார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 ஆகத்து 1972 (1972-08-07) (அகவை 51)
செய்யார், திருவண்ணாமலை மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இணையத்தளம்https://www.vishnuprasad.in
As of 26 மே, 2019

குடும்பம் தொகு

இவர் காங்கிரசின் முன்னாள் தலைவரான கிருஷ்ணசாமியின் மகன்.[2]

அரசியல் வாழ்க்கை தொகு

இவர் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், செய்யாறு தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், ஆரணி தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

மேற்கோள்கள் தொகு

  1. "Change in Tamilnadu Congress Leadership". The News Minute. 2 February 2019. https://www.thenewsminute.com/article/tn-congress-announces-change-leadership-ks-alagiri-appointed-president-96132. பார்த்த நாள்: 31 March 2019. 
  2. "அன்புமணியை தாக்கி பேசிய உறவினர் விஷ்ணுபிரசாத்". இந்து தமிழ் (பிப்ரவரி 21, 2019)
  3. "ஆரணியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி". மாலைமலர் (மே 23, 2019)
  4. "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்".பிபிசி தமிழ் (மே 23, 2019)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._கே._விஷ்ணு_பிரசாத்&oldid=3926548" இலிருந்து மீள்விக்கப்பட்டது