எரிநெய் (Fuel oil) என்பது பெட்ரோலியம் துளித்தெடுப்பு வழியாக ஒரு துளிப்பாகவோ (distillate) அடிவண்டலாகவோ (residue) பிரித்து எடுக்கப்படும் ஒரு பின்னக்கூறு ஆகும். பொதுவாக வெப்பத்தை உண்டாக்குவதற்குக் கொதிகலனிலோ, ஆற்றலை உண்டாக்க ஒரு எந்திரத்திலோ, உலையிலோ செலுத்தி எரிக்கப்படும் எந்த ஒரு பெட்ரோலியப் பொருளையும் எரிநெய் என்று சொல்லலாம். இந்த வரைமுறைப்படி டீசல் என்பதும் ஒரு எரிநெய்யே.

எரிநெய்யானது நீண்ட நீரியக்கரிமச் சங்கிலிகளால் ஆனது. குறிப்பாக, ஆல்க்கேன்கள், வட்ட ஆல்க்கேன்கள், அரோமாட்டிக் ஹைடிரோகார்பன்கள் இவற்றால் ஆனது. பொதுவாக எரிநெய் என்னும் பெயர் பலவிதப் பெட்ரோலியக் கூறுகளைக் குறிக்கப் பயன்பட்டாலும், உண்மையில் கன்னெய், நேப்தா முதலானவற்றைத் தாண்டிய கனமான எரிபொருட்களையே எரிநெய் என்பது குறிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிநெய்&oldid=2741795" இலிருந்து மீள்விக்கப்பட்டது