எர்க்குலிசின் பன்னிரு வேலைகள்

எர்க்குலிசின் பன்னிரு வேலைகள்[1][2][3] (The twelve labours of Hercules) என்பது கிரேக்க மற்றும் உரோமத் தொன்மவியலில் காணப்படும் கதாநாயகரான எர்க்குலிசிற்கு கொடுக்கப்பட்ட பன்னிரு பாரிய வேலைகளைக் குறிக்கும்.[4][5] இப்பன்னிரு வேலைகளும் யுரிசுதியசு எனும் கிரேக்க மன்னனால் எர்க்குலிசிற்கு வழங்கப்பட்டவையாகும். இவற்றைச் செய்து முடிக்க எர்க்குலிசிற்குப் பன்னிரு ஆண்டுகள் தேவைப்பட்டன. கி.மு. 600 ஆண்டளவில் பெய்சான்டர் (Peisander) எனும் கிரேக்கக் கவிஞரினால் இப்பன்னிரு வேலைகள் பற்றியதோர் கவிதைத் தொகுப்பொன்று எழுதப்பட்டது.[6]

எர்க்குலிசின் பன்னிரு வேலைகளையும் குறிக்கும் செதுக்கல்

பின்னணி தொகு

கிரேக்கத் தொன்மவியலில் கடவுள்களின் அதிபதியான சியுசு அல்கமீன் எனும் மானுடப் பெண்ணுடன் உறவு கொண்டார். இதன் விளைவாக எர்க்குலிசு பிறந்தார். சியுசு ஒரு மானுடப் பெண்ணுடன் உறவு கொண்டு குழந்தை ஒன்றைப் பெற்றமையை அறிந்து கோபம் கொண்ட எரா தெய்வம் (சியுசின் மனைவி) எர்க்குலிசு குழந்தயாக இருக்கும் போதே அவரைக் கொல்ல நினைத்தார். இதற்காக இரு கொடிய பாம்புகளை அனுப்பினார். எனினும் குழந்தையாக இருந்த எர்க்குலிசு தனது இரு வெற்றுக்கரங்களாலும் அப்பாம்புகளைக் கொன்றான். இதனால் எரா தெய்வத்தின் கோபம் மேலும் அதிகரித்தது. எர்க்குலிசு இளைஞனாகி திருமணம் செய்து ஆறு குழந்தைகளுக்குத் தந்தையான பின்னர் எரா தெய்வத்தின் சூழ்ச்சியினால் தனது மனைவியையும் ஆறு பிள்ளைகளையும் தன்னையறியாமலேயே கொன்றார். இப்பாவத்திற்கு விமோட்சனம் கிடைக்கும் பொருட்டு கிரேக்கத்தில் பைத்தியா (Pythia) என்னும் அப்பல்லோ கடவுளின் குறிசொல்பவர் இருந்த இடமான டெல்பிக்கு எர்க்குலிசு சென்றார். அங்கு பைத்தியாவிடம் பாவ விமோட்சனத்திற்காக யாது செய்யவேண்டுமென வினவினார். மகிசீனி இராச்சியத்தை ஆண்டு வரும் ஹேர்க்கியுலசின் மைத்துனனான யுரிசுதியசு மன்னனிடம் சென்று அவன் கூறும் பத்து பாரிய வேலைகளையும் நிறைவேற்றுமாறு பைத்தியா கூறினார். இதுவே எர்க்குலிசால் ஆற்றப்பட்ட பன்னிரு வேலைகளுக்குமான பின்னணியாகும்.

வேலைகள் தொகு

எர்க்குலிசால் ஆற்றப்பட்ட பன்னிரு வேலைகளும் கீழே ஒழுங்காகத் தரப்பட்டுள்ளன.

  1. நீமியன் சிங்கத்தைக் கொல்லல்.
  2. ஒன்பது தலைகளைக் கொண்ட லேர்னியன் ஐட்ராவை கொல்லல்.
  3. செரினியன் பெண் மானைப் பிடித்தல்.
  4. எரிமான்தியன் காட்டுப்பன்றியைப் பிடித்தல்.
  5. ஓகியன் தொழுவங்களை ஒரே நாளில் சுத்தம் செய்தல்.
  6. சிடிம்பலியன் பறவைகளைக் கொல்லல்.
  7. கிரேட்டன் காளையை அடக்குதல்
  8. டயொமிடீசின் பெண் குதிரைகளைத் திருடுதல்
  9. அமேசான்களின் அரசியான இப்பொலைடாவின் பட்டியைப் பெறுதல்.
  10. கேரியோன் அரக்கனின் மாடுகளைப் பெறுதல்.
  11. எசுபிரீடிசின் ஆப்பிள்களைத் திருடல்.
  12. செர்பெரசு எனும் மூன்று தலைகளை உடைய பாதாள நாயினைப் பிடித்து பூமிக்குக் கொண்டுவருதல்.

உண்மையிலேயே எர்குலிசிற்குப் பத்து வேலைகளே வழங்கப்பட்டன. அவற்றில் இரண்டாவது வேலையான ஒன்பது தலைகளைக் க்ண்ட லேர்னியன் ஐட்ராவை கொல்லல் மற்றும் ஐந்தாவது வேலையான ஓகியன் மாட்டுத்தொழுவங்களைச் சுத்தம் செய்தல் ஆகியவை கணக்கில் எடுக்கப்படவில்லை.[7] அயோலஸ் என்பரின் உதவியுடனேயே லேர்னியன் ஐட்ராவை கொன்றதால் அவ்வேலை கணக்கில் எடுக்கப்படவில்லை. ஓகியன் மாட்டுத்தொழுவங்களைச் சுத்தம் செய்ததன் மூலம் எர்குலிசிற்கு சன்மானங்கள் கிடைத்தமையால் அவ்வேலையும் கணக்கில் எடுக்கப்படவில்லை. இவை இரண்டிற்கும் பதிலாக மேலதிகமாக இரு வேலைகள் கொடுக்கப்பட்டன. அவையே ஹெஸ்பிரிடீஸின் அப்பிள்களைத் திருடல் மற்றும் செர்பெரஸ் எனும் பாதாள உலகைக் காவல் செய்யும் நாயினைப் பிடித்து பூமியிற்குக் கொண்டுவருதல் ஆகியவையாகும்.

முதலாம் வேலை:நீமியன் சிங்கம் தொகு

 
நீமியன் சிங்கத்துடன் சண்டையிடும் எர்குலிசு(பீட்டர் பவுல் ரூபென்ஸ் இனால் வரையப்பட்ட ஓவியம்)

நீமியா (Nemea) எனும் இடத்தில் பெரிய கொடிய சிங்கம் ஒன்று அந்நகரத்தில் வாழும் மக்களை அச்சுறுத்திவந்தது. இரும்பாயுதங்களோ வெண்கலத்தினாலான ஆயுதங்களே கூரிய கற்களோ அதன் தோலைத் துளைக்க முடியாது. நீமியன் சிங்கத்தைக் கொன்று அதன் தோலை எடுத்து வருதலை முதலாவது வேலையாக யுரிசுதியசு மன்னன் எர்குலிசிற்குக் கொடுத்தான். [8]

நீமியா நகரத்திற்குச் சென்ற எர்க்குலிசு அங்கு மொலொர்கோசு எனும் ஆடு மேய்க்கும் மனிதனின் குடிசையில் தங்கினான். மொலொர்கோசின் மகனையும் அச்சிங்கமே கொன்றது என்பதை எர்க்குலிசு அறிந்தான். ஹேர்க்கியூலசின் பெருமைகளை அறிந்த மொலொர்கோஸ் தன்னிடமிருந்த ஒரேயொரு செம்மறி ஆட்டுக்கடாவினை எர்க்குலிசிற்குக் கொடுக்கத் தீர்மானித்தான். எனினும் அதனை மறுத்த எர்க்குலிசு அவரிடம் முப்பது நாட்கள் காத்திருக்குமாறு கூறினான். முப்பது நாட்களில் நீமியன் சிங்கத்தைக் கொன்று நான் திரும்பி வந்துவிட்டால் செம்மறி ஆட்டுக்கடாவினை சீயசிற்குப் பலியிடுமாறும் திரும்பி வராவிடில் சியுசு தெய்வத்திற்கு இறந்த தன்னையே பலியிடுமாறும் எர்க்குலிசு பதிலளித்தான்.

ட்ரீடோஸ் மலையில் நீமியன் சிங்கம் நிற்பதைக் கண்டுகொண்ட எர்க்குலிசு அதனை தனது அம்புகளால் தாக்கத் தொடங்கினான். எனினும் தனது அம்புகள் அம்மிருகத்தை எதுவும் செய்யாது என்பதைப் புரிந்து கொண்ட எர்க்குலிசு தனது கடத்தின் மூலம் அதனைத் தாக்கினான். தாக்கப்பட்ட சிங்கம் தனது குகைக்குள் வேகமாக ஓடியது. அச்சிங்கம் வசித்து வந்த குகை இரு வாயில்களைக் கொண்டிருந்தது. எர்க்குலிசு அவற்றில் ஒன்றைப் பெரிய வலைகளால் அடைத்தான். மற்றொரு வாயில் மூலம் குகையினுள் சென்ற எர்க்குலிசு சிங்கத்துடன் சண்டையிட்டு அதனைக் கொன்றான். சண்டையின் போது அவனின் ஒரு விரலை சிங்கம் கடித்தது. சிங்கத்தின் தோலை உரித்து தனது முதுகில் தாங்கியபடி மொலொர்கோசிடம் எர்க்குலிசு திரும்பினான். பின்னர் அவர்கள் இருவரும் முன்கூறியபடி செம்மறியாட்டை சியுசு தெய்வத்திற்குப் பலியிட்டனர். பிறகு எர்க்குலிசு சிங்கத்தின் தோலுடன் மகிசீனி இராச்சியத்திற்குத் திரும்பினான். எர்க்குலிசைக் ககண்டு யுரிசுதியசு மன்னன் வியந்ததுடன் மட்டுமின்றி பயமும் அடைந்தான். தனக்கு எந்நேரத்திலும் எர்க்குலிசினால் ஆபத்து வரக்கூடும் என்று நினைத்த யுரிசுதியசு மன்னன் தனது பாதுகாப்புக் கருதி அவன் ஒளிந்து கொள்வதற்காக ஓர் பெரிய வெண்கலச் சாடியினைச் செய்து வைத்தான். பிறகு அவர் எர்க்குலிசிடம் இனி வரும் வேலைகளின் கடினத்தன்மை அதிகமாகிக் கொண்டே இருக்கும் என்றான்.

இரண்டாம் வேலை:லேர்னியன் ஐட்ரா தொகு

 
எர்க்குலிசும் லேர்னியன் ஐட்ராவும்

லேர்னா எனப்படும் ஏரியில் ஒன்பது தலைகளைக் கொண்ட ஐட்ரா ஒன்று வாழ்ந்து வந்தது. அதன் தலைகள் வெட்ட வெட்ட இரண்டு மடங்காக பெருகும் ஆற்றல் படைத்திருந்தன.[9] அதன் உடல் நாயைப் போன்று அமைந்திருந்தது.[10] அது வெளியிடும் மூச்சுக்காற்றும் நச்சுத்தன்மை வாய்ந்ததாகும். ஒன்பது தலைகளில் நடுவில் காணப்பட்ட தலை ஒருபோதும் அழியாத ஆற்றலைக் (Immortal) கொண்டிருந்தது. லேர்னியன் ஐட்ராவைக் கொல்வதே எர்க்குலிசிற்குக் கொடுக்கப்பட்ட இரண்டாவது வேலையாகும்.

தனது மருமகனான அயோலசுடன் இணைந்து தேரில் லேர்னா ஏரி இருந்த இடத்திற்கு எர்க்குலிசு சென்றான்.[11] அதீனா தெய்வத்தின் ஆலோசனைப்படி நெருப்பு அம்புகளால் ஐட்ராவின் எட்டுத்தலைகளையும் எர்க்குலிசு வீழ்த்தினான். இவ்வாறு எர்க்குலிசு ஐட்ராவுடன் மும்முரமாக சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொழுது எரா தெய்வம் அவனைக் கொல்வதற்காக கொடிய நண்டு ஒன்றை அனுப்பினாள். எனினும் தனது பலமான கால்களால் அந்நண்டின் ஓட்டை உடைத்து அதனை எர்க்குலிசு கொன்றான். பின்னர் அதீனா தெய்வம் வழங்கிய பொன் வாளால் ஐட்ராவின் அழியா சக்தி பெற்ற தலையை வெட்டினான். பின்னர் ஐட்ராவின் இரத்தத்தை தன்னுடைய சில அம்புகளின் முனையில் தோய்த்தெடுத்தான். எரா தெய்வம் எர்க்குலிசினால் கொல்லப்பட்ட ஐட்ரா மற்றும் நண்டு ஆக்ய இரண்டையும் வானில் இருவேறு விண்மீன் தொகுதிகளாக அமர்த்தினார்.[12][13]

இவ்வேலையை செய்து முடிப்பதற்கு எர்க்குலிசு அயோலசின் உதவியை நாடியதால் அது யுரிசுதியசு மன்னனால் கணக்கில் எடுக்கப்படவில்லை. இதற்குப் பதிலாக வேறொரு வேலை கொடுக்கப்பட்டது.

மூன்றாம் வேலை:செரினியன் பெண்மான் தொகு

நீமியன் சிங்கம் மற்றும் லேர்னியன் ஐட்ரா ஆகிய இரண்டிடமும் இருந்து எர்க்குலிசு தப்பித்து விட்டதால் யுரிசுதியசு மன்னனும் எரா தெய்வமும் கோபம் கொண்டனர். யுரிசுதியசு மன்னன் எர்க்குலிசிற்கு மூன்றாவது வேலையாக செரினியன் பெண்மானைப் உயிருடன் பிடிக்குமாறு உத்தரவிட்டான்.

இம்மானானது மிகவும் வேகமாக ஓடக்கூடியது. கிரேக்கத் தொன்மவியலில் காணப்படும் வேட்டைத் தெய்வமான ஆர்ட்டிமிசு சிறுபிள்ளையாக இருந்தபோது அனோரஸ் ஆற்றின் அருகில் ஐந்து பெண்மான்கள் புல் மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். அவை எருது போன்ற தோற்றத்தில் காணப்பட்டன. அவற்றின் கொம்புகள் தங்கத்தாலும் குளம்புகள் வெண்கலத்தினால் ஆனவையாகும். அவற்றில் நான்கைப் பிடித்து ஆர்ட்டிமிசு தனது தேரில் பூட்டினார். அவற்றில் ஐந்தாவது மானானது ஆர்ட்டிமிஸிடம் இருந்து தப்பித்து அர்காடியாவில் அமைந்துள்ள செரினியன் மலையில் வாழ்ந்து வந்தது. இம்மானை எர்க்குலிசிற்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு எரா தெய்வம் முன்னரே திட்டமிட்டிருந்தாள்.[14] இம்மானை வேட்டையாட சென்ற எவரும் உயிருடன் திரும்பியதில்லை.[15]

ஒரு வருடமாக எர்க்குலிசு இம்மானைத் துரத்தியும் அது அகப்படவில்லை. இறுதியில் ஆர்ட்டிமீசின் மலையில் அம்மான் சென்று தஞ்சம் அடைந்தது. எர்க்குலிசு அம்மானின் முன்கல்களை தனது அம்பொன்றினால் இரத்தம் வராதவாறு சுற்றி இணைத்துக்கட்டி தனது முதுகில் தூக்கி வைத்தபடி மகசீனி இராச்சியத்திற்குத் திரும்பினான்.[16]

அப்போது எர்க்குலிசை ஆர்ட்டிமிசு தெய்வம் வழிமறித்தார். அம்மானைப் பிடித்ததற்கு மன்னிப்புக் கேட்ட எர்க்குலிசு தனக்கு வைக்கப்பட்டிருக்கும் வேலைகள் பற்றிக்கூறி அம்மானை மீண்டும் திருப்பியளிப்பதாக எர்க்குலிசு கூறவே அவன் மீது இரக்கம் கொண்ட ஆர்ட்டிமிசு எர்க்குலிசு அம்மானை எடுத்துச் செல்ல அனுமதியளித்தாள்.[17]

நான்காம் வேலை:எரிமான்தியன் காட்டுப்பன்றி தொகு

யுரிசுதியசு மன்னன் எரிமான்தியக் காட்டுப்பன்றியை உயிருடன் பிடித்தலை எர்க்குலிசிற்கு நான்காவது வேலையாகக் கொடுத்தான்.[18] எரிமான்தசு எனும் மலையின் உச்சியில் வசித்து வந்ததாதில் இக்காட்டுப்பன்றி எரிமான்தியன் காட்டுப்பன்றி எனும் பெயரைப் பெற்றது. மிகவும் கொடூரமான இக்காட்டுப்பன்றி அங்கு வாந்து வந்த மக்கள் அனைவரையும் கொடுமைப்படுதியதுடன் அதன்வழியில் வருகின்ற அனைத்தையும் தனது தந்தங்களால் முட்டிமோதுவதை வழக்கமாககொண்டிருந்தது.

எரிமான்தசு மலைக்குச் (Mount Erymanthos) செல்லும் வழியில் எர்க்குலிசு தன் பழைய நண்பன் போலசு எனும் குதிரை மனிதனை சந்தித்தான்.[19] அவனுடன் இரவுணவை பகிர்ந்து கொண்ட எர்க்குலிசு போலசிடம் எரிமான்தியன் காட்டுப்பன்றியைத் தோற்கடிப்பது பற்றிய ஆலோசனைகளைக் கேட்டபோது, ஆழமான பனிக்குழியொன்றில் வீழ்த்துவதன் மூலம் இலகுவாக அப்பன்றியைப் பிடித்துவிடலாம் எனப் போலசு கூறினான்.[20] அன்றைய இரவு உணவினை உண்டு முடிந்ததும் எர்க்குலிசு போலஸிடம் குடிப்பதற்கு வைன் தருமாறு கேட்டான். ஓர் சாடியினுள் இருந்த அந்த வைன் டயோனைசசின் பரிசு என்றும் அது அனைத்துக் குதிரை மனிதர்களுக்கும் சொந்தமானது என்றும் அதனால் எர்க்குலிசிற்கு வைன் கொடுக்க முடியாது என்றும் போலசு மறுப்புத் தெரிவித்தான். இதனால் கோபங்கொண்ட எர்க்குலிசு வைன் சாடியினைத் திறந்தான்.[21] அப்போது வைனிலிருந்து வந்த மணத்தினை நுகர்ந்த அனைத்துக் குதிரை மனிதர்களும் அவ்விடத்திற்கு வந்தனர். சிலர் கோபம் கொண்டு எர்க்குலிசு மீது பாறைகளாலும் மரக்கிளைகளாலும் தாக்கினர். இதனால் கோபங்கொண்ட எர்க்குலிசு லேர்னியன் ஐட்ராவின் நஞ்சு தோய்க்கப்பட்ட அம்புகளால் அவர்களில் சிலரைக் கொன்றான். சிலரை பல மைல் தூரம் துரத்திச் சென்றான்.[22] இதற்கிடையில் ஓர் அம்பிலேயே தன்னைபோன்ற குதிரை மனிதர்கள் கொல்லப்பட்டதைக் கண்டு வியந்த போலசு அம்பு பட்டு இறந்த ஒரு குதிரை மனிதனின் உடலில் இருந்த அம்பை எடுத்துப் பார்த்தான். பார்க்கும் போது அவ்வம்பு போலசின் காலில் விழவே அவன் உயிரிழந்தான். குதிரை மனிதர்களைத் துரத்திய பின்னர் போலசிடம் திரும்பிய எர்க்குலிசு போலஸ் உயிரிழந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவனை நிலத்தில் புதைத்தான்.[23]

பின்னர் எர்க்குலிசு காட்டுப்பன்றியைத் தேடிச்சென்றான். அங்கு அப்பன்றியைக் கண்டுகொண்ட அவன் தன்னால் முடியுமான அளவு சத்தத்தை எழுப்பி அப்பன்றியை மிரள வைத்து மலை முழுவதும் துரத்தினான். அகப்படாத அப்பன்றி இறுதியில் புதர் ஒன்றினுள் நுழைந்து கொண்டது. அப்புதரினுள் தனது ஈட்டியை நுழைத்த எர்க்குலிசு இறுதியில் ஆழமான பனிக்குழி ஒன்றினுள் விழவைத்து வலையினால் அதனை உயிருடன் பிடித்துத் தூக்கிக்கொண்டு மகசீனி இராச்சியத்திற்குத் திரும்பினான்.

ஐந்தாம் வேலை:ஓகியன் தொழுவங்கள் தொகு

ஓகியன் தொழுவங்களைச் சுத்தம் செய்தலை யுரிசுதியசு எர்க்குலிசிற்கு ஐந்தாம் வேலையாகக் கொடுத்தான். ஓசியஸ் என்பவர் ஒரு காலத்தில் கிரேக்கத்திலேயே அதிகமான கால்நடைகளைக் கொண்டிருந்த அரசராகக் காணப்பட்டார்.[24] இவ்வேலையை ஒரு நாளிலேயே செய்து முடித்தல் வேண்டும் என்பது நியதியாகும்.[25] முப்பது வருடங்களாக சுத்தம் செய்யப்படாத இத்தொழுவங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகள், எருதுகள், குதிரைகள் மற்றும் வேறு சில கால்நடைகள் இருந்துவந்தன.[26]

ஓகியசு மன்னனிடம் வந்த எர்க்குலிசு யுரிசுதியசு கொடுத்த வேலை பற்றி மன்னனுக்கு எதுவும் கூறாது மன்னனின் தொழுவங்களை தான் ஒரே நாளிலேயே சுத்தம் செய்து தருவதாகவும் அதற்கு பரிசாக ஓசியஸ் மன்னனிடம் காணப்படும் மாடுகளில் மிகச்சிறந்த 10 மாடுகளைத் தரவேண்டும் எனவும் கூறவே மன்னனும் அதற்கு இணங்கினான்.[27] இதற்கு அமைவாக எர்க்குலிசு மாட்டு தொழுவம் இடத்திற்கு சென்று அங்குள்ள ஒரு பகுதி சுவரினை உடைத்து மிகப் பெரிய துவாரம் ஒன்றை உருவாக்கினான். பின்னர் அத்துவாரத்திற்கு நேர் எதிரே மற்றொரு துவாரம் ஒன்றையும் உருவாக்கினான். பின்னர் அத்துவாரங்களினை நீர் ஊடறுத்து செல்வதற்காக ஓர் பெரிய நீரோடுபாதையை செய்ததுடன் தொழுவத்திற்கு அண்மையிலுள்ள இரு ஆறுகளை இடைமறித்து அவற்றை தொழுவத்தின் பக்கம் திருப்பினான். ஆற்று நீர் அனைத்தும் தொழுவத்தினுள் சென்றது. அவ்வாறு சென்ற ஆற்று நீரானது அத்தொழுவத்தில் 30 வருடங்களுக்கு மேலாகவும் தேங்கி நின்ற எச்சங்கள் யாவற்றையும் சேர்த்துக் கொண்டு மறு முனையினில் அமைக்கப்பட்ட துவாரத்தினூடாக சென்றது. ஒரு சில நிமிடங்களிலேயே அத்தொழுவம் சுத்தமானது. [28]

ஆறாம் வேலை:சிடிம்பதீலியன் பறவைகள் தொகு

 
சிடிம்பதீலியன் பறவைகளும் எர்குலிசும்

எர்க்குலிசின் பன்னிரு வேலைகளில் ஆறாவதாக அவனுக்குக் கொடுக்கபட்ட வேலை மிகக் கொடிய பறவைகளான சிடிம்பதீலியன் பறவைகள் கொல்வது அல்லது விரட்டி அடிப்பதாகும். இப்பறவைகள் சிடிம்பத்தோலசு எனும் நகரினை அண்மித்து அமைந்திருக்கும் ஏரி ஒன்றில் அருகிலுள்ள மரங்களில் ஆயிரக்கணக்காக கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தன. இவை மனிதர்களையும் உண்ணக்கூடிய மிகவும் கொடிய பறவைகளாகக் கூறப்பட்டன. இவற்றின் அலகு வெண்கலத்தினாலும் இறகுகள் பலம் வாய்ந்த உலோகத்தினாலும் காணப்பட்டன.

பறவைகள் வசித்து வந்த ஏரிப்பகுதியை எர்க்குலிசு வந்தடைந்தான். எந்தவித திட்டங்களோ முன்னேற்பாடுகளோ இன்றி வந்த அவனுக்கு அதீனா தேவதை தக்க தருணத்தில் வந்து உதவி செய்தாள். எர்க்குலசிற்கு அவள் க்ரொடோலா எனப்படும் இரு பாரிய தட்டுக்களை வழங்கினாள். இவற்றை இருகைகள் மூலம் தட்டுவதனால் பாரிய ஓசையை எழுப்ப முடியும். இத்தட்டுகள் கிரேக்கத் தொன்மவியலில் ஆயுதக் கடவுளான எப்பீசுடசால் செய்யப்பட்டவையாகும். அருகில் உள்ள மலையினில் ஏறிய எர்க்குலிசு அவ்விரு பாரியதடுக்களையும் தட்டி மரத்தில் இருந்த பறவைகளை வெளிவரச் செய்தான். பின்னர் தன்னுடைய கடம் மற்றும் அம்புகளைக் கொண்டு அப்பறவைகளைத் தாக்கினான். அவனது தாக்குதலினை எதிர்கொள்ள முடியாத பறவைகள் சில அவ்விடத்தைவிட்டு பறந்து சென்றதுடன் பல்வேறு பறவைகள் இறந்தும் போயின.[29] [30]

ஏழாம் வேலை:கிரேட்டன் காளை தொகு

ஹேர்க்கியூலிசின் ஏழாவது வேலை கிரேட்டன் காளையைப் பிடித்து வர வேண்டும் என்பதாகும். ஹேர்கியூல்சு கிரேட் தீவிற்கு பயணம் செய்தார். அத்தீவின் அரசன் மினோசு கிரேட்டன் காளையை ஹேர்கியூல்சுக்கு அளித்தான்.

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Pseudo-Apollodorus, Bibliotheke 2.5.1-2.5.12.
  2. http://www.perseus.tufts.edu/Herakles/labors.html
  3. http://www.infoplease.com/ipa/A0882073.html
  4. (Pseudo-)Apollodorus (1921). "2.4.12" (in Greek). The Library. With an English Translation by Sir James George Frazer, F.B.A., F.R.S. in 2 Volumes. Cambridge, MA; London: Harvard University Press; William Heinemann Ltd.. http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.01.0021%3Atext%3DLibrary%3Abook%3D2%3Achapter%3D4%3Asection%3D12.  At the Perseus Project.
  5. Isocrates. "1.8" (in Greek). Isocrates. With an English Translation in three volumes, by George Norlin, Ph.D., LL.D.. Cambridge, MA; London: Harvard University Press; William Heinemann Ltd.. http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.01.0143%3Aspeech%3D1%3Asection%3D8.  At the Perseus Project.
  6. According to Walter Burkert.[சான்று தேவை]
  7. "Eurystheus demanded two more labors from the hero, since he did not count the hydra or the Augean stables as properly done". பார்க்கப்பட்ட நாள் 26 திசம்பர் 2015.
  8. Graves 1960, ப. 465
  9. "A monstrous serpent with nine heads, the hydra attacked with poisonous venom. Nor was this beast easy prey, for one of the nine heads was immortal and therefore indestructible". பார்க்கப்பட்ட நாள் 28 திசம்பர் 2015.
  10. Graves 1960, ப. 469
  11. Graves 1960, ப. 470
  12. Graves 1960, ப. 470 – 71
  13. Kerényi 1959, ப. 145
  14. Graves 1960, ப. 472
  15. Kerényi 1959, ப. 147
  16. Graves 1960, ப. 473
  17. Kerényi 1959, ப. 148
  18. "For the fourth labor, Eurystheus ordered Hercules to bring him the Erymanthian boar alive". பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2016.
  19. "Along the way Hercules decided to stop by and visit his friend Pholus, a friendly centaur". பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2016.
  20. "Hercules asked Pholus for advice on how to defeat and capture The Erymanthian Boar. Pholus told Hercules that he would be able to capture the boar if he chased him into the deep snow". பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2016.
  21. "When Hercules asked for wine, Pholus said that he was afraid to open the wine jar, because it belonged to all the centaurs in common. But Hercules said not to worry, and opened it himself". பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2016.
  22. "Soon afterwards, the rest of the centaurs smelled the wine and came to Pholus's cave. They were angry that someone was drinking all of their wine. The first two who dared to enter were armed with rocks and fir trees. Hercules grabbed burning sticks from the fireplace and threw them at the centaurs, then went after them with his club. He shot arrows at the rest of them and chased after them for about twenty miles. The rest of the centaurs fled in different directions". பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2016.
  23. "While Hercules was gone, Pholus pulled an arrow from the body of one of the dead centaurs. He wondered that so little a thing could kill such a big creature. Suddenly, the arrow slipped from his hand. It fell onto his foot and killed him on the spot. So when Hercules returned, he found Pholus dead. He buried his centaur friend". பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2016.
  24. "Now King Augeas owned more cattle than anyone in Greece". பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2016.
  25. "This time Eurystheus gave Hercules the labor of traveling to Augean and cleaning the king of Augean's stables in a single day". பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2016.
  26. "Although these particular stables housed thousands of cattle, sheep, goats, and horses and the stable had not been cleaned in 30 years". பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2016.
  27. "Hercules went to King Augeas, and without telling anything about Eurystheus, said that he would clean out the stables in one day, if Augeas would give him a tenth of his fine cattle". பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2016.
  28. ". Hercules brought Augeas's son along to watch. First the hero tore a big opening in the wall of the cattle-yard where the stables were. Then he made another opening in the wall on the opposite side of the yard. Next, he dug wide trenches to two rivers which flowed nearby. He turned the course of the rivers into the yard. The rivers rushed through the stables, flushing them out, and all the mess flowed out the hole in the wall on other side of the yard". பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  29. "Arriving at the lake, which was deep in the woods, Hercules had no idea how to drive the huge gathering of birds away. The goddess Athena came to his aid, providing a pair of bronze krotala, noisemaking clappers similar to castanets. These were no ordinary noisemakers. They had been made by an immortal craftsman, Hephaistos, the god of the forge". பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  30. "Climbing a nearby mountain, Hercules clashed the krotala loudly, scaring the birds out of the trees, then shot them with bow and arrow, or possibly with a slingshot, as they took flight". பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள் தொகு